Just In
- 9 min ago
இந்தியாவின் கடைசி போலோ கார் டெலிவரி வழங்கப்பட்டது... சோகத்தில் மூழ்கிய ஃபோக்ஸ்வேகன் நிர்வாகம்!
- 1 hr ago
காலி பால்பாக்கெட்டிற்கு தள்ளுபடி விலையில் பெட்ரோல் / டீசல்... அசத்தும் தொழிலதிபர்...
- 2 hrs ago
விபத்தில் சிக்கிய பாடகியின் டாடா பஞ்ச் கார்... ஹைலைட் என்னனா அவங்களுக்கு சின்னத ஒரு கீரல்கூட ஏற்படல!
- 13 hrs ago
விமான பணிப்பெண்களுக்கு இவ்ளோ சம்பளம் தர்றாங்களா! இத்தன சலுகைகள் வேற இருக்கா! இதுக்கெல்லாம் குடுப்பினை வேணும்!
Don't Miss!
- News
ஆஹா இது தெரியாம போச்சே.. "ரக்கர்ட் பாய்ஸ்"னா யாரு? அவங்களைதான் பொண்ணுங்களுக்கு ரொம்ப பிடிக்குமாம்!
- Technology
5.8-இன்ச் டிஸ்பிளேவுடன் விரைவில் அறிமுகமாகும் சூப்பரான Samsung போன்.!
- Finance
தங்கம் விலை இன்று எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா.. இது வாங்க சரியான நேரம் தான்!
- Movies
முதல் ரவுண்டில் ப்ளாக் பஸ்டர் கொடுத்த டாப் ஹீரோஸ்: இரண்டாவது ரவுண்ட்ல சக்சஸ் பண்ண முடிஞ்சுதா?
- Sports
காமன்வெல்த்-ல் அனல்பறந்த குத்தாட்டம்.. அரங்கையே ஆட வைத்த தமிழர்கள்.. சர்வதேச அளவில் பெருமை - வீடியோ!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய ஒப்பந்தம் எதையும் செய்திடாமல் இருப்பது நல்லது...
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
இந்த காருக்கு இவ்ளோ பெரிய வரவேற்பா? அதுக்குள்ள இத்தன பேருக்கு டெலிவரி பண்ணீட்டாங்களா? என்னங்க சொல்றீங்க?
இந்திய சந்தையில் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த கார்களில் ஒன்று ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் (Volkswagen Virtus). செடான் ரகத்தை சேர்ந்த காரான ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ், இந்திய சந்தையில் கடந்த ஜூன் 9ம் தேதிதான் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு சுமார் 20 நாட்கள் மட்டுமே ஆகின்றன.

அதற்குள்ளாக இந்தியா முழுவதும் 2 ஆயிரம் விர்டுஸ் கார்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்து விட்டதாக ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அறிவித்துள்ளது. இது தற்போது வரை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்பட்டுள்ள ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் கார்களின் எண்ணிக்கை ஆகும். இந்திய வாடிக்கையாளர்களிடம் இந்த காருக்கு கிடைத்துள்ள வரவேற்பை இது எடுத்து காட்டுகிறது.

ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரின் ஆரம்ப விலை 11.21 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 17.91 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் கார் மொத்தம் 4 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.

அவை கம்ஃபோர்ட்லைன் (Comfortline), ஹைலைன் (Highline), டாப்லைன் (Topline) மற்றும் ஜிடி ப்ளஸ் (GT Plus) வேரியண்ட்கள் ஆகும். ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரில் ஏராளமான ஹைலைட்கள் இருக்கின்றன. இதில், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வசதிகளுடன் கூடிய 10 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் முக்கியமானது.

மேலும் 16 இன்ச் அலாய் வீல்கள், எல்இடி ஹெட்லேம்ப்கள், எலெக்ட்ரிக் சன்ரூஃப், வயர்லெஸ் மொபைல் போன் சார்ஜர் மற்றும் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே ஆகிய அம்சங்களும் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் செடான் காரில் இடம்பெற்றுள்ளன. அத்துடன் இந்த காரின் முன் பகுதியில் வென்டிலேட்டட் இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

செயல்திறனை பொறுத்தவரை, ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரில், 2 இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. அவை 1.0 லிட்டர் டிஎஸ்ஐ மற்றும் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ இன்ஜின்கள் ஆகும். இதில், 1.0 லிட்டர் இன்ஜின் 114 பிஹெச்பி பவரையும், 178 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். அதே சமயம் 1.5 லிட்டர் இன்ஜின் அதிகபட்சமாக 148 பிஹெச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் செடான் காரில், 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மற்றும் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இந்திய சந்தையில் ஸ்கோடா ஸ்லாவியா (Skoda Slavia), மாருதி சுஸுகி சியாஸ் (Maruti Suzuki Ciaz) மற்றும் ஹோண்டா சிட்டி (Honda City) போன்ற செடான் கார்களுடன் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் செடான் போட்டியிட்டு வருகிறது.

ஃபோக்ஸ்வேகன் குழுமத்தில் இருந்து சமீப காலமாக வெளிவரும் அனைத்து கார்களுக்கும் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq), ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) ஆகிய 3 கார்களுமே தற்போது வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக ஆதரவை பெற்று வருகின்றன.

இந்த வரிசையில் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை போலவே ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காருக்கும் தற்போது இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியுள்ளது. எனவே வரும் மாதங்களில் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் கார் ஒவ்வொரு மாதமும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

ஏற்கனவே ஸ்கோடா குஷாக், ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஆகிய 3 கார்களுமே ஒவ்வொரு மாதமும் மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து அசத்தி கொண்டுள்ளன. தற்போது ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் செடான் காரும் 'பார்ட்டியில்' இணைந்துள்ளது. ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் ஆகிய இரண்டு நிறுவனங்களும் வரும் காலங்களில் இன்னும் நிறைய கார்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளன.

இதில் எலெக்ட்ரிக் கார்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இந்திய சந்தையில் தற்போது எலெக்ட்ரிக் கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. எனவே இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்வதற்கு ஸ்கோடா போன்ற நிறுவனங்கள் அதிரடியாக திட்டமிட்டுள்ளன.
-
டொயோட்டாவை கீழே தள்ளி நம்பர் 1 இடத்தை பிடிக்கப்போகும் டெஸ்லா... எலான் மஸ்கின் "மாஸ்" திட்டம்...
-
இந்த செக்மெண்ட்ல இப்போ டாடாதான் கிங்... 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கி இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த கார் முதலிடம்!
-
பயணியிடம் விமான பணிப்பெண்கள் முதலில் கவனிக்கும் விஷயம் இதுதான்!! இத்தனை நாள் இது தெரியாம போச்சே!