புதிய காரை வருட இறுதியில் வாங்குவதா? (அ) புதிய வருடத்தில் வாங்குவதா? காரை புக் செய்யும்முன் இத தெரிஞ்சிக்கங்க!

2021ஆம் வருடம் முடியும் தருவாய்க்கு வந்துவிட்டது. இதனை வெளிக்காட்டும் விதமாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் மற்றும் டீலர்ஷிப்கள் தங்களது கார்களுக்கு சலுகைகளை வழங்க ஆரம்பித்துவிட்டன. ஏனெனில் புதிய காரை வாங்குவதற்கு இதுவே சரியான நேரம். இருப்பினும் சில வாடிக்கையாளர்களுக்கு புதிய காரை இந்த வருட இறுதிக்குள் வாங்குவதா? அல்லது புதிய ஆண்டின் துவக்கத்தில் வாங்குவதா? என்கிற சந்தேகம் இருக்கலாம்.

புதிய காரை வருட இறுதியில் வாங்குவதா? (அ) புதிய வருடத்தில் வாங்குவதா? காரை புக் செய்யும்முன் இத தெரிஞ்சிக்கங்க!!

இந்த சந்தேகத்தை தீர்த்து கொள்வது சற்று கடினம் தான். இருப்பினும் புதிய கார் வாங்குவதில் தீவிரமாகி இறங்கி, சில பல விஷயங்களை தெரிந்து கொண்டால் இந்த சந்தேகங்களை களை எடுக்கலாம். இந்த விஷயத்தில், புதிய காரை வாங்குவதற்கு காரணம் என்ன?, எத்தனை நாட்களாக புதிய காரை வாங்க திட்டமிட்டு வருகிறீர்கள்?, சலுகைகள், விலை உயர்வு, அடுத்த வருடத்தில் கிடைக்கவுள்ள மாடல்கள் என குறிப்பிட்ட காரில் எந்த வேரியண்ட்டை தேர்வு செய்வது என்பது வரையிலான கேள்விகளுக்கு பதில்களை வைத்திருந்தால், இந்த சந்தேகமே ஏற்படாது என்றுதான் சொல்ல வேண்டும்.

புதிய காரை வருட இறுதியில் வாங்குவதா? (அ) புதிய வருடத்தில் வாங்குவதா? காரை புக் செய்யும்முன் இத தெரிஞ்சிக்கங்க!!

வரவிருக்கும் 2022ஆம் ஆண்டை பொறுத்தவரையில், தொடர்ந்து அதிகரித்துவரும் வாகன பாக தயாரிப்பிற்கான செலவினாலும், உலகளவில் நிலவிவரும் குறைக்கடத்திகளுக்கான தேவையினாலும், வரவிருக்கும் புதிய ஆண்டின் துவக்கத்தில் கார்களின் விலைகளை அதிகரிக்க உள்ளதாக பல கார் தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன. இதே காரணங்களுக்காக இந்த 2021ஆம் ஆண்டிலும் சில முறை கார்களின் விலைகள் உயர்த்தப்பட்டு இருந்தன.

புதிய காரை வருட இறுதியில் வாங்குவதா? (அ) புதிய வருடத்தில் வாங்குவதா? காரை புக் செய்யும்முன் இத தெரிஞ்சிக்கங்க!!

கடந்த 2020ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில், அதிநவீன தொழிற்நுட்பங்களில் பயன்படுத்தப்படும் சிப்களுக்கான தேவை அதிகரிக்க ஆரம்பித்தது. இது தற்போது மெல்ல மெல்ல சீராகி வருகிறது என்றாலும், இப்போதும் பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது கார்களை முன்பதிவு செய்து வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டிய கால அளவை அதிகமாகவே நிர்ணயித்துள்ளன.

புதிய காரை வருட இறுதியில் வாங்குவதா? (அ) புதிய வருடத்தில் வாங்குவதா? காரை புக் செய்யும்முன் இத தெரிஞ்சிக்கங்க!!

