உதிரி பாகங்களுக்கு வாழ்நாள் வாரண்டி! துணிச்சலான அறிவிப்பு வெளியிட்ட பிரபல நிறுவனம்! போட்டி நிறுவனங்கள் கலக்கம்

பிரபல கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று அதன் பாகங்களுக்கு லைஃப்டைம் (வாழ்நாள்) வாரண்டியை வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவிலேயே ஓர் கார் உற்பத்தி நிறுவனம் இத்தகைய சலுகையை அறிவிப்பது இதுவே முதல் முறையாகும். இதுகுறித்த முக்கிய விபரத்தைக் கீழே காணலாம், வாங்க.

உதிரி பாகங்களுக்கு லைஃப்டைம் வாரண்டி... துணிச்சலான அறிவிப்பு வெளியிட்ட பிரபல நிறுவனம்! போட்டி நிறுவனங்கள் கலக்கம்!

பிரபல சொகுசு வாகன உற்பத்தி நிறுவனமான வால்வோ (Volvo Car India), இந்திய வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் சிறப்பு திட்டம் ஒன்றை நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. தனது நிறுவனத்தின் ஜென்யூன் (Genuine) வாகன உதிரிபாகங்களுக்கு லைஃப்டைம் (வாழ்நாள்) வாரண்டியை வழங்க இருப்பதாக அது அறிவித்திருக்கின்றது.

உதிரி பாகங்களுக்கு லைஃப்டைம் வாரண்டி... துணிச்சலான அறிவிப்பு வெளியிட்ட பிரபல நிறுவனம்! போட்டி நிறுவனங்கள் கலக்கம்!

இதன் வாயிலாக வாடிக்கையாளர்கள் எந்தவொரு கட்டணமும் இன்றி சர்வீஸ் செய்து கொள்ள முடியும். இந்தியாவிலேயே இத்தகைய தரமான அறிவிப்பை ஓர் வாகன உற்பத்தி நிறுவனம் வெளியிடுவது இதுவே முதல் முறையாகும்.

உதிரி பாகங்களுக்கு லைஃப்டைம் வாரண்டி... துணிச்சலான அறிவிப்பு வெளியிட்ட பிரபல நிறுவனம்! போட்டி நிறுவனங்கள் கலக்கம்!

வழக்கமான வாரண்டியில் வாங்கப்படும் உதிரிபாகங்களை அங்கீகரிக்கப்பட்ட ஒர்க்ஷாப்களின் வாயிலாக பொருத்தும் வாடிக்கையாளர்களுக்கே இந்த சலுகை பொருந்தும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. வால்வோ நிறுவனத்தின் இந்த அறிவிப்பு அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

உதிரி பாகங்களுக்கு லைஃப்டைம் வாரண்டி... துணிச்சலான அறிவிப்பு வெளியிட்ட பிரபல நிறுவனம்! போட்டி நிறுவனங்கள் கலக்கம்!

பாகம் வாங்கிய நாள் முதலே இந்த சலுகை தொடங்கிவிடும். ஆனால், பாகத்தைப் பொருத்திய வாகனத்தின் உரிமம் மாற்றப்பட்டிருக்கக் கூடாது என்பது மிக முக்கியமான விதியாகும். ஒரு வேலை வேறு ஒரு நபரின் பெயருக்கு வாகனம் மாற்றப்பட்டிருந்தால் சலுகை பொருந்தாது என நிறுவனம் தெரிவித்துள்ளது.

உதிரி பாகங்களுக்கு லைஃப்டைம் வாரண்டி... துணிச்சலான அறிவிப்பு வெளியிட்ட பிரபல நிறுவனம்! போட்டி நிறுவனங்கள் கலக்கம்!

இந்த திட்டத்தின்கீழ், பாகம் மற்றும் ஊழியர்களுக்கான கட்டணம் பெறப்படாது என்பது குறிப்பிடத்தகுந்தது. தற்போது விற்பனையில் இருக்கும் அனைத்து வால்வோ கார்களுக்கும் இத்திட்டம் பொருந்தும். மேலும், விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் எஸ்90 மற்றும் எக்ஸ்சி60 ஆகிய பெட்ரோல் மைல்டு-ஹைபிரிட் கார்களுக்கும் இந்த சலுகை பொருந்தும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

உதிரி பாகங்களுக்கு லைஃப்டைம் வாரண்டி... துணிச்சலான அறிவிப்பு வெளியிட்ட பிரபல நிறுவனம்! போட்டி நிறுவனங்கள் கலக்கம்!

