சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

இந்திய சந்தையில் விற்பனையாகி கொண்டுள்ள மிகவும் பிரீமியமான கார்களில் ஒன்று சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் (Citroen C5 Aircross). இது எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இதன் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலை சிட்ரோன் நிறுவனம் இந்திய சந்தையில் தற்போது அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

இதன் விலை 36.67 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும்.பழைய மாடலுடன் ஒப்பிடும்போது, புதிய மாடலின் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் வசதிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் தக்க வைக்கப்பட்டுள்ளது.

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

இந்திய சந்தையில் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய தலைமுறை ஹூண்டாய் டூஸான் (New-gen Hyundai Tucson), ஜீப் காம்பஸ் (Jeep Compass) மற்றும் ஃபோக்ஸ்வேகன் டிகுவான் (Volkswagen Tiguan) ஆகிய கார்களுடன், சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி கார் விற்பனையில் தொடர்ந்து போட்டியிடும்.

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

சிட்ரோன் நிறுவனம் தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் 2 கார்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. ஒன்று சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ். மற்றொன்று சிட்ரோன் சி3 (Citroen C3). இதில், சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவிதான் இந்திய சந்தையில் சிட்ரோன் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்த முதல் கார் ஆகும். சி3 கார் சமீபத்தில்தான் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

சரி, சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு வருவோம். வெளிப்புறத்தை பொறுத்தவரையில், புதிதாக டிசைன் செய்யப்பட்ட 18 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், அப்டேட் செய்யப்பட்ட எல்இடி டெயில்லேம்ப்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. உட்புறத்தை பொறுத்தவரையில், சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காரில் முதலில் 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம்தான் வழங்கப்பட்டு வந்தது.

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

ஆனால் தற்போது அதற்கு பதிலாக பெரிய 10 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இது ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆகியவற்றை சப்போர்ட் செய்யும். அதேபோல் இந்த காரில் கிடைமட்டமான ஏசி வெண்ட்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இதுதவிர இந்த காரில் வழங்கப்பட்டுள்ள வசதிகளை இன்னும் அடுக்கி கