முதல் எலக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராகும் ஃபோக்ஸ்வேகன்!! அறிமுகம் எப்போது இருக்கும்?

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் ஐடி.4 எலக்ட்ரிக் எஸ்யூவி காரை அடுத்த ஆண்டில் இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஃபோக்ஸ்வேகன் எலக்ட்ரிக் காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

முதல் எலக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராகும் ஃபோக்ஸ்வேகன்!! அறிமுகம் எப்போது இருக்கும்?

உலகளவில் ஃபோக்ஸ்வேகன் ஐடி.4 எலக்ட்ரிக் கார் கடந்த 2020ஆம் ஆண்டின் மத்தியில் வெளியிடப்பட்டது. அதன்பின் இப்போது வரையில் பல வெளிநாட்டு சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் இந்த எலக்ட்ரிக் காரை அடுத்த ஆண்டில் இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளதாம்.

முதல் எலக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராகும் ஃபோக்ஸ்வேகன்!! அறிமுகம் எப்போது இருக்கும்?

தயாரிப்பு நிறுவனத்தின் எம்இபி ப்ளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இரண்டாவது கார் மாடலான ஐடி.4 இந்தியாவில் முதல் ஃபோக்ஸ்வேகன் எலக்ட்ரிக் காராக அறிமுகமாகவுள்ளது. தோற்றத்தில் ஐடி.4 தற்சமயம் விற்பனையில் உள்ள டிகுவான் & டிகுவான் ஆல்ஸ்பேஸ் கார்களுக்கு மத்தியில் நிலைநிறுத்தப்படவுள்ளது.

முதல் எலக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராகும் ஃபோக்ஸ்வேகன்!! அறிமுகம் எப்போது இருக்கும்?

2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட ஐ.டி. க்ரோஸ் கான்செப்ட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு வருகின்ற ஐடி.4, எலக்ட்ரிக் கார்களுக்கான பிராண்டின் புதிய டிசைன் மொழியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முதல் எலக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராகும் ஃபோக்ஸ்வேகன்!! அறிமுகம் எப்போது இருக்கும்?

இந்த எலக்ட்ரிக் காரின் முன்பக்கத்தில் நேர்த்தியான தோற்றத்தில் எல்இடி ஹெட்லேம்ப்கள், காரின் அகலத்தில் எல்இடி பார், மூடப்பட்ட க்ரில் மற்றும் அகலமான, மைய ஏர் டேம் உள்ளிட்டவை பொருத்தப்படுகின்றன. பக்கவாட்டில் ஃப்ளஷ்-ஃபிட்டிங் கதவு ஹேண்டில்கள் பொருத்தப்படுகின்றன.

முதல் எலக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராகும் ஃபோக்ஸ்வேகன்!! அறிமுகம் எப்போது இருக்கும்?

இத்தகைய ஹேண்டில்கள் இழுவை குணகத்தை குறைப்பதினால், இந்த எலக்ட்ரிக் காரின் ரேஞ்ச் அதிகரிக்கிறது. முன்பக்கத்தை போன்று பின்பக்கத்திலும் எல்இடி டெயில்லைட்களை எல்இடி விளக்கு பார் ஒன்று இணைக்க, பின்பக்க பம்பரை ஃபாக்ஸ் சறுக்கு-பாதுகாப்பு தட்டு உடன் ஐடி.4 கார் பெற்றுள்ளது.

முதல் எலக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராகும் ஃபோக்ஸ்வேகன்!! அறிமுகம் எப்போது இருக்கும்?

இந்தியாவில் பின்பக்கம் பொருத்தப்பட்ட ஒத்திசைவு எலக்ட்ரிக் மோட்டார் உடன் பின்சக்கர ட்ரைவ் தேர்வில் மட்டும் தான் ஃபோக்ஸ்வேகன் ஐடி.4 எலக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எலக்ட்ரிக் மோட்டாரின் மூலம் அதிகப்பட்சமாக 204 பிஎஸ் மற்றும் 310 என்எம் டார்க் திறனை பெற முடியும்.

முதல் எலக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராகும் ஃபோக்ஸ்வேகன்!! அறிமுகம் எப்போது இருக்கும்?

0-வில் இருந்து 100kmph வேகத்தை இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி காரை வெறும் 8.5 வினாடிகளில் எட்ட வைக்கும் இந்த எலக்ட்ரிக் மோட்டார் அமைப்பில் பொருத்தப்படுகின்ற 77kWh பேட்டரி தொகுப்பை முழுவதுமாக சார்ஜ் செய்து கொண்டு அதிகப்பட்சமாக 520கிமீ தூரம் வரையில் பயணிக்க முடியும் என சோதனை முடிவுகள் கூறுகின்றன.

முதல் எலக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராகும் ஃபோக்ஸ்வேகன்!! அறிமுகம் எப்போது இருக்கும்?

இந்த பேட்டரியை 11 கிலோவாட்ஸ் ஏசி சார்ஜர் & 125 கிலோவாட்ஸ் டிசி விரைவு சார்ஜர் மூலம் சார்ஜ் செய்யலாம். இதில் டிசி விரைவு சார்ஜரை உபயோகித்தால் 320கிமீ தூர இயக்கத்திற்கு தேவையான சார்ஜரை 30 நிமிடங்களில் பெறலாம்.

Most Read Articles

English summary
Volkswagen to bring ID.4 electric SUV in India Next year.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X