அக்டோபர் 19 இல் இவ்விரு கார்களின் அறிமுகம் அரங்கேற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தன் நிறுவனத்தின் தயாரிப்புகளின் மீதிருக்கும் அதிக நம்பிக்கையை அடுத்து இந்த தரமான அறிவிப்பை இந்தியாவில் வால்வோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. குறிப்பாக, தங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகள் மீது அதிக நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் வாழ்நாள் வாரண்டி திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கின்றது.

உதிரி பாகங்களுக்கு லைஃப்டைம் வாரண்டி... துணிச்சலான அறிவிப்பு வெளியிட்ட பிரபல நிறுவனம்! போட்டி நிறுவனங்கள் கலக்கம்!

அதேவேலையில், குறிப்பிட்ட சில பாகங்களுக்கு இந்த திட்டம் பொருந்தாது என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. வழக்கமான உடல் பேனல்கள், நுகர்பொருட்கள், பேட்டரிகள், அக்சஸெரீஸ்கள் மற்றும் மென்பொருள் ஆகியவற்றிற்கு இந்த திட்டம் பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

உதிரி பாகங்களுக்கு லைஃப்டைம் வாரண்டி... துணிச்சலான அறிவிப்பு வெளியிட்ட பிரபல நிறுவனம்! போட்டி நிறுவனங்கள் கலக்கம்!

தொடர்ந்து, புதிய காருக்கான வாரண்டியின் கீழ் மாற்றப்பட்ட அல்லது கூட்டப்பட்ட வாரண்டியின் கீழ் மாற்றப்பட்ட அல்லது கூட்வில் வாரண்டியின் கீழ் பாகங்களுக்கும் லைஃப்டைம் வாரண்டி திட்டம் பொருந்தாது என நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆகையால், முறையான கட்டணத்தைச் செலுத்தி உரிய விற்பனையாளரிடம் இருந்து பெறும் குறிப்பிட்ட பாகங்களுக்கு மட்டுமே வாழ்நாள் வாரண்டி வழங்கப்படும் என்பது தெரிய வருக்கின்றது.

உதிரி பாகங்களுக்கு லைஃப்டைம் வாரண்டி... துணிச்சலான அறிவிப்பு வெளியிட்ட பிரபல நிறுவனம்! போட்டி நிறுவனங்கள் கலக்கம்!

இதுமாதிரியான சிறப்பு திட்டம் மட்டுமின்றி புதிய தயாரிப்புகளின் வாயிலாகவும் இந்தியர்களை கவரும் முயற்சியில் வால்வோ களமிறங்கியிருக்கின்றது. அந்தவகையில் நிறுவனம் மிக விரைவில் புதுப்பிக்கப்பட்ட வால்வோ எக்ஸ்சி 60 காரை களமிறக்க இருக்கின்றது. இதுகுறித்த டீசர் வீடியோவை நிறுவனம் அண்மையில் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தகுந்தது.

உதிரி பாகங்களுக்கு லைஃப்டைம் வாரண்டி... துணிச்சலான அறிவிப்பு வெளியிட்ட பிரபல நிறுவனம்! போட்டி நிறுவனங்கள் கலக்கம்!

அளவில் பெரியதாகவும், சிறந்த எரிபொருள் சிக்கன வசதியுடனும் புதிய வால்வோ எக்ஸ்சி 60 உருவாகியுள்ளது. இத்துடன் பல்வேறு மாடர்ன் தொழில்நுட்ப வசதிகளும் சேர்க்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இணைப்பு வசதி, நேவிகேஷன் மற்றும் பல முக்கிய அம்சங்கள் இந்த காரில் எதிர்பார்க்கப்படுகின்றன.

உதிரி பாகங்களுக்கு லைஃப்டைம் வாரண்டி... துணிச்சலான அறிவிப்பு வெளியிட்ட பிரபல நிறுவனம்! போட்டி நிறுவனங்கள் கலக்கம்!

இத்துடன், கூகுள் செயலிகள் மற்றும் சேவைகள் உடன் ஒருங்கிணைக்கப்பட்ட ஆண்ட்ராய்டு மூலமாக செயல்படக்கூடிய இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வால்வோ காரில் வழங்கப்பட இருக்கின்றது. இதில் சிறப்பு வசதியாக செயற்கை நுண்ணறிவு வசதியும் இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் இடம் பெறும். இதன் வாயிலாக பல்வேறு வசதிகளை குரல் கட்டளையின் வாயிலாக பயனர்களால் பெற முடியும்.

Most Read Articles

மேலும்... #வால்வோ #volvo
English summary
Volvo announced lifetime warranty on original parts
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X