20 இன்ச் (அ) 18 இன்ச் எந்த அளவு டயர் உங்க காருக்கு பொருத்தமானது? கவர்ச்சிக்காக போய் மாட்டிக்காதீங்க!

20 அங்குலம் அல்லது 18 அங்குலம் எந்த அளவுள்ள டயர் உங்களின் காருக்கு சிறந்தது என்பது பற்றிய விபரத்தையே இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

20 இன்ச் அல்லது 18 இன்ச் எந்த அளவு டயர் உங்க காருக்கு பொருத்தமானது... டயரை மாத்துறதுக்கு முன்னாடி இத ஒரு முற பாத்திடுங்க!

18 அங்குல டயரை பொருத்த வேண்டிய காரில் ஒரு சிலர் 20 அங்குல டயர்களை பொருத்துவதை நாம் பார்த்திருப்போம். இந்த மாற்றம் தங்களின் காருக்கு சற்றே முரட்டுத் தனமான தோற்றத்தையும், இயக்க அனுபவத்தையும் வழங்குவதாக எண்ணுகின்றனர். அதுமட்டுமின்றி, காரின் உயரமும் லேசாக அதிகரிக்கும், சவாரி அனுபவமும் சற்று வித்தியாசமானதாக இருக்கும் என அவர்கள் நினைக்கின்றனர்.

20 இன்ச் அல்லது 18 இன்ச் எந்த அளவு டயர் உங்க காருக்கு பொருத்தமானது... டயரை மாத்துறதுக்கு முன்னாடி இத ஒரு முற பாத்திடுங்க!

ஆனால், இவ்வாறு செய்வதன் வாயிலாக ஏதேனும் பிரச்னை வருமா என எவரும் ஆராய்வதில்லை. இதுகுறித்த தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதாவது, உங்க எஸ்யூவி காருக்கு 18 இன்ச் டயர் சிறந்ததா அல்லது 20 இன்ச் டயர் சிறந்ததா என்பது பற்றிய தகவலையே பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

20 இன்ச் அல்லது 18 இன்ச் எந்த அளவு டயர் உங்க காருக்கு பொருத்தமானது... டயரை மாத்துறதுக்கு முன்னாடி இத ஒரு முற பாத்திடுங்க!

20 அங்குல வீல் மற்றும் டயரில் உள்ள நன்மைகள்:

உங்கள் காரில் 20 அங்குல டயரை மாற்றப் போகிறீர்கள் என்றால், முதலில் உங்கள் கார் உற்பத்தியாளர் வழங்கியிருக்கும் வழிக்காட்டுதல் புத்தகத்தை பார்த்துவிடுவது நல்லது. நீங்கள் பயன்படுத்தும் கார் 20 அங்குல டயர் மற்றும் வீலை சமாளிக்குமா என்பது பற்றிய தகவல் அந்த மேனுவல் புத்தகத்தில் வழங்கப்பட்டிருக்கும்.

மேலும், என்னென்ன வழிகளில் அந்த வீலை மாற்றலாம் என்பதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டிருக்கும். இந்த வழிகாட்டுதல்களின்படி வீல் மற்றும் டயரை மாற்றும்பட்சத்தில் கிடைக்கும் நன்மைகளின் பட்டியலையே கீழ்வருமாறு பார்க்க உள்ளோம்.

20 இன்ச் அல்லது 18 இன்ச் எந்த அளவு டயர் உங்க காருக்கு பொருத்தமானது... டயரை மாத்துறதுக்கு முன்னாடி இத ஒரு முற பாத்திடுங்க!

நன்மைகள்:

முரட்டுத் தனமான தோற்றம்:

பெரிய உருவம் கொண்ட எஸ்யூவி ரக கார்களின் தோற்றத்தை சற்றே மாறுபட்டதாக மாற்ற வேண்டும் என நினைப்பவர்கள் 20 அங்குல வீல் மற்றும் டயரை பயன்படுத்தலாம். உதாரணமாக, ஃபார்ச்சூனர், என்டீயோவர் மற்றும் ஹாரியர் போன்ற பெரிய உருவம் கொண்ட கார்களின் உரிமையாளர் நிறுவனம் வழங்கியிருக்கும் வழிகாட்டுத்தலின்படி20 இன்ச் வீலை மாற்றிக் கொள்ளலாம். இதன் வாயிலாக அக்காருக்கு முரட்டுத் தனமான தோற்றம் கிடைக்கும். அதுமட்டுமின்றி முன்பைக் காட்டிலும் சற்று அதன் உயரத்தையும் கூட்டிக் கொள்ள முடியும். இவையே 20 அங்குல வீலை மாற்றுவதன் வாயிலாக கிடைக்கும் நன்மைகள் ஆகும்.

