வால்வோவின் இந்திய சந்தைக்கான ஹைப்ரீட் கார் - எக்ஸ்சி60 ஃபேஸ்லிஃப்ட்!! விரைவில் அறிமுகம்!

விரைவில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ள எக்ஸ்சி60 மைல்ட்-ஹைப்ரீட் காரின் புதிய டீசர் ஒன்றை வால்வோ நிறுவனம் அதன் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளது. அதனை பற்றியும், விரைவில் விற்பனைக்கு வரவுள்ள இந்த வால்வோ காரை பற்றியும் இனி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

வால்வோவின் இந்திய சந்தைக்கான ஹைப்ரீட் கார் - எக்ஸ்சி60 ஃபேஸ்லிஃப்ட்!! விரைவில் அறிமுகம்!

வால்வோ நிறுவனம் அதன் எக்ஸ்சி60 எஸ்யூவி மாடலின் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை இந்தியாவில் களமிறக்க தயாராகி வருகிறது. தற்போதைய மாடர்ன் காலக்கட்டத்திற்கு ஏற்ப ஸ்மார்டான காராக வடிவமைக்கப்பட்டுள்ள புதிய வால்வோ எக்ஸ்சி60 ஃபேஸ்லிஃப்ட்டின் டீசர் வீடியோ தான் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

வால்வோவின் இந்திய சந்தைக்கான ஹைப்ரீட் கார் - எக்ஸ்சி60 ஃபேஸ்லிஃப்ட்!! விரைவில் அறிமுகம்!

இந்த வீடியோவில், புதிய தலைமுறை வால்வோ எக்ஸ்சி60 எஸ்யூவி கார் முந்தைய வெர்சனை காட்டிலும் அளவில் பெரியதாக கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதேநேரம் சிறந்த எரிபொருள் திறன் உடன் மென்மையான ட்ரைவிங் அனுபவத்தையும், மாடர்ன் தொழிற்நுட்பங்களுடன் கூடுதல் வசதிகளையும் எதிர்பார்க்கலாம் எனவும் இந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வால்வோவின் இந்திய சந்தைக்கான ஹைப்ரீட் கார் - எக்ஸ்சி60 ஃபேஸ்லிஃப்ட்!! விரைவில் அறிமுகம்!

வால்வோ சமீபத்தில் எக்ஸ்சி60 ஃபேஸ்லிஃப்ட் காரை கொரியாவில் வெளியீடு செய்திருந்தது. அதில் புதிய ஸ்மார்ட் கார் சிஸ்டம் முக்கிய அம்சமாக வழங்கப்பட்டு இருந்தது. உலகளவில் பிரபலமான இணைய தேடலான கூகுள் உடன் கூட்டணி சேர்ந்த முதல் கார் தயாரிப்பு நிறுவனமாக வால்வோ விளங்குகிறது.

வால்வோவின் இந்திய சந்தைக்கான ஹைப்ரீட் கார் - எக்ஸ்சி60 ஃபேஸ்லிஃப்ட்!! விரைவில் அறிமுகம்!

இதன் வாயிலாக, கூகுள் செயலிகள் மற்றும் சேவைகள் உடன் ஒருங்கிணைக்கப்பட்ட ஆண்ட்ராய்டு மூலமாக செயல்படக்கூடிய இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை தனது வாகனங்களில் வால்வோ நிறுவனம் வழங்குகிறது. அத்துடன் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய தலைமுறை எக்ஸ்சி60 காரில் செயற்கை நுண்ணறிவு பெற்ற இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டமும் வழங்கப்படலாம்.

வால்வோவின் இந்திய சந்தைக்கான ஹைப்ரீட் கார் - எக்ஸ்சி60 ஃபேஸ்லிஃப்ட்!! விரைவில் அறிமுகம்!

இதன் மூலமாக, நாவிகேஷன், இசை ஸ்ட்ரீமிங் உள்பட பல வசதிகளுக்காக வாடிக்கையாளர்கள் வெவ்வேறான மொபைல் செயலிகள் மூலமாக தங்களது வாகனங்களை இணைத்து கொள்ள முடியும். வால்வு நிறுவனத்தின் கூற்றுப்படி, காரின் உட்புற கேபினின் வெப்பநிலை, குறுஞ்செய்திகள், செல்ல வேண்டிய திசைகள் மற்றும் இசை உள்ளிட்டவற்றை இந்த சிஸ்டத்தின் வாயிலாக குரல் கட்டளையில் கட்டுப்படுத்தப்படலாம். இந்த சிஸ்டம் அடுத்த ஆண்டில் இருந்து மற்ற மாடல்களுக்கும் கொண்டுவரப்பட உள்ளதாக வால்வோ தெரிவித்துள்ளது.

வால்வோவின் இந்திய சந்தைக்கான ஹைப்ரீட் கார் - எக்ஸ்சி60 ஃபேஸ்லிஃப்ட்!! விரைவில் அறிமுகம்!

