மெக்கானிக்கின் கை வண்ணத்தில் லம்போர்கினி சூப்பர் காராக மாறிய மாருதி ஸ்விஃப்ட்! இந்த கார இப்படிகூட மாற்றலாமா?..

இளம் கார் மெக்கானிக் ஒருவர் மாருதி சுசுகி ஸ்விஃப்ட் காரை லம்போர்கினி சூப்பர் காராக மாற்றியிருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

மெக்கானிக்கின் கை வண்ணத்தில் லம்போர்கினி சூப்பர் காராக மாறிய மாருதி ஸ்விஃப்ட்... இந்த கார இப்படிகூட மாற்ற முடியுமா?

அசாம் மாநிலத்தின் கரிம்கஞ்ஜ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நுருல் ஹக் (Nurul Haque). 31 வயதான இவர் மோட்டார் வாகன மெக்கானிக்காக இருந்து வருகின்றார். இவரே, இந்தியர்களின் பிரியமான கார்களில் ஒன்றான மாருதி ஸ்விஃப்ட் காரை லம்போர்கினி சூப்பர் காரின் தோற்றத்திற்கு இணையாக மாற்றியவர் ஆவார்.

மெக்கானிக்கின் கை வண்ணத்தில் லம்போர்கினி சூப்பர் காராக மாறிய மாருதி ஸ்விஃப்ட்... இந்த கார இப்படிகூட மாற்ற முடியுமா?

இதற்காக அவர் ரூ. 6 லட்சம் வரை செலவு செய்திருப்பதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில செய்தி தளத்திடம் கூறியுள்ளார். மேலும், இந்த ஸ்விஃப்ட் காரில் இந்த உருமாற்றத்தை செய்ய 8 மாதங்கள் வரை எடுத்துக் கொண்டதாகவும் அழர் கூறியிருக்கின்றார்.

மெக்கானிக்கின் கை வண்ணத்தில் லம்போர்கினி சூப்பர் காராக மாறிய மாருதி ஸ்விஃப்ட்... இந்த கார இப்படிகூட மாற்ற முடியுமா?

உலகளவில் லம்போர்கினி நிறுவனத்தின் சூப்பர் கார்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகின்றது. இந்த நிறுவனத்தின் ஆரம்ப நிலை காரை வாங்கு வேண்டும் என்றாலும் குறைந்தது கோடி ரூபாய்களையாவது நாம் செலவு செய்ய வேண்டியிருக்கும். அந்தளவு உச்சபட்ச விலையில் லம்போர்கினி கார்கள் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றன.

மெக்கானிக்கின் கை வண்ணத்தில் லம்போர்கினி சூப்பர் காராக மாறிய மாருதி ஸ்விஃப்ட்... இந்த கார இப்படிகூட மாற்ற முடியுமா?

இந்நிலையால், தனக்கான லம்போர்கினி காரை தானே கார் மெக்கானிக் நுருள் வடிவமைத்திருக்கின்றார். இவர் ஓர் மிகப்பெரிய 'ஃபாஸ்ட் அண்ட் ப்யூரியஸ்' ஹாலிவுட் திரைப்பட ரசிகர் என கூறப்படுகின்றது. பங்கா பஜார் பகுதியில் கராஜ் ஒன்றை செயல்படுத்தி வருகின்றார்.

மெக்கானிக்கின் கை வண்ணத்தில் லம்போர்கினி சூப்பர் காராக மாறிய மாருதி ஸ்விஃப்ட்... இந்த கார இப்படிகூட மாற்ற முடியுமா?

Image Courtesy: OK North East/Facebook

இங்கு வைத்தே ஸ்விஃப்ட் காரை லம்போர்கினியாக அவர் மாற்றியிருக்கின்றார். ஹாலிவுட் திரைப்படங்கள் மீதிருந்த ஈர்ப்பு மட்டுமே நுருலின் இந்த செயலுக்கு காரணமாக கூறி விட முடியாது. ஏனெனில் அவருக்கு சூப்பர் கார்களான லம்போர்கினி மற்றும் ஃபெர்ராரி ஆகியவற்றின்மீதும் அதிகம் ஆர்வம் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

மெக்கானிக்கின் கை வண்ணத்தில் லம்போர்கினி சூப்பர் காராக மாறிய மாருதி ஸ்விஃப்ட்... இந்த கார இப்படிகூட மாற்ற முடியுமா?

இதுவும், அவர் மாருதி ஸ்விஃப்ட் காரை லம்போர்கினி காரின் உருவத்திற்கு மாற்ற காரணமாக அமைந்திருக்கின்றது. இதற்காக செகண்ட் ஹேண்ட் காரை அவர் வாங்கியதாகக் கூறப்படுகின்றது. இதனால்தான் ரூ. 6 லட்சம் என்ற அதிகபட்ச செலவு ஏற்பட்டிருக்கின்றது.

மெக்கானிக்கின் கை வண்ணத்தில் லம்போர்கினி சூப்பர் காராக மாறிய மாருதி ஸ்விஃப்ட்... இந்த கார இப்படிகூட மாற்ற முடியுமா?

உருமாற்றத்திற்காக அனைத்து பேனல்களையும் வெளியேற்றிய அவர், அதன் பின்னர் லம்போர்கினி கார்களுக்கு இணையான பேனல்களை அவரே உருவாக்கி பொருத்தியிருக்கின்றார். இதனால்தான் சூப்பர் காராக ஸ்விஃப்ட் மாறியிருக்கின்றது. இந்த செயலின் காரணமாக அசாம் மாநிலத்தில் பிரபலமான நபராக நுருல் மாறியிருக்கின்றார்.

மெக்கானிக்கின் கை வண்ணத்தில் லம்போர்கினி சூப்பர் காராக மாறிய மாருதி ஸ்விஃப்ட்... இந்த கார இப்படிகூட மாற்ற முடியுமா?

இந்தியாவில் மாடிஃபை செய்யப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். ஆகையால், உள்ளூர் நிர்வாகத்தின் அனுமதிக்கான கோரிக்கையை அவர் முன் வைத்திருக்கின்றார். "நிர்வாகத்திடம் இருந்து கோரிக்கைப் பெறப்படுமானால், நான் இன்னும் சில கார் மாடல்களை உருவாக்குவேன்" என நுருல் கூறியிருக்கின்றார்.

Most Read Articles

English summary
Young Mechanic Convers Old Maruti Swift Into 'Lamborghini'. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X