மாருதி ஆல்டோவை விட குறைவு - சீனாவில் அறிமுகமாகியுள்ள உலகின் மலிவான எலக்ட்ரிக் கார்!!

சீனாவில் எலக்ட்ரிக் கார்களின் விற்பனை பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. குறிப்பாக அனைவரும் வாங்கக்கூடிய, அளவில் சிறிய பட்ஜெட் கார்களையே சீனர்கள் பிரதான தேர்வாக தேர்வு செய்கின்றனர்.

மாருதி ஆல்டோவை விட குறைவு - சீனாவில் அறிமுகமாகியுள்ள உலகின் மலிவான எலக்ட்ரிக் கார்!!

இந்த வகையில் சீனாவில் பிரபலமான ஆட்டோமொபைல் நிறுவனமாக விளங்கும் வுலிங் ஹாங் குவாங் நிறுவனம் அறிமுகம் செய்த மினி எலக்ட்ரிக் கார் கடந்த 2020ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 1,19,255 யூனிட்கள் விற்பனை செய்யபட்டு, சீனாவில் எலக்ட்ரிக் கார்களுக்கான சந்தை வளர்வதில் மிக முக்கிய பங்கு வகித்துள்ளது.

மாருதி ஆல்டோவை விட குறைவு - சீனாவில் அறிமுகமாகியுள்ள உலகின் மலிவான எலக்ட்ரிக் கார்!!

மினி எலக்ட்ரிக் காரின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது வுலிங் ஹாங் குவாங் நிறுவனம் மற்றொரு சிறிய அளவிலான எலக்ட்ரிக் காரை தனது தாயக நாட்டில் அறிமுகம் செய்துள்ளது. அதனை பற்றி தான் இந்த செய்தியில் விரிவாக பார்க்க போகின்றோம்.

மாருதி ஆல்டோவை விட குறைவு - சீனாவில் அறிமுகமாகியுள்ள உலகின் மலிவான எலக்ட்ரிக் கார்!!

வுலிங் ஹாங் குவாங் நிறுவனத்தின் இந்த புதிய எலக்ட்ரிக் காரின் பெயர் நானோ இவி ஆகும். நானோ என்றால் அளவில் சிறிய என்று பொருள். இதனால் தான் நமது டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் மலிவான காருக்கு நானோ என பெயர் வைத்தது. தற்போது இதே பெயரை இந்த சீன நிறுவனமும் பயன்படுத்தி கொண்டுள்ளது.

வுலிங் நானோ சிறிய எலக்ட்ரிக் கார் என்ற பெயரை மட்டுமில்லாமல், தற்போதைக்கு உலகிலேயே மிக மலிவான எலக்ட்ரிக் கார் என்ற பெயரையும் பெற்றுள்ளது. சீன ஊடகங்கள் வெளியிட்டுள்ள விபரங்களின்படி, வுலிங் நானோ இவி 20,000 யுவானிற்கும் குறைவான விலையில் விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாருதி ஆல்டோவை விட குறைவு - சீனாவில் அறிமுகமாகியுள்ள உலகின் மலிவான எலக்ட்ரிக் கார்!!

20 ஆயிரம் யுவான் என்பது நமது இந்திய ரூபாய் மதிப்பில் வெறும் ரூ.2.30 லட்சம் மட்டுமே ஆகும். இந்திய சந்தையில் எரிபொருள் என்ஜின் உடன் விற்பனை செய்யப்படும் மாருதி ஆல்டோவை காட்டிலும் இந்த விலை குறைவாகும். மேலும் 20,000 யுவான் என்பது சீனாவில் கார் ஆர்வலர்கள் கணித்துள்ள விலையே தவிர்த்து இன்னும் நானோ இவி-யின் விலையினை தயாரிப்பு நிறுவனம் வெளியிடவில்லை.

இத்தகைய விலையில் தான் வுலிங் நானோ இவி விற்பனை செய்யப்படும் எனில், வுலிங் மினி காரை காட்டிலும் மலிவானதாக கொண்டுவரப்படுவது மட்டுமின்றி, இதன்பின் சீனாவின் சிறந்த விற்பனை காம்பெக்ட் எலக்ட்ரிக் காராகவும் இது உருவெடுக்கலாம். சீனாவின் மிக பெரிய SAIC-GM-வுலிங் க்ரூப்பின் ஒரு பகுதியாக வுலிங் ஹாங் குவாங் உள்ளது.

