400 கிமீ ரேஞ்ச்... வால்வோவின் அசத்தலான முதல் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்... விரைவில் விற்பனைக்கு...!

வால்வோ நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடலான எக்ஸ்சி40 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ள இந்த காரின் முக்கிய அம்சங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

400 கிமீ ரேஞ்ச்... வால்வோவின் முதல் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்... விரைவில் விற்பனைக்கு வருகிறது!

இந்தியாவில் மின்சார வாகனஙகளுக்கான வரவேற்பு அதிகரித்து வருவதையடுத்து, அனைத்து நிறுவனங்களும் மின்சார வாகனங்களை களமிறக்குவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. சொகுசு கார் மார்க்கெட்டிலும் மின்சார மாடல்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் காருக்கு கிடைத்த வரவேற்பால், பிற நிறுவனங்கள் தைரியமாக இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் மாடலை களமிறக்க முனைப்பு காட்டத் துவங்கி இருக்கின்றன.

400 கிமீ ரேஞ்ச்... வால்வோவின் முதல் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்... விரைவில் விற்பனைக்கு வருகிறது!

அந்த வகையில், வால்வோ கார் நிறுவனம் தனது முழுமையான முதல் எலெக்ட்ரிக் கார் மாடலை இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, இந்த கார் இன்று டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் வைத்து அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

400 கிமீ ரேஞ்ச்... வால்வோவின் முதல் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்... விரைவில் விற்பனைக்கு வருகிறது!

வால்வோ நிறுவனத்தின் ஆரம்ப ரக எஸ்யூவி மாடலாக விற்பனையில் இருந்து வரும் எக்ஸ்சி40 சொகுசு எஸ்யூவி காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த கார் மின்சார எஸ்யூவியானது எக்ஸ்சி40 ரீசார்ஜ் என்ற பெயரில் வர இருக்கிறது. ஏற்கனவே வால்வோ எக்ஸ்சி40 எஸ்யூவிக்கு இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

400 கிமீ ரேஞ்ச்... வால்வோவின் முதல் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்... விரைவில் விற்பனைக்கு வருகிறது!

டிசைனை பொறுத்தவரையில் ஏற்கனவே இந்தியாவில் விற்பனையில் உள்ள எக்ஸ்சி40 காரின் அடிப்படையிலான மாடலாகவே உள்ளது. ஆனால், முன்புற க்ரில் அமைப்பு உள்ளிட்டவற்றில் சில மாற்றங்களுடன் எக்ஸ்சி40 ரீசார்ஜ் மாடல் தனித்துவம் பெறுகிறது.

400 கிமீ ரேஞ்ச்... வால்வோவின் முதல் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்... விரைவில் விற்பனைக்கு வருகிறது!

புதிய வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் காரில் 78kWh பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கும். சோதனை நிலைகளின்படி, இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 418 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். நடைமுறையில் 350 கிமீ ரேஞ்ச் கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.

400 கிமீ ரேஞ்ச்... வால்வோவின் முதல் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்... விரைவில் விற்பனைக்கு வருகிறது!

இந்த காரில் இரண்டு 150kW பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கும். பேட்டரியை ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தினால் 40 நிமிடங்களில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏற்றிவிட முடியும். இதன் மின் மோட்டார்கள், பேட்டரி இணைந்து அதிகபட்சமாக 408 பிஎச்பி பவரையும், 659 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

400 கிமீ ரேஞ்ச்... வால்வோவின் முதல் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்... விரைவில் விற்பனைக்கு வருகிறது!

இந்த காரில் சுத்தியல் வடிவிலான எல்இடி பகல்நேர விளக்குகளுடன் கூடிய எல்இடி ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள் பொருத்தப்பட்டு இருக்கும். கூரை, ரியர் வியூ மிரர்கள், அலாய் வீல்கள், பி பில்லர்கள் ஆகியவை கருப்பு வண்ணம் தீட்டப்பட்டு இருக்கும்.

400 கிமீ ரேஞ்ச்... வால்வோவின் முதல் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்... விரைவில் விற்பனைக்கு வருகிறது!

இந்த காரில் 5 பேர் பயணிக்கும் இருக்கை வசதி கொண்டது. அதேபோன்று, 2,702 மிமீ வீல்பேஸ் இருப்பதால் சிறப்பான இடவசதியை பெற முடியும். இந்த சொகுசு மின்சார எஸ்யூவி 211 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

400 கிமீ ரேஞ்ச்... வால்வோவின் முதல் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்... விரைவில் விற்பனைக்கு வருகிறது!

புதிய வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எஸ்யூவியில் வெதுவெதுப்பான உணர்வை வழங்கும் வசதி கொண்ட இருக்கைகள், பனோரமிக் சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், ஹார்மன் கார்டன் மியூசிக் சிஸ்டம், 9 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்மார்ட்ஃபோன் கனெக்ட்டிவிட்டி வசதிகள் இடம்பெற்றிருக்கும்.

400 கிமீ ரேஞ்ச்... வால்வோவின் முதல் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்... விரைவில் விற்பனைக்கு வருகிறது!

பாதுகாப்பு அம்சங்களிலும் சிறப்பானதாக இருக்கும். இந்த காரில் ஏர்பேக்குகள், க்ராஸ் டிராஃபிக் அலர்ட் வசதி, 360 டிகிரி கேமரா ஆகியவை முக்கிய அம்சங்களாக கூறலாம்.

400 கிமீ ரேஞ்ச்... வால்வோவின் முதல் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்... விரைவில் விற்பனைக்கு வருகிறது!

இதன் டிசைன், விலை, சிறப்பம்சங்கள் எல்லோரையும் இந்திய வாடிக்கையாளர்களை சுண்டி இழுத்து வருகிறது. எனவே, அதன் அடிப்படையிலான மின்சார மாடலாக வரும் எகஸ்சி40 ரீசார்ஜ் காரும் வாடிக்கையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிக விரைவில் விலை அறிவிப்பு வெளியிடப்படும் வாய்ப்பு இருக்கிறது.

போட்டியாளர்களைவிட இந்தியாவில் விலை குறைவான சொகுசு எலெக்ட்ரிக் கார் மாடலாக வரும் வாய்ப்பு இருப்பதால், வாடிக்கையாளர்கள் மத்தியிலும் அதிக ஆவல் இருந்து வருகிறது. வரும் ஜூன் மாதம் புக்கிங் துவங்கப்பட உள்ளது. செப்டம்பரில் டெஸ்ட் டிரைவ் வாய்ப்பும், அக்டோபர் முதல் இந்தியாவில் டெலிவிரி கொடுக்கும் பணிகளும் துவங்கப்படும்.

Most Read Articles

மேலும்... #வால்வோ #volvo
English summary
Volvo has unveiled XC40 Recharge electric SUV in India ahead of launch.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X