பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Volkswagen Tiguan அறிமுக தேதி வெளியீடு! டிசம்பர்ல தரமான சம்பவம் இருக்கு!

இந்திய கார் பிரியர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் ஃபோக்ஸ்வேகன் டிகுவன் கார் எப்போது அறிமுகமாகும் என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. வெளியீடு மற்றும் கார் பற்றிய முக்கிய விவரத்தையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

 பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Volkswagen Tiguan அறிமுக தேதி வெளியீடு! Compass, Tucson கார்களுக்கு செம்ம போட்டி காத்திருக்கு!

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட டிகுவன் எஸ்யூவி கார் மாடல் இந்தியாவில் எப்போது அறிமுகமாக இருக்கின்றது என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இந்தியர்கள் மத்தியில் இந்த கார் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் காரின் அறிமுகம் பற்றிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

 பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Volkswagen Tiguan அறிமுக தேதி வெளியீடு! Compass, Tucson கார்களுக்கு செம்ம போட்டி காத்திருக்கு!

வரும் டிசம்பர் 7ம் தேதி அன்றே புதுப்பித்தலைப் பெற்ற டிகுவன் கார் மாடலை நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கின்றது. போக்ஸ்வேகன் நிறுவனம் டிகுவன் எஸ்யூவி-யை 2.0 மூலோபயத்தின் கீழ் புதுப்பித்திருக்கின்றது. இது ஓர் ஐந்து இருக்கைகள் கொண்ட எஸ்யூவி கார் மாடலாகும்.

 பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Volkswagen Tiguan அறிமுக தேதி வெளியீடு! Compass, Tucson கார்களுக்கு செம்ம போட்டி காத்திருக்கு!

இப்புதுப்பிக்கப்பட்ட டிகுவான் எஸ்யூவி கடந்த 2020 ஆண்டில்தான் முதல் முறையாக உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, இப்போதே இக்காரை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான முயற்சியில் ஃபோக்ஸ்வேகன் களமிறங்கியிருக்கின்றது. விற்பனைக்கான அறிமுகத்தை முன்னிட்டு ஏற்கனவே இந்திய விற்பனையாளர்களின் ஷோரூம்களுக்கு வர தொடங்கிவிட்டது.

 பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Volkswagen Tiguan அறிமுக தேதி வெளியீடு! Compass, Tucson கார்களுக்கு செம்ம போட்டி காத்திருக்கு!

புதுப்பித்தலின் அடிப்படையில் பன்முக பிரீமியம் அம்சங்கள் டிகுவன் எஸ்யூவியில் வழங்கப்பட்டுள்ளன. இதேபோல், முந்தைய மாடலைக் காட்டிலும் அதிக கவர்ச்சியான காராக காண்பிக்கும் வகையிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

 பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Volkswagen Tiguan அறிமுக தேதி வெளியீடு! Compass, Tucson கார்களுக்கு செம்ம போட்டி காத்திருக்கு!

மாற்றியமைக்கப்பட்ட முகப்பு பகுதி க்ரில் (குரோம் அலங்காரத்துடன்), எல்இடி மேட்ரிக்ஸ் ரக ஹெட்லைட் மற்றும் எல்இடி பகல்நேர மின் விளக்கு, எல்இடி பகல்நேர மின் விளக்கு, அப்டேட் செய்யப்பட்ட பம்பர் என பன்முக அம்சங்கள் புதுப்பிக்கப்பட்ட டிகுவன் காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

 பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Volkswagen Tiguan அறிமுக தேதி வெளியீடு! Compass, Tucson கார்களுக்கு செம்ம போட்டி காத்திருக்கு!

இந்த அம்சங்களின் அலங்காரத்தால் முந்தைய மாடலைக் காட்டிலும் புதிய டிகுவன் அதிக கவர்ச்சியான மற்றும் ஸ்டைலிஷானதாக காட்சியளிக்கின்றது. தொடர்ந்து, இந்த காரின் கவர்ச்சியை கூடுதலாக காட்டும் வகையில் ஸ்போர்ட்டியான தோற்றம் கொண்ட அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.

 பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Volkswagen Tiguan அறிமுக தேதி வெளியீடு! Compass, Tucson கார்களுக்கு செம்ம போட்டி காத்திருக்கு!

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அப்டேட் செய்யப்பட்ட டிகுவன் எஸ்யூவி காரை சவாலான விலையில் விற்பனைக்குக் கொண்டு வருவதற்காக உள்நாட்டிலேயே வைத்து அசெம்பிள் செய்து வருகின்றது. ஆகையால், இதன் போட்டியாளர்களுக்கு மிகவும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Volkswagen Tiguan அறிமுக தேதி வெளியீடு! Compass, Tucson கார்களுக்கு செம்ம போட்டி காத்திருக்கு!

அப்டேட் செய்யப்பட் டிகுவன் எஸ்யூவி இந்தியாவில் ஜீப் காம்பஸ், ஹூண்டாய் டக்சன் மற்றும் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் ஆகிய கார் மாடல்களுக்கு கடும் போட்டியை வழங்கும் வகையில் விரைவில் விற்பனைக்கு வர இருக்கின்றது. ஃபோக்ஸ்வேகன் டிகுவன் எஸ்யூவி காரில் 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டர்போசார்ஜட் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

 பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Volkswagen Tiguan அறிமுக தேதி வெளியீடு! Compass, Tucson கார்களுக்கு செம்ம போட்டி காத்திருக்கு!

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 187 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. 7 ஸ்பீடு டிஎஸ்ஜி தானியங்கி டிரான்ஸ்மிஷன் வழக்கமான அம்சமாக இக்காரில் வழங்கப்படுகின்றது. இத்துடன், 4மோஷன் அனைத்து வீல் இயங்கும் வசதியும் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது.

Most Read Articles

English summary
Volkswagen to launch facelift tiguan in india on december 7
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X