மேலும், இந்த சூழல் ஆட்டோமொபைல் நிறுவனங்களை தயாரிப்பு தேவையை பூர்த்தி செய்ய கார்களின் விலைகளை உயர்த்தவும் கட்டாயப்படுத்துகிறது. இதில் சிறு சிறு பிராண்ட்கள் மட்டுமல்ல, இந்தியாவின் மிக பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி கூட சிக்கியுள்ளது என்பது தான் அதிர்ச்சிக்கரமான விஷயமே. கடந்த செப்டம்பரில் இருந்து தனது வழக்கமான தொழிற்சாலை பணிகளை குறிப்பிடத்தக்க அளவில் குறைத்துவரும் மாருதி சுஸுகி அதன் குறிப்பிட்ட மாடல்களின் விலைகளை வருகிற 2022 ஜனவரி மாதத்தில் இருந்து அதிகரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

புதிய காரை வருட இறுதியில் வாங்குவதா? (அ) புதிய வருடத்தில் வாங்குவதா? காரை புக் செய்யும்முன் இத தெரிஞ்சிக்கங்க!!

இதுகுறித்து இந்த இந்திய- ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்த விலை அதிகரிப்பு மாடல்களுக்கு மாடல் மாறுப்படும். ஓர் காரின் ஒட்டுமொத்த கட்டமைப்பு செலவில் கிட்டத்தட்ட 70% உலோக பாகங்களுக்காக செலவழிக்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோன்று மற்றொரு முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸும் அதன் கார்களின் விலைகளை புதிய வருட துவக்கத்தில் அதிகரிக்க உள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்தது.

புதிய காரை வருட இறுதியில் வாங்குவதா? (அ) புதிய வருடத்தில் வாங்குவதா? காரை புக் செய்யும்முன் இத தெரிஞ்சிக்கங்க!!

இதுகுறித்து டாடா மோட்டார்ஸின் பயணிகள் வாகன வர்த்தக பிரிவின் தலைவர் ஷைலேஷ் சந்த்ரா அளித்த பேட்டியில், உலோகங்களின் விலைகள், மூலப்பொருட்கள் மற்றும் பிற உள்ளீட்டு செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த செலவு அதிகரிப்பை ஓரளவிற்கு ஈடுக்கட்ட இந்த விலை உயர்வு தற்போதைக்கு தவிர்க்க முடியாததாக உள்ளது என்றார்.

புதிய காரை வருட இறுதியில் வாங்குவதா? (அ) புதிய வருடத்தில் வாங்குவதா? காரை புக் செய்யும்முன் இத தெரிஞ்சிக்கங்க!!

ஆதலால் புதிய காரை வாங்க திட்டமிட்டு வருகிறீர்கள் என்றால், அதற்கு இதுதான் சரியான தருணமாகும். அதாவது, இந்த ஆண்டு முடிவதற்குள்ளாக தனக்கான காரை முன்பதிவு செய்துவிடுங்கள். மேலும், அருகில் உள்ள டீலர்ஷிப்களிலும் கார்களுக்கு எத்தகைய தள்ளுபடி சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன என்பதையும் கேட்டறிந்து, சிறந்த விலையில் புதிய காரை வாங்க பாருங்கள்.

புதிய காரை வருட இறுதியில் வாங்குவதா? (அ) புதிய வருடத்தில் வாங்குவதா? காரை புக் செய்யும்முன் இத தெரிஞ்சிக்கங்க!!

அதுவே, அவ்வப்போது பழைய காரை விற்று அல்லது வாங்கிய டீலர்ஷிப் மையத்திலேயே எக்ஸ்சேன்ஞ் செய்து புதிய காரை வாங்கும் பழக்கம் கொண்டவர்கள் என்றால், அடுத்த ஆண்டு வரை காத்திருப்பது நல்லது. அல்லது குறைந்தப்பட்சம் புதிய காரை அடுத்த ஆண்டில் ஆர்டிஓ அலுவலகத்தில் பதிவு செய்யலாம். ஏனெனில் இத்தகைய செயல்கள் எதிர்காலத்தில் காரை விற்கும்போதோ அல்லது எக்ஸ்சேன்ஞ் செய்யும்போதோ அதன் மதிப்பை அதிகரிக்கும்.

