Just In
- 7 hrs ago
எஃப்.இசட் வரிசையில் புதிய அட்வென்ச்சர் பைக்!! யமஹாவின் அதிரடி மூவ்!
- 9 hrs ago
பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்யூவி எப்படி இருக்கிறது?- டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!
- 10 hrs ago
25கிமீ சைக்கிள் மிதித்து படப்பிடிப்பு தளத்திற்கு வந்த நடிகர்!! தளபதி விஜய் எஃபெக்ட் போல...
- 11 hrs ago
ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் 9 பட ட்ரைலர் வெளியீடு!! இந்த கார்கள் எல்லாம் படத்தில் பயன்படுத்தப்பட்டுருக்கா?
Don't Miss!
- News
ஜெட் வேகத்தில் கொரோனா.. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு தொற்று உறுதி!
- Sports
என்னப்பா நடக்குது இங்க.. விக்கெட்டில் விளையாடிய அம்பயர்.. விழிப்பிதுங்கிய டூப்ளசிஸ் வேடிக்கை சம்பவம்
- Movies
எல்லா விஷயமும் பேசலாம்… புதிய யூட்யூப் சேனலை தொடங்கிய ரேகா !
- Finance
பிட்காயின்-ஐ தடை செய்த துருக்கி.. இந்தியா என்ன செய்யப் போகிறது..!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.1 லட்சம் ஊதியத்தில் BECIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்
- Lifestyle
கொரோனா தடுப்பூசி குறிப்பாக பெண்களுக்கு என்னென்ன பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது தெரியுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஏலத்திற்கு வந்தது உலகின் முதல் ஜெட் விமான வடிவ லிமோசைன்... லக்சூரி வசதியில் இது சொகுசு விமானத்தையே மிஞ்சிடும்!
42 அடி நீளம், 8 அடி அகலம் கொண்ட ராட்சத லிமோசைன் ரக வாகனம் மீண்டும் ஏலத்திற்கு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

மிகவும் வித்தியாசமான உருவம் கொண்ட லிமோசைன் ரக வாகனம் ஒன்று மீண்டும் ஏலத்திற்கு வந்திருக்கின்றது. முன்னதாக, ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டபோது, எதிர்பார்த்த அளவில் இந்த வாகனத்திற்கு ஏலம் கேட்கப்படவில்லை. எனவே, இவ்வாகனத்தை ஏலத்திற்கு அறிவித்த மெக்யூம் ஏல வீடு அறிவிப்பை பின் வாங்கியது.

இந்த நிலையில், மீண்டும் இவ்வாகனத்தை ஏலத்திற்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. சரியாக ஒரு வருடங்களுக்கு பின்னர் தற்போதே அந்த வாகனம் மீண்டும் ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றது. பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமான உருவத்தில் இருக்கும் இவ்வாகனம், 42 அடி நீளம் மற்றும் 8 அடி அகலத்தில் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

இதுமட்டுமின்றி ஜெட் விமானம் போன்ற உருவம் இவ்வாகனத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கின்றது. இவ்வுருவத்துடன் பயன்பாட்டிற்கு வந்த உலகின் முதல் வாகனம் இதுவே ஆகும். இதனை கேண்டி ரெட் லிமோ-ஜெட் அல்லது லியர்மோசைன் என இருவிதமான பெயர்களில் அழைக்கின்றனர்.

ஜெட் விமானங்களை தழுவி இதுவரை பல வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால், இது அச்சு அசல் ஜெட் விமானத்தைப் போலவே இருக்கக் கூடிய வாகனமாக இருக்கின்றது. கூர்முகம், இருபுறமும் ஜெட் எஞ்ஜின் போன்ற அமைப்பு, டெயில் றெக்கை என அனைத்துமே ஜெட் விமானத்தையே தோற்கடிக்கும் ஸ்டைலில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

என்னதான் இந்த வாகனம் விமானத்தின் உருவத்தை தழுவி உருவாக்கப்பட்டிருந்தாலும் இதனால் பறக்க முடியாது என்பதை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். சாலையில் செல்வதற்கு ஏற்ற வாகனமாக மட்டுமே இதனை வடிவமைத்திருக்கின்றனர். இதற்காக, முன் பக்கத்தில் இரு வீல்களும், பின் பக்கத்தில் இரு வீல்களும், மொத்தமாக நான்கு வீல்கள் இவ்வாகனத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கின்றன.

இந்த வாகனத்தையே மெக்யூம் ஏல வீடு மீண்டும் ஏலத்திற்குக் கொண்டு வந்திருக்கின்றது. மே மாதம் 14ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை இந்த வாகனத்திற்கான ஏலம் ஆன்லைனில் நடைபெற இருக்கின்றது. இதனை ஏலத்தில் எடுப்பதற்காக உலக பணக்காரர்கள் பலர் இப்போதே காத்திருக்க தொடங்கிவிட்டனர்.

2020இல் நடைபெற்ற ஏலத்தின்போது 6,00,000 அமெரிக்க டாலர்கள் வரை ஏலம் கோரப்பட்டது குறிப்பிடத்தகுந்தது. இது மிக மிக குறைவான ஏல மதிப்பு என்கிற காணத்தினால் ஏல அறிவிப்பு பின் வாங்கப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் ஒரு வருடங்கள் கழித்து ஏலம் தொடங்கப்பட்டிருக்கின்றது.

சுமார் 40 ஆயிரம் மணி நேரங்கள் செலவில் இவ்வாகனத்தை உருவாக்கியிருக்கின்றார் டான் ஹாரிஸ் (Dan Harris). இவர் அமெரிக்காவின் ஒரேகான் (Oregon) எனும் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். இவரே தனது தனிப்பட்ட திறனைக் கொண்டு வாகனத்தை வடிவமைத்து கட்டமைத்தவர் ஆவார். இதன் அனைத்து உடற்கூடு மற்றும் சேஸ் ஆகியவற்றையும்கூட இவரே ஸ்கெட்ச்போட்டு உருவாக்கியிருக்கின்றார்.

vஇந்த வாகனத்தில் இழுவை திறனுக்காக செவ்ரோலட் நிறுவனத்தின் 8.1 லிட்டர் வோர்டெக் வி8 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ட்ரக்குகளுக்கான எஞ்ஜின் என்பது குறிப்பிடத்தகுந்தது. இது அதிகபட்சமாக 400 எச்பி திறனை வெளியேற்றக் கூடியது. அதிகபட்சமாக மணிக்கு 160 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதே இந்த எஞ்ஜின்.

இது ஓர் லிமோசைன் ரக வாகனம் என்பதால் சொகுசு வசதிக்கு சற்றும் பஞ்சமின்றி காணப்படுகின்றது. வாகனத்தின் கேபின் பகுதி மினி நட்சத்திர ஓட்டல் (பார்) போன்று காட்சியளிக்கின்றது. உயர் ரக இருக்கை, திரை, வண்ண மின் விளக்கு, சவுண்டு சிஸ்டம் என பல்வேறு பிரீமியம் மற்றும் லக்சூரி அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

இத்துடன், குளிர் மற்றும் மதுபானங்களைக் குளிர்ச்சியாக கையாளக்கூடிய மினி ஃப்ரிட்ஜ், செல்போன் சார்ஜிங் பாயிண்ட் போன்ற சில தனித்துவமான அம்சங்களும் இவ்வாகனத்தில் இடம்பெற்றிருக்கின்றன. சவுண்டு சிஸ்டத்திற்காக 17 ஆயிரம் வாட் திறன் கொண்ட ஆடியோ மற்றும் விஷுவல் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.