2021 வால்வோ எஸ்90 & எக்ஸ்சி60 மைல்ட் ஹைப்ரீட் கார்கள் இந்தியாவில் அறிமுகம்!! அறிமுக விலை ரூ.61.90 லட்சம்

2021 வால்வோ எஸ்90 & எக்ஸ்சி60 என்கிற புதிய மைல்ட் ஹைப்ரீட் கார்கள் சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த புதிய வால்வோ மைல்ட் ஹைப்ரீட் கார்கள் குறித்த விரிவான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

2021 வால்வோ எஸ்90 & எக்ஸ்சி60 மைல்ட் ஹைப்ரீட் கார்கள் இந்தியாவில் அறிமுகம்!! அறிமுக விலை ரூ.61.90 லட்சம்

புதிய அவதாரம் எடுத்திருக்கும் 2021 வால்வோ எஸ்90 மற்றும் எக்ஸ்சி60 கார்கள் வெளிப்புற தோற்றத்தில் அப்டேட்களுடன், சில புதிய வசதிகளை கூடுதலாக பெற்று வந்துள்ளன. காரின் வெளிப்புறத்தில் முன்பக்கத்தில் ரீடிசைனிலான பம்பர் உடன் க்ரில் அமைப்பு திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

2021 வால்வோ எஸ்90 & எக்ஸ்சி60 மைல்ட் ஹைப்ரீட் கார்கள் இந்தியாவில் அறிமுகம்!! அறிமுக விலை ரூ.61.90 லட்சம்

அதேபோல் அலாய் சக்கரங்களின் டிசைனும் இம்முறை புதியதாக கொண்டுவரப்பட்டுள்ளது. உட்புற கேபினில் வழங்கப்பட்டுள்ள அப்டேட்களின்படி, டேஸ்போர்டில் கொடுக்கப்படும் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டமானது வால்வோ எக்ஸ்சி60 மைல்ட் ஹைப்ரீட் காரில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

2021 வால்வோ எஸ்90 & எக்ஸ்சி60 மைல்ட் ஹைப்ரீட் கார்கள் இந்தியாவில் அறிமுகம்!! அறிமுக விலை ரூ.61.90 லட்சம்

மேலும் ADAS (அதிநவீன ஓட்டுனர் உதவி அமைப்புகள்)-ஆல் புதிய வால்வோ எஸ்சி60-இல் ஓட்டுனர் உதவி அம்சங்களிலும், பாதுகாப்பு தொழிற்நுட்பங்களிலும் எந்தவித குறையும் இல்லை. 2021 எஸ்90 மைல்ட் ஹைப்ரீட் காரிலும் புதிய அலாய் சக்கரங்கள், மறுவேலை செய்யப்பட்ட ஹெட்லேம்ப் க்ளஸ்ட்டர் & பம்பர்கள் மற்றும் புதிய க்ரோம் பார் என குறிப்பிடத்தக்க காஸ்மெட்டிக் அப்டேட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

2021 வால்வோ எஸ்90 & எக்ஸ்சி60 மைல்ட் ஹைப்ரீட் கார்கள் இந்தியாவில் அறிமுகம்!! அறிமுக விலை ரூ.61.90 லட்சம்

இவற்றுடன் வாத்தின் வால் போன்றதான பின்பக்க ஸ்பாய்லர், மறைவாக எக்ஸாஸ்ட் குழாய்கள், காரின் உடல் நிறத்திலேயே உள்ளீடுகள் என இம்முறை இந்த வால்வோ செடான் புதிய அடையாளங்களை ஏற்று வந்துள்ளது. ரேடார் சார்ந்த இணைப்பு தொழிற்நுட்பங்களுடன் எஸ்90 மைல்ட்-ஹைப்ரீட் காரின் உட்புறத்தில் அதிநவீன தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.

2021 வால்வோ எஸ்90 & எக்ஸ்சி60 மைல்ட் ஹைப்ரீட் கார்கள் இந்தியாவில் அறிமுகம்!! அறிமுக விலை ரூ.61.90 லட்சம்

வால்வோ நிறுவனம் இந்தியாவில் எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தவுள்ள ஹைப்ரீட் கார்களின் துவக்கமாக வெளிவந்துள்ள இந்த பெட்ரோல்-ஹைப்ரீட் எஸ்90 மற்றும் எக்ஸ்சி60 காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஒரே மாதிரியாக ரூ.61.90 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மைல்ட்-ஹைப்ரீட் தொழிற்நுட்பம் சிறந்த மைலேஜையும், மேம்பட்ட டிரைவிங் அனுபவத்தையும் கார் வழங்க உதவியாக இருக்கும் என்கிறது, இந்த ஸ்வீடன் நாட்டை சேர்ந்த லக்சரி கார் தயாரிப்பு நிறுவனம்.

