இ-கார் உற்பத்தியில் Xiaomi! எப்போது அறிமுகமாகிறது தெரியுமா? எதிர்பார்த்திராத நேரத்தில் வெளியாகிய ஆச்சர்ய தகவல்

பிரபல செல்போன் தயாரிப்பு நிறுவனம் ஜியோமி (Xiaomi) இ கார் அறிமுகம் எப்போது என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. யாருமே எதிர்பார்த்திராத நேரத்தில் இதுகுறித்த தகவல் வெளியாகியிருக்கின்றது. மேலும் முக்கிய விபரங்களை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

இ-கார் உற்பத்தியில் Xiaomi... எப்போது அறிமுகமாகிறது தெரியுமா? எதிர்பார்த்திராத நேரத்தில் வெளியாகிய ஆச்சர்ய தகவல்!

பிரபல செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஜியோமி (Xiaomi), கார் உற்பத்தியில் களமிறங்க இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின. ஆனால், நிறுவனத்தின் கார் எப்போது அறிமுகமாகும் என்பது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை.

இ-கார் உற்பத்தியில் Xiaomi... எப்போது அறிமுகமாகிறது தெரியுமா? எதிர்பார்த்திராத நேரத்தில் வெளியாகிய ஆச்சர்ய தகவல்!

நிறுவனம் வாகன தயாரிப்பில் களமிறங்க இருப்பதாக வெளியாகிய தகவல் ஜியோமி செல்போன் பிரியர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில், நிறுவனத்தின் வாகனம் எப்போது அறிமுகமாகும் என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகியிருக்கின்றது.

இ-கார் உற்பத்தியில் Xiaomi... எப்போது அறிமுகமாகிறது தெரியுமா? எதிர்பார்த்திராத நேரத்தில் வெளியாகிய ஆச்சர்ய தகவல்!

ஜியோமி நிறுவனத்தின் முதல் கார் 2024ம் ஆண்டின் முதல் அரையாண்டிற்குள் அறிமுகமாகி விடும் என தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவை மையமாகக் கொண்டு ஸ்மார்ட் போன் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் ஜியோமி, மின் வாகன உற்பத்தியிலேயே களமிறங்கி இருக்கின்றது.

இ-கார் உற்பத்தியில் Xiaomi... எப்போது அறிமுகமாகிறது தெரியுமா? எதிர்பார்த்திராத நேரத்தில் வெளியாகிய ஆச்சர்ய தகவல்!

நிறுவனம், ஏற்கனவே மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதைத்தொடர்ந்து தனது வர்த்தகத்தை விரிவாக்கும் செய்யும் வகையில் நிறுவனம் மிக விரைவில் எலெக்ட்ரிக் கார்களையும் உற்பத்தி செய்ய இருப்பதாக அறிவித்திருந்தது.

இ-கார் உற்பத்தியில் Xiaomi... எப்போது அறிமுகமாகிறது தெரியுமா? எதிர்பார்த்திராத நேரத்தில் வெளியாகிய ஆச்சர்ய தகவல்!

இதற்காக நிறுவனம் பெரும் முதலீட்டைச் செய்ய இருப்பதாக அண்மயில் அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து, மின் வாகன உற்பத்தி பணியில் மிக தீவிரமாக ஈடுபடவும் ஜியோமி தொடங்கியது. இந்த நிலையிலேயே ஜியோமி மின்சார கார் 2024ம் ஆண்டில் அறிமகமாகும் என்ற தகவல் வெளியாகியிருக்கின்றது.

இ-கார் உற்பத்தியில் Xiaomi... எப்போது அறிமுகமாகிறது தெரியுமா? எதிர்பார்த்திராத நேரத்தில் வெளியாகிய ஆச்சர்ய தகவல்!

யாரும் எதிர்பார்த்திராத நேரத்தில் இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. உலகளவில் மின்சார வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே தனது எலெக்ட்ரிக் வாகனத்தின் வருகை பற்றிய தகவலை ஜியோமி வெளியிட்டிருக்கின்றது.

இ-கார் உற்பத்தியில் Xiaomi... எப்போது அறிமுகமாகிறது தெரியுமா? எதிர்பார்த்திராத நேரத்தில் வெளியாகிய ஆச்சர்ய தகவல்!

ஜியோமி உலகின் மிகப்பெரிய செல்போன் தயாரிப்பு நிறுவனம் ஆகும். மிக குறைவான விலையில் அதிக சிறப்பு வசதிகள் கொண்ட செல்போன்களை விற்பனைக்குக் களமிறக்கும் நிறுவனமாக இது இருக்கின்றது. ஆகையால், நிறுவனம் உருவாக்கி வரும் மின்சார காரும் குறைந்த விலையில், அதிக சிறப்பு வசதிகளைக் கொண்டதாக வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இ-கார் உற்பத்தியில் Xiaomi... எப்போது அறிமுகமாகிறது தெரியுமா? எதிர்பார்த்திராத நேரத்தில் வெளியாகிய ஆச்சர்ய தகவல்!

நிறுவனம் சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டில் மின்வாகன தயாரிப்பில் களமிறங்கியிருக்கின்றது. அடுத்த பத்து வருடங்களில் மின் வாகன சந்தையில் பெரும் புரட்சியை செய்யும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. மின் வாகன தயாரிப்பில் ஜியோமி நிறுவனம் மட்டுமே களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

இ-கார் உற்பத்தியில் Xiaomi... எப்போது அறிமுகமாகிறது தெரியுமா? எதிர்பார்த்திராத நேரத்தில் வெளியாகிய ஆச்சர்ய தகவல்!

லெனோவோ, ஆப்பிள் போன் உற்பத்தியாளர் ஃபாக்ஸ்கான் மற்றும் ஹூவாய் ஆகிய நிறுவனங்களும் மின் வாகன தயாரிப்பில் களமிறங்கியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. கூகுள் மற்றும் அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் தானியங்கி வாகனங்களை உற்பத்தி செய்யும் பணியில் களமிறங்கியுள்ளன.

இ-கார் உற்பத்தியில் Xiaomi... எப்போது அறிமுகமாகிறது தெரியுமா? எதிர்பார்த்திராத நேரத்தில் வெளியாகிய ஆச்சர்ய தகவல்!

இந்த வரிசையிலேயே சீனாவை மையமாகக் கொண்டு ஜியோமி இணைந்திருக்கின்றது. நிறுவனம் ஏற்கனவே ஸ்மார்ட்வாட்ச், ஏர் ப்யூரிஃபையர், எல்இடி டிவி, புரஜெக்டர், வேக்யூம் க்ளீனர், ப்ளூடூத் ஸ்பீக்கர், இன்டர்நெட் ரவுட்டர், பேக்-பேக்குகள், இயர்போன், இயர்பட்ஸ், எல்இடி மின் விளக்கு, சூட்கேஸ், செக்யூரிட்டி கேமிரா உள்ளிட்ட வீட்டு உபயோக மின்சாதன விற்பனையில் ஈடுபட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

English summary
Xiaomi cars entering timeline revealed
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X