20 இன்ச் அல்லது 18 இன்ச் எந்த அளவு டயர் உங்க காருக்கு பொருத்தமானது... டயரை மாத்துறதுக்கு முன்னாடி இத ஒரு முற பாத்திடுங்க!

கூடுதல் கட்டுப்பாடு:

20 அங்குல டயர்கள் பொதுவாக சிறிய பக்கவாட்டைக் கொண்டவை ஆகும். இதன் காரணத்தினால் அவை சாலையில் ஒப்பீடு செய்யப்பட்டதைக் காட்டிலும் அதிக விறைப்புத் தன்மையுடன் செயல்படும். இதுவும் 20 அங்குல வீீலின் வாயிலாகக் கிடைக்கும் நன்மையே ஆகும்.

20 இன்ச் அல்லது 18 இன்ச் எந்த அளவு டயர் உங்க காருக்கு பொருத்தமானது... டயரை மாத்துறதுக்கு முன்னாடி இத ஒரு முற பாத்திடுங்க!

20 அங்குல டயரினால் ஏற்படும் தீமைகள்:

முடுக்கம் குறைபடலாம்:

விட்டம் மற்றும் எடை ஆகிய இரண்டும் 20 அங்குல வீலில் அதிகம் என்பதால் காரின் முடுக்கம் திறன் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம். மேலும், எஞ்ஜினை இது அதிகமாக உழைக்கச் செய்யும். இது மிக மிக குறைவாக தெரியும் என்பதால் உங்களால் இந்த பாதிப்பை உங்களால் கவனிக்கவே முடியாது.

20 இன்ச் அல்லது 18 இன்ச் எந்த அளவு டயர் உங்க காருக்கு பொருத்தமானது... டயரை மாத்துறதுக்கு முன்னாடி இத ஒரு முற பாத்திடுங்க!

கம்ஃபோர்ட்டும் குறைவு:

20 அங்குல டயரின் பக்கவாட்டு பகுதி குறைவு என்பதால் பள்ளம், மேடு நிறைந்த சாலைகளில் பயணிக்கும்போது அசௌகரியமான உணர்வு அசால்டாக தெரிய வரும். இந்த விஷயத்தை கருத்தில் கொண்டால் 20 அங்குல டயர் சிறந்த தேர்வாக இருக்காது என்பது தெளிவாகத் தெரிகின்றது. ஆம், இது தோற்றம் விஷயத்தில் மட்டுமே பிளஸ்ஸாக இருக்கும்.

20 இன்ச் அல்லது 18 இன்ச் எந்த அளவு டயர் உங்க காருக்கு பொருத்தமானது... டயரை மாத்துறதுக்கு முன்னாடி இத ஒரு முற பாத்திடுங்க!

18 அங்குல டயரின் மற்றும் வீலின் நன்மைகள்:

வசதியான சவாரியை பெற்றுக் கொள்ள முடியும்:

18 அங்குல டயர்களின் பக்கவாட்டு பகுதி பெரிதாக இருக்கும். அகையால், நெகிழ்வு தன்மை சற்று அதிகமாக இருக்கும். இதன் விளைவு 18 அங்குல டயர் அதிர்வுகளை தவிர்க்கும். அதிர்வுகளை மட்டுமல்ல பள்ளம், மேடுகளை சமாளிக்கும் திறன் இதன் வாயிலாக தானாக கிடைக்கும்.

20 இன்ச் அல்லது 18 இன்ச் எந்த அளவு டயர் உங்க காருக்கு பொருத்தமானது... டயரை மாத்துறதுக்கு முன்னாடி இத ஒரு முற பாத்திடுங்க!

எந்திரத்தின் செயல்பாட்டில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது:

18 அங்குல டயர் குறைந்த எடையைக் கொண்டிருக்கின்ற காரணத்தினால் இதன் இழுவை தன்மை மிக சிறந்ததாக இருக்கும். இத்துடன், நல்ல கன்ட்ரோலையும் நம்மால் பெற்றுக் கொள்ள முடியும்.

20 இன்ச் அல்லது 18 இன்ச் எந்த அளவு டயர் உங்க காருக்கு பொருத்தமானது... டயரை மாத்துறதுக்கு முன்னாடி இத ஒரு முற பாத்திடுங்க!

18 அங்குல டயர் மற்றும் வீலில் காணப்படும் தீமைகள்:

அழகு சற்று குறைவு:

20 அங்குல டயரைப் போல் வாகனத்தை அழகானதாக காட்ட 18 வீல் மற்றும் டயர் தவறிவிடுகின்றன. எனவே உங்கள் வாகனம் மிகவும் வழக்கமான ஒன்றாகவே காட்சியளிக்கும். பெரிய பிக்-அப் டிரக் மற்றும் எஸ்யூவி கார்களைகூட இந்த டயர் மிகுந்த சாதாரணமான காராகவே அது காண்பிக்கும்.

Most Read Articles
English summary
20 inch tires vs 18 inch tires
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X