இந்தியாவில் மீண்டும் வளர்ச்சி பாதையில் வால்வோ கார்கள் விற்பனை!! அதிகம் விற்பனையாகும் வால்வோ கார் இதுதான்

கொரோனா இரண்டாவது அலையின் பரவல் நாடு முழுவதும் ஓரளவிற்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு விட்டாலும், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இன்னமும் பழைய நிலைக்கு திரும்ப தொடர்ந்து முயற்சித்து வருகின்றன.

இந்தியாவில் மீண்டும் வளர்ச்சி பாதையில் வால்வோ கார்கள் விற்பனை!! அதிகம் விற்பனையாகும் வால்வோ கார் இதுதான்

இருப்பினும் இதன் விளைவாக கடந்த 2021 ஜூன் மாத விற்பனையில் பெரும்பாலான வாகனங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டுள்ளன. வால்வோ கார் இந்தியா நிறுவனத்தை பொறுத்தவரையில், இந்த லக்சரி கார் தயாரிப்பு நிறுவனம் 2021ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் 52 சதவீத வளர்ச்சியை விற்பனையில் கண்டுள்ளது.

இந்தியாவில் மீண்டும் வளர்ச்சி பாதையில் வால்வோ கார்கள் விற்பனை!! அதிகம் விற்பனையாகும் வால்வோ கார் இதுதான்

கடந்த ஜனவரியில் இருந்து ஜூன் 30ஆம் தேதி வரையிலான இந்த அரையாண்டில் வால்வோ நிறுவனம் இந்தியாவில் கிட்டத்தட்ட அதன் 713 கார்களை விற்பனை செய்துள்ளது. அதுவே கடந்த 2020ஆம் ஆண்டின் இதே அரையாண்டு காலத்தில் 469 கார்களையே இந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

இந்தியாவில் மீண்டும் வளர்ச்சி பாதையில் வால்வோ கார்கள் விற்பனை!! அதிகம் விற்பனையாகும் வால்வோ கார் இதுதான்

இந்த வகையில் பார்த்தோமேயானால், வால்வோ விற்பனை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 52%, அதாவது 244 கார்கள் அதிகரித்துள்ளது. இதற்கு கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட ஊரடங்கு உத்தரவுகளே முழு காரணம் ஆகும்.

இந்தியாவில் மீண்டும் வளர்ச்சி பாதையில் வால்வோ கார்கள் விற்பனை!! அதிகம் விற்பனையாகும் வால்வோ கார் இதுதான்

ஏனெனில் இரண்டாவது அலை பரவலுக்கும் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. ஆனால் அவை எல்லாம் மாநிலங்கள் அளவிலேயே அமல்படுத்தப்பட்டன. ஆனால் கடந்த ஆண்டு மார்ச் மாத மத்தியில் மத்திய அரசு பிறப்பித்த ஊரடங்கு உத்தரவு நாடு தழுவிய அளவில் இருந்தது.

இந்தியாவில் மீண்டும் வளர்ச்சி பாதையில் வால்வோ கார்கள் விற்பனை!! அதிகம் விற்பனையாகும் வால்வோ கார் இதுதான்

இதனால் உள்நாட்டு விற்பனை மட்டுமின்றி வெளிநாட்டு சந்தைகளுக்கான ஏற்றுமதி பணிகளையும் ஆட்டோமொபைல் நிறுவனங்களால் மேற்கொள்ள முடியவில்லை. 2021ஆம் ஆண்டின் இந்த முதல் அரையாண்டில் சிறந்த விற்பனை வால்வோ மாடலாக எக்ஸ்சி60 நடுத்தர-அளவு லக்சரி எஸ்யூவி கார் விளங்குகிறது.

இந்தியாவில் மீண்டும் வளர்ச்சி பாதையில் வால்வோ கார்கள் விற்பனை!! அதிகம் விற்பனையாகும் வால்வோ கார் இதுதான்

விற்பனையில் முன்னேற்றம் கண்டது குறித்து வால்வோ கார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜோதி மல்ஹோத்ரா கருத்து தெரிவிக்கையில், அதிக மனச்சோர்வடைந்த நுகர்வோர் உண்ர்வு கட்டத்திலும், கொரோனா ஊரடங்கு உத்தரவுகளுக்கு மத்தியிலும் 52% வளர்ச்சியை கண்டிருப்பது இந்திய வாடிக்கையாளர்கள் வால்வோ பிராண்டின் மீது வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது.

இந்தியாவில் மீண்டும் வளர்ச்சி பாதையில் வால்வோ கார்கள் விற்பனை!! அதிகம் விற்பனையாகும் வால்வோ கார் இதுதான்

நிச்சயமற்ற நிலைமைகள் இருந்தபோதிலும் கூட, இந்த 2021ஆம் ஆண்டில் நாம் முன்னேறி, புதிய தயாரிப்புகளை வாடிக்கையாளர்களுக்காக கொண்டுவருவதால் நிறுவனத்திற்கு ஓர் வலுவான அடித்தளம் கிடைத்துள்ளது என கூறினார்.

இந்தியாவில் மீண்டும் வளர்ச்சி பாதையில் வால்வோ கார்கள் விற்பனை!! அதிகம் விற்பனையாகும் வால்வோ கார் இதுதான்

இதனால் விற்பனையில் இந்த முன்னேற்றம் அடுத்த அரையாண்டிற்கும் தொடரும் என வால்வோ இந்தியா நிறுவனம் நம்பிக்கையாக உள்ளது. இந்த அரையாண்டின் சிறந்த விற்பனை வால்வோ காரான எக்ஸ்சி60 லக்சரி எஸ்யூவியின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை தற்சமயம் ரூ.60.89 லட்சமாக உள்ளது.

இந்தியாவில் மீண்டும் வளர்ச்சி பாதையில் வால்வோ கார்கள் விற்பனை!! அதிகம் விற்பனையாகும் வால்வோ கார் இதுதான்

இந்திய சந்தையில் அடுத்ததாக வால்வோ கார்ஸ் நிறுவனம் இந்த வருட இறுதியில் எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலக்ட்ரிக் எஸ்யூவி காரை அறிமுகப்படுத்தவுள்ளது. இதனுடன் வால்வோ எஸ்90 செடான் மற்றும் எக்ஸ்சி60 எஸ்யூவி காரின் பெட்ரோல் வேரியண்ட்களும் நடப்பு 2021ஆம் ஆண்டி இரண்டாம் பாதியில் அறிமுகமாகவுள்ளன.

Most Read Articles

மேலும்... #வால்வோ #volvo
English summary
XC60 leads the sales Volvo registered 52 percent sales growth in first half of 2021.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X