சூப்பரான அம்சங்களுடன் புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஃபேஸ்லிஃப்ட் வெளியீடு!

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த எஸ்யூவியின் முக்கிய அம்சங்கள் குறித்த விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

 புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஃபேஸ்லிஃப்ட் வெளியீடு!

கடந்த ஆண்டு ஏப்ரலில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் இந்தியாவில் அமுலுக்கு வந்ததையடுத்து, ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி சந்தையில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த நிலையில், தற்போது அதிக சிறப்பம்சங்கள் மற்றும் பிஎஸ்-6 எஞ்சினுடன் மேம்படுத்தப்பட்ட மாடலாக மீண்டும் இந்திய சந்தைக்கு வர இருக்கிறது.

புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி 5 சீட்டர் மாடலாக வந்துள்ளது. புதிய க்ரில் அமைப்பு, இரண்டு அறைகளுடன் கூடிய எல்இடி மேட்ரிக்ஸ் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், புதிய டிசைனில் கொடுக்கப்பட்டு இருக்கும் 18 அங்குல அலாய் வீல்கள், சாம்பல் வண்ண ரூஃப் ரெயில்கள் ஆகியவை வசீகரத்தை கூட்டுகின்றன.

 புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஃபேஸ்லிஃப்ட் வெளியீடு!

எல்இடி டெயில் லைட்டுகளும், புதிய பம்பர், சுறாத் துடுப்பு ஆன்டெனா, ரியர் ஸ்பாய்லர் ஆகியவையும் முக்கிய அம்சங்களாக உள்ளன. இந்த எஸ்யூவியில் இரட்டை குழல்கள் போன்ற அமைப்பும் தோற்றத்தை வேற லெவலுக்கு மாற்றிக் காட்டுகிறது. இந்த மாடலில் புதிய நீல வண்ணத் தேர்வும் புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கிறது. இந்த புதிய வண்ணத் தேர்வு வாடிக்கையாளர்களை கவரும் என்று எதிர்பார்க்கலாம்.

புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவியில் 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கனெக்டெட் கார் தொழில்நுட்பம், 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவியில் 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஹில் டிசென்ட் அசிஸ்ட், டிரைவர் அலர்ட் சிஸ்டம், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன.

 புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஃபேஸ்லிஃப்ட் வெளியீடு!

புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவியில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 190 எச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் உள்ளது.

புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி பிரிமீயம் மிட்சைஸ் எஸ்யூவி மாடலாக நிலைநிறுத்தப்படும். ஹூண்டாய் டூஸான், ஜீப் காம்பஸ் உள்ளிட்ட மாடல்களுடன் போட்டி போடும். ரூ.26 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு இருக்கிறது.

Most Read Articles

English summary
Volkswagen has revealed Tiguan facelift in India and expected to launch mid of this year.
Story first published: Wednesday, March 31, 2021, 14:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X