2021 வால்வோ எஸ்90 & எக்ஸ்சி60 மைல்ட் ஹைப்ரீட் கார்கள் இந்தியாவில் அறிமுகம்!! அறிமுக விலை ரூ.61.90 லட்சம்

இந்த தொழிற்நுட்பமானது வீணாகும் ப்ரேக் ஆற்றலை திரும்ப பெற்று அதன் மூலம் காரில் பொருத்தப்பட்டுள்ள 48 வோல்ட் பேட்டரி தொகுப்பை சார்ஜ் ஏற்றும். அதுமட்டுமில்லாமல், கார் குறைந்த மாசை வெளியிடுவதிலும் மைல்ட்-ஹைப்ரீட் தொழிற்நுட்பம் முக்கிய பங்காற்றுகிறது. வால்வோ எஸ்90 செடானில் 2.0 லிட்டர் 4-சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் எலக்ட்ரிக் மோட்டார் உடன் பொருத்தப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் அதிகப்பட்சமாக 250 எச்பி மற்றும் 350 என்எம் டார்க் திறனை பெற முடியும்.

2021 வால்வோ எஸ்90 & எக்ஸ்சி60 மைல்ட் ஹைப்ரீட் கார்கள் இந்தியாவில் அறிமுகம்!! அறிமுக விலை ரூ.61.90 லட்சம்

2021 வால்வோ எக்ஸ்சி60 எஸ்யூவி காரினை கிரிஸ்டல் வெள்ளை பேர்ல், ஓஸ்மியம் க்ரே, ஓனிக்ஸ் கருப்பு, டெனிம் நீலம், பைன் க்ரே மற்றும் அடர் சிவப்பு என்கிற 6 விதமான நிறத்தேர்வுகளில் வாங்கலாம். உட்புற கேபினில் இசை, நாவிகேஷன், ஏசி அமைப்புகள் & வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ உள்ள கூகுள் கருவிகளுடன் குரல் வாயிலாக தகவல் தொடர்பு வைத்துக்கொள்ள கூகுள் சேவையை இந்த லக்சரி மைல்ட்-ஹைப்ரீட் எஸ்யூவி கார் கொண்டுள்ளது.

2021 வால்வோ எஸ்90 & எக்ஸ்சி60 மைல்ட் ஹைப்ரீட் கார்கள் இந்தியாவில் அறிமுகம்!! அறிமுக விலை ரூ.61.90 லட்சம்

இவை மட்டுமின்றி 1100 வாட்ஸ் ப்ளாக் & வொய்ட் 15-ஸ்பீக்கர் ஆடியோ, மஸாஜ் செயல்பாட்டுடன் முன்பக்க இருக்கைகள், நப்பா லெதர் உள்ளமைவு, காற்று சுத்திகரிப்பான், இன்-கார் செயல்பாடுகள், 360-கோண கேமிரா மற்றும் தகவமைத்து கொள்ளக்கூடிய க்ரூஸ் கண்ட்ரோல் போன்றவையும் எக்ஸ்சி60 மாடலில் வழங்கப்பட்டுள்ளன.

2021 வால்வோ எஸ்90 & எக்ஸ்சி60 மைல்ட் ஹைப்ரீட் கார்கள் இந்தியாவில் அறிமுகம்!! அறிமுக விலை ரூ.61.90 லட்சம்

இவற்றுடன் பயண அனுபவத்தை மேம்படுத்தும் விதமாக கூகுள் ப்ளே-ஸ்டோரும் காருடன் ஒருங்கிணைக்கப்பட உள்ளது. BLIS எனப்படும் ஓட்டுனரால் பார்க்க முடியாத பகுதிகளை பற்றிய விபரங்களை வழங்கும் சிஸ்டமானது கார் மணிக்கு 60கிமீ வேகத்தை தாண்டிய பின்னர் செயல்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 வால்வோ எஸ்90 & எக்ஸ்சி60 மைல்ட் ஹைப்ரீட் கார்கள் இந்தியாவில் அறிமுகம்!! அறிமுக விலை ரூ.61.90 லட்சம்

இயங்கும் சாலையில் கோடுகளும், பார்டர்களும் தெளிவாக இருந்தால், BLIS ஆனது ஸ்டேரிங் உதவி, ரிவர்ஸில் செல்லும்போது பின்பக்கத்தில் குறுக்காக ஏதேனும் வந்தால் எச்சரிப்பான் மற்றும் பின்பக்கமாக வாகனம் மோதலுக்கு உள்ளாகுவதை எச்சரிக்கும் வசதி உள்பட ஏகப்பட்ட வசதிகளை வழங்கக்கூடியது.

2021 வால்வோ எஸ்90 & எக்ஸ்சி60 மைல்ட் ஹைப்ரீட் கார்கள் இந்தியாவில் அறிமுகம்!! அறிமுக விலை ரூ.61.90 லட்சம்

வால்வோ நிறுவனம் சமீபத்தில் தான் எக்ஸ்சி60 ஃபேஸ்லிஃப்ட் காரை தென்கொரியாவில் வெளியீடு செய்திருந்தது. இந்த காரில் புதிய ஸ்மார்ட் கார் சிஸ்டம் முக்கிய அம்சமாக வழங்கப்பட்டுள்ளது. உலகளவில் பிரபலமான இணைய தேடலான கூகுள் உடன் கூட்டணி சேர்ந்த முதல் கார் தயாரிப்பு நிறுவனமாக வால்வோ விளங்குவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #வால்வோ #volvo
English summary
2021 Volvo S90 & XC60 Mild Hybrid Variants Launched At Rs. 61.90 Lakh.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X