2.10 லட்சம் மக்கள் இந்த காருக்காக தான் தவம் கிடக்குறாங்க... இப்ப புக் பண்ணா 2 வருசம் கூட ஆகலாம்!

மஹிந்திராவின் ஸ்கார்பியோ என் மற்றும் எக்ஸ்யூவி 700 காரின் டெலிவரிக்காக 2.1 லட்சம் மக்கள் காத்திருக்கின்றனர்.

இந்தியாவில் எஸ்யூவி செக்மெண்டில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நிறுவனம் மஹிந்திரா தான். இந்நிறுவனம் வெளியிடும் எக்ஸ்யூவி 700, தார் மற்றும் ஸ்கார்பியோ என் ஆகிய கார்களுக்கு மார்கெட்டில் மவுசு அதிகம்.

2.10 லட்சம் மக்கள் இந்த காருக்காக தான் தவம் கிடக்குறாங்க... இப்ப புக் பண்ணா 2 வருசம் கூட ஆகலாம்!

இந்த கார்களை வாங்க மக்கள் வரிசை கட்டி நிற்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். இந்த நிறுவனத்திற்கு மார்கெட்டில் மிகச் சிறந்த பெயர் இருக்கிறது.இந்நிறுவனம் கடந்த நவம்பர் 1ம் தேதி தங்கள் கார்களுக்காக அனைத்து மாடல்களையும் சேர்த்து மொத்தம் 2.60 லட்சம் புக்கிங்கள் உள்ளது எனத் தெரிவித்திருந்தது.

அதன்படி இந்நிறுவனம் தார் காருக்கு 20 ஆயிரம் புக்கிங், எக்ஸ்யூவி 300 காருக்கு 13 ஆயிரம் புக்கிங், பலேரோ ரோஞ்ச் காருக்கு 13 ஆயிரம் புக்கிங், இந்நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்திய ஸ்கார்பியோ என் காருக்கு 1.30 லட்சம் புக்கிங், எக்ஸ்யூவி 700 காருக்க 80 ஆயிரம் புக்கிங் உள்ளது.

மஹிந்திரா நிறுவனம் தற்போது தனது ஆலையில் மாதம் 29 ஆயிரம் கார்களை தயாரிக்கும் திறனைக் கொண்டுள்ளது. இதை 2024ம் முடிவதற்குள் 49 ஆயிரம் கார்களை தயாரிக்கும் அளவுக்கு ஆலையை விரிவுபடுத்த முடி செய்துள்ளது.

தற்போது மஹிந்திரா நிறுவனத்தின் ஆலையில் மாதம் 5 ஆயிரம் எக்ஸ்யூவி 300 கார்கள், 6 ஆயிரம் ஸ்கார்பியோ என் கார்கள், 4 ஆயிரம் தார் கார்கள், 6 ஆயிரம் எக்ஸ்யூவி 700 கார்கள் என தயாரிக்கிறது. இதன் திறனை அதிகப்படுத்த மஹிந்திரா நிறுவனம் ரூ7900 கோடி பணத்தை முதலீடு செய்ய முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.

அதன்பின் மஹிந்திரா நிறுவனத்திற்கு 9500 எக்ஸ்யூவி 300 கார்கள், 10 ஆயிரம் ஸ்கார்பியோ என் கார்கள், 6000 தார் கார்கள், 10 ஆயிரம் எக்ஸ்யூவி 700 கார்களை தயாரிக்கும் திறன் பெற்றுவிடும் என எதிர்பார்க்கலாம். இதன் பின் மஹிந்திரா நிறுவனத்தின் கார்களுக்கான காத்திருப்பு காலம் வெகுவாக குறையும்.

இதற்கிடையில் மஹிந்திரா நிறுவனம் புதிதாக பலேரோ நியோ ப்ளஸ், எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக், தார் 5- டோர் வெர்ஷன் ஆகிய கார்களை விரைவில் அறிமுகப்படுத்த ஏற்பாடுகளைச் செய்துவருகிறது. சமீபத்தில் மஹிந்திரா தார் 5 டோர் வெர்ஷன் கார் இந்தியச் சாலைகளில் அவ்வப்போது டெஸ்டிங் செய்வதைப் பார்க்க முடிகிறது. இந்த கார் குறித்த அதிகமான தகவல்கள் இல்லை. ஆனால் எக்ஸ்ட்ரா கதவுகள் வந்த பின்பு சற்று பெரிதாக மாறியுள்ளது. மேலும் பெரிய வீல் பேஸ் உடன் அதிக இடவசதி கொண்ட காராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய 5 டோர் தார் காரில் 5 ஸ்போக் அலாய் வீல்கள் உள்ளன. வீல் ஆர்ச்கள் ஜீப் வேரங்க்ளர் காரை போல அமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் முகப்பு பகுதியில் மாற்றம் எதுவும் இல்லை 3 டோர் காரை போல தான் இதுவும் இருக்கிறது. 3 டோர் வேர்ஷனில 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இது 150 பிஎச்பி பவரையும் 320 என்எம் டார்க் திறனையும், வெளிப்படுத்தும், டீசல் இன்ஜினை பொருத்தவரை 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 130 பிஎஸ் பவரையும் 320 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இரண்டு இன்ஜினிலும் ஆட்டோமெட்டிக் மற்றும் மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் உள்ளன.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
2 lakh booking on Mahindra car waiting for delivery
Story first published: Friday, November 18, 2022, 10:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X