மாருதி ஆல்டோவை விட குறைவு - சீனாவில் அறிமுகமாகியுள்ள உலகின் மலிவான எலக்ட்ரிக் கார்!!

புதிய நானோ எலக்ட்ரிக் காரை இந்த நிறுவனம் சமீபத்தில் நடைபெற்ற 2021 டியாஞ்சின் சர்வதேச ஆட்டோ கண்காட்சியில் அறிமுகப்படுத்தியுள்ளது. வுலிங் நிறுவனத்தின் போஜன் இ200 காரின் மாற்று வெர்சனாக வடிவமைக்கப்பட்டுள்ள நானோ இவி நகர்புற பயன்பாட்டிற்கு மிகவும் ஏற்ற எலக்ட்ரிக் கார் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

3 மீட்டர்களுக்கும் குறைவான நீளம் கொண்ட இந்த சீன எலக்ட்ரிக் காரில் வெறும் 2 இருக்கைகள் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளன. நானோ இவி-யின் உயரம் 2,497மிமீ, அகலம் 1,526மிமீ மற்றும் உயரம் 1,616மிமீ ஆகும். இத்தகைய குறைவான பரிமாண அளவுகளினால் தோற்றத்தில் டாடா நானோ காரை காட்டிலும் சிறியதாக இந்த சீன எலக்ட்ரிக் கார் உள்ளது.

மாருதி ஆல்டோவை விட குறைவு - சீனாவில் அறிமுகமாகியுள்ள உலகின் மலிவான எலக்ட்ரிக் கார்!!

ஏனெனில், தற்போது விற்பனையில் இல்லாத டாடா நானோ காரின் நீளம் 3 மீட்டர்களாக இருந்தது. சரி மீண்டும் சீன நானோ இவி-க்கு செல்வோம். இதன் வீல்பேஸ் நீளம் 1,600மிமீ ஆகும். இதில் பொருத்தப்பட்டுள்ள 33 பிஎஸ் எலக்ட்ரிக் மோட்டார் அதிகப்பட்சமாக 85 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

அதிகப்பட்சமாக இந்த மைக்ரோ-சைஸ் எலக்ட்ரிக் காரில் மணிக்கு 100கிமீ வேகத்தில் செல்லலாம். நானோ இவி-யில் ஐபி67 சான்றளிக்கப்பட்ட 28kWh லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பு இருக்கைகளுக்கு அடியில் பொருத்தப்பட உள்ளதாக இதன் அறிமுகத்தின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாருதி ஆல்டோவை விட குறைவு - சீனாவில் அறிமுகமாகியுள்ள உலகின் மலிவான எலக்ட்ரிக் கார்!!

இது காரை சிங்கிள் சார்ஜில் 305கிமீ தூரத்திற்கு இயக்கி செல்லும். 220-வோல்ட் உள்நாட்டு சாக்கெட்-ஐ பயன்படுத்தி இதன் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்ப கிட்டத்தட்ட 13.5 மணிநேரங்கள் தேவைப்படும் என தயாரிப்பு நிறுவனம் கூறுகிறது. அத்துடன் இந்த காருக்கு 6.6 கிலோவாட்ஸ் மாற்று மின்னோட்ட சார்ஜர் தேர்வும் வழங்கப்பட உள்ளது.

இது பேட்டரியை வெறும் 4.5 மணிநேரங்களில் முழுவதுமாக சார்ஜ் நிரப்பிவிடும். அளவில் சிறியதாக இருப்பதால் வுலிங் நானோ இவி-யில் எந்தவொரு பாதுகாப்பு அம்சமும் இல்லை என நினைத்துவிட வேண்டாம். எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் சிஸ்டம் (இஎஸ்சி), இபிடி உடன் ஏபிஎஸ், எலக்ட்ரானிக் பார்க்கிங் ப்ரேக்குகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

Most Read Articles

English summary
World's cheapest EV This Nano EV with 300 kms range may cost less than Alto.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X