இந்தியா வரும் அடுத்த ஃபோக்ஸ்வேகன் கார் எது?! ஒரே குழப்பத்தில் ரசிகர்கள்...

டைகுன் மாடலுக்கு முன்பாக ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அட்லஸ் க்ராஸ் என்ற பெயரில் புதிய காரை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியா வரும் அடுத்த ஃபோக்ஸ்வேகன் கார் எது?! ஒரே குழப்பத்தில் ரசிகர்கள்...

இந்த 2021ஆம் வருடம் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்திற்கு மகிழ்ச்சிகள் நிறைந்த சவாலான ஆண்டாக விளங்கவுள்ளது. ஏனெனில் ஸ்கோடா நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்திவரும் இந்தியா 2.0 திட்டத்தின் முதல் தயாரிப்பு கார் உள்பட பல கார் மாடல்கள் ஃபோக்ஸ்வேகன் பிராண்டில் இருந்து வெளிவரவுள்ளன.

இந்தியா வரும் அடுத்த ஃபோக்ஸ்வேகன் கார் எது?! ஒரே குழப்பத்தில் ரசிகர்கள்...

இந்த 2021ஆம் ஆண்டிற்கான ஃபோக்ஸ்வேகன் கார்களில் ஒன்றாக டைகுன் நடுத்தர-அளவு எஸ்யூவி கார் அறிமுகமாகவுள்ளது. எம்க்யூபி ஏ0 இன் ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் வெளிவரும் இந்த எஸ்யூவி கார் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்தியா வரும் அடுத்த ஃபோக்ஸ்வேகன் கார் எது?! ஒரே குழப்பத்தில் ரசிகர்கள்...

மேலும் இந்திய சந்தைக்கென பிரத்யேகமாக டைகுன் நடுத்தர-அளவு எஸ்யூவி காரை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த நிலையில் ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தின் முதன்மை அதிகாரி அஷிஷ் குப்தா வெளியிட்டுள்ள டீசர் படத்தில் நமக்கு தெரிந்த மூன்று கார் மாடல்களுடன் நான்காவதாக எஸ்யூவி கார் ஒன்று காட்சியளிக்கிறது.

இந்தியா வரும் அடுத்த ஃபோக்ஸ்வேகன் கார் எது?! ஒரே குழப்பத்தில் ரசிகர்கள்...

இந்த டீசர் படத்தில் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் காட்சிதரும் இந்த புதிய ஃபோக்ஸ்வேகன் எஸ்யூவி காரின் அறிமுகம் டைகுனின் அறிமுகத்திற்கு முன்னதாக வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் இருக்கலாம். மேலும் இந்த காரின் தோற்றம் ஷூட்டிங் ப்ரேக் மற்றும் ஸ்டேஷன் வேகன் ஸ்டைல்களை கலந்தாற்போல் இருக்கலாம்.

இந்தியா வரும் அடுத்த ஃபோக்ஸ்வேகன் கார் எது?! ஒரே குழப்பத்தில் ரசிகர்கள்...

அல்லது க்ரோஸ்ஓவர் போன்ற கூபே ரக காராக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த புதிய ஃபோக்ஸ்வேகன் காரின் முன்பக்கம் சற்று அகலானதாக வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தற்சமயம் டி-ராக் மற்றும் டிகுவான் ஆல்ஸ்பேஸ் கார்களை எஸ்யூவி மாடல்களாக கொண்டுள்ளது.

இந்தியா வரும் அடுத்த ஃபோக்ஸ்வேகன் கார் எது?! ஒரே குழப்பத்தில் ரசிகர்கள்...

இவற்றுடன் பஸாத் ஜிடிஇ ஹைப்ரீட் எஸ்டேட் காரும் அந்த நான்காவது மாடலாக விரைவில் இணைய வாய்ப்புள்ளது. பஸாத் கார்கள் ஒன்றும் இந்திய சந்தைக்கு புதியது கிடையாது. இது மீண்டும் செடான் உடற் அமைப்பிற்கு மாற்றாக ஸ்டேஷன் வேகன் தோற்றத்தில் இந்தியாவிற்கு கொண்டுவரப்படலாம்.

இந்தியா வரும் அடுத்த ஃபோக்ஸ்வேகன் கார் எது?! ஒரே குழப்பத்தில் ரசிகர்கள்...

பஸாத் ஜிடிஇ ஹைப்ரீட் காரில் 1.4 லிட்டர் பெட்ரோல் டர்போ என்ஜின் 13kWh பேட்டரி தொகுப்புடன் வழங்கப்படுகிறது. இந்த ஹைப்ரீட் என்ஜின் அமைப்பின் மூலமாக 218 பிஎஸ் பவரை பெற முடியும். மேலும், வெறும் பேட்டரியின் ஆற்றலில் காரை 55கிமீ தூரத்திற்கு இயக்கி செல்ல முடியும்.

இந்தியா வரும் அடுத்த ஃபோக்ஸ்வேகன் கார் எது?! ஒரே குழப்பத்தில் ரசிகர்கள்...

85 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டாரில் பொருத்தப்படுகின்ற இந்த பேட்டரி தொகுப்பை 3.6 கிலோவாட்ஸ் ஆன்-போர்டு சார்ஜர் உடன் முழு சார்ஜ் ஏற்ற கிட்டத்தட்ட 4 மணிநேரங்கள் தேவைப்படும். அர்டியோன், மறைக்கப்பட்டு நிலையில் டீசரில் காட்சியளித்த காராக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படும் மற்றொரு ஃபோக்ஸ்வேகன் காராகும்.

இந்தியா வரும் அடுத்த ஃபோக்ஸ்வேகன் கார் எது?! ஒரே குழப்பத்தில் ரசிகர்கள்...

இவை எல்லாத்தையும் விட வெளிநாட்டு சந்தைகளில் ஃபோக்ஸ்வேகன் பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்படும் அட்லஸ் ஸ்போர்ட் கார் அந்த நான்காவது மாடல் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்தியா வரும் அடுத்த ஃபோக்ஸ்வேகன் கார் எது?! ஒரே குழப்பத்தில் ரசிகர்கள்...

அட்லஸ் ஸ்போர்ட், சீனாவில் டெராமோண்ட் என்ற பெயரில் விற்பனையில் உள்ள அட்லஸின் மேம்படுத்தப்பட்ட வெர்சனாகும். இந்த இரு அட்லஸ் கார்களுக்கு இடையே வீல்பேஸ் ஒரே நீளத்தில்தான் உள்ளது. ஆனால் அகலம் 71மிமீ குறைவாகவும், க்ரவுண்ட் க்ளியரென்ஸ் 58மிமீ தாழ்வாகவும் உள்ளது.

இந்தியா வரும் அடுத்த ஃபோக்ஸ்வேகன் கார் எது?! ஒரே குழப்பத்தில் ரசிகர்கள்...

அட்லஸ் க்ராஸ் ஸ்போர்ட் கூபே கார் நேர்த்தியான புதிய டெயில்லேம்ப்கள், பின்பக்க பம்பர் மற்றும் க்ரோம் தொடுதல்களை சுற்றிலும் கொண்டுள்ளது. சர்வதேச சந்தையில் இதில் வழங்கப்படுகின்ற 3.6 லிட்டர் வி6 என்ஜின் அதிகப்பட்சமாக 276 எச்பி பவரையும், 2.0 லிட்டர் 4-சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் 236 எச்பி பவரையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

Most Read Articles

English summary
Volkswagen To Launch A New Car Before Taigun In India, Atlas Cross
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X