இவற்றுடன் அதிநவீன ஓட்டுனர் உதவி அமைப்புகளையும் (ADAS) புதிய எக்ஸ்சி60 காரில் வால்வோ பொருத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ADAS மூலமாக சாலையில் அருகில் வரும் மற்ற வாகனங்களை அடையாளம் காணுதல், ஆட்டோமேட்டிக் ப்ரேக்கிங் மற்றும் பைலட் உதவி போன்ற டிரைவிங் உதவி அம்சம் முதலியவற்றை வால்வோவின் இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி கார் பெறலாம்.

வால்வோவின் இந்திய சந்தைக்கான ஹைப்ரீட் கார் - எக்ஸ்சி60 ஃபேஸ்லிஃப்ட்!! விரைவில் அறிமுகம்!

கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு பிறகு வால்வோ எக்ஸ்சி60 எஸ்யூவி கார் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடினை பெற்றுள்ளது. இதன் காரணமாக, புதிய முன்பக்க க்ரில், புதிய டிசைனில் பம்பர், 3டி இரும்பு லோகோ, முழு எல்இடி டெயில்லேம்ப் மற்றும் அதிநவீன ஓட்டுனர் உதவி அமைப்பு உள்ளிட்டவற்றை இந்த வால்வோ காரில் எதிர்பார்க்கிறோம்.

வால்வோவின் இந்திய சந்தைக்கான ஹைப்ரீட் கார் - எக்ஸ்சி60 ஃபேஸ்லிஃப்ட்!! விரைவில் அறிமுகம்!

இவற்றுடன் காரின் 21-இன்ச் சக்கரங்களின் டிசைனும் திருத்தியமைக்கப்பட்டிருக்கலாம். புதிய வால்வோ எக்ஸ்சி60 ஐந்து விதமான ட்ரிம் தேர்வுகளில் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் இரு மைல்ட் ஹைப்ரீட் மற்றும் ஒரு ப்ளக்-இன் ஹைப்ரீட் வேரியண்ட்கள் அடங்கிய மூன்று பவர்ட்ரெயின்கள் தேர்வுகளாக கொடுக்கப்படும்.

வால்வோவின் இந்திய சந்தைக்கான ஹைப்ரீட் கார் - எக்ஸ்சி60 ஃபேஸ்லிஃப்ட்!! விரைவில் அறிமுகம்!

இருப்பினும் வால்வோ எக்ஸ்சி60-இன் வழக்கமான 2.0 லிட்டர் இன்லைன் 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜினே இந்த புதிய காரிலும் தொடரப்பட உள்ளது. ஆனால் உண்மையில், புதிய வால்வோ எக்ஸ்சி60 காரில் முக்கியமான அப்டேட் அதன் பொனெட்டிற்குள் தான் வழங்கப்பட உள்ளது. அதாவது புதிய 48-வோல்ட் ஹைப்ரீட் சிஸ்டத்தினை இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் கார் பெற்றுவரலாம் என எதிர்பார்க்கிறோம்.

வால்வோவின் இந்திய சந்தைக்கான ஹைப்ரீட் கார் - எக்ஸ்சி60 ஃபேஸ்லிஃப்ட்!! விரைவில் அறிமுகம்!

இரு மைல்ட் ஹைப்ரீட் தேர்வுகள் இந்த வால்வோ எஸ்யூவி காரின் பி5 மற்றும் பி6 ட்ரிம்களிலும், ப்ளக்-இன் ஹைப்ரீட் தேர்வு டாப் டி8 ட்ரிம்-மிலும் கொடுக்கப்பட உள்ளன. மற்றப்படி எக்ஸ்சி60-இன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனில் எந்த மாற்றமும் இருக்காது. இந்த வால்வோ காரின் ஆரம்ப நிலை பி5 ட்ரிம்-இல் மட்டும் முன்சக்கர ட்ரைவ் நிலையான தேர்வாகவும், அனைத்து-சக்கர-ட்ரைவ் சிஸ்டம் கூடுதல் தேர்வாகவும் வழங்கப்பட உள்ளன.

வால்வோவின் இந்திய சந்தைக்கான ஹைப்ரீட் கார் - எக்ஸ்சி60 ஃபேஸ்லிஃப்ட்!! விரைவில் அறிமுகம்!

மற்ற வேரியண்ட்கள் அனைத்திலும் நிலையான தேர்வாகவே அனைத்து-சக்கர ட்ரைவ் சிஸ்டத்தினை பெறலாமாம். பி5 மற்றும் பி6 ட்ரிம்-களில் 48-வோல்ட் சிஸ்டத்தினால் எந்தவொரு கூடுதல் ஆற்றலையும் எதிர்பார்க்க வேண்டாம். ஆனால் என்ஜினில் இருந்து கூடுதல் எரிபொருள் திறனை பெற முடியும்.

Most Read Articles

மேலும்... #வால்வோ #volvo
English summary
Volvo teases upcoming XC60 with mild-hybrid tech, to launch in India soon.
Story first published: Monday, October 4, 2021, 22:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X