புதிய காரை வருட இறுதியில் வாங்குவதா? (அ) புதிய வருடத்தில் வாங்குவதா? காரை புக் செய்யும்முன் இத தெரிஞ்சிக்கங்க!!

பெரும்பாலான கார் தயாரிப்பு நிறுவனங்கள் எக்ஸ்சேன்ஞ் செய்வதற்கு அதிகப்பட்சமாக 3 வருடங்கள் வரையில் கால அளவை நிர்ணயித்துள்ளதை இந்த இடத்தில் மறந்துவிட வேண்டாம். அதாவது, புதியதாக வாங்கும் காரை அதே பிராண்டின் டீலர்ஷிப் மையத்தில் 3 வருடங்களுக்கு உள்ளாக எக்ஸ்சேன்ஞ் செய்தால் அதிக மதிப்பு கிடைக்கும். பொதுவாகவே, டிசம்பரில் புதிய காரை வாங்கினால், அதனை அடுத்த ஆண்டு ஜனவரியில் பதிவு செய்யும் வாய்ப்பு அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கிறது.

புதிய காரை வருட இறுதியில் வாங்குவதா? (அ) புதிய வருடத்தில் வாங்குவதா? காரை புக் செய்யும்முன் இத தெரிஞ்சிக்கங்க!!

ஓர் ஆண்டில் புதிய காரை வாங்குவதற்கு அக்டோபர்- ஜனவரி தான் சிறந்த காலமாக கார் ஆர்வலர்களாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இதற்கு இடைப்பட்ட மாதங்களிலேயே பண்டிகை நாட்கள் அதிகம் வருவதால், தயாரிப்பு நிறுவனங்களும், டீலர்களும் விற்பனையை அதிகரிக்க இந்த சமயத்தில்தான் அதிகளவில் சலுகைகளையும் தள்ளுபடிகளையும் அறிவிக்கின்றன.

புதிய காரை வருட இறுதியில் வாங்குவதா? (அ) புதிய வருடத்தில் வாங்குவதா? காரை புக் செய்யும்முன் இத தெரிஞ்சிக்கங்க!!

இவற்றுடன் புதிய காரை வாங்கும்முன் இந்த விஷயத்தையும் நினைவில் வைத்து கொள்ளுங்கள். அது என்னவென்றால், ஓர் கார் தயாரிப்பு நிறுவனம் புதிய காரையோ அல்லது விற்பனையில் உள்ள காருக்கு புதிய அப்டேட்டையும் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் வழங்கவுள்ளதாக அறிவித்திருந்தாலும், புதிய ஆண்டு துவங்கிய உடனேயே அந்த காரினை அறிமுகப்படுத்திவிடாது. சில நாட்களை அறிமுகத்திற்காக எடுத்து கொள்ளும்.

புதிய காரை வருட இறுதியில் வாங்குவதா? (அ) புதிய வருடத்தில் வாங்குவதா? காரை புக் செய்யும்முன் இத தெரிஞ்சிக்கங்க!!

ஒருவேளை, ஜனவரியின் முதல் வாரத்திலேயே அந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அந்த கார் உடனடியாக டீலர்ஷிப்களுக்கு வந்து சேராது. சில காரணங்களால், ஜனவரி மாத இறுதி ஆகலாம் அல்லது பிப்ரவரி மாத துவக்கத்தில் ஷோரூம்களுக்கு கொண்டுவரப்படலாம். இவ்வளவு ஏன், சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த புதிய கார்கள் ஷோரூம்களை வந்தடைய மார்ச் மாதம் கூட ஆகலாம். முடிவு உங்கள் கையில்...!!

Most Read Articles

English summary
What is best time to buy a new car
Story first published: Saturday, December 18, 2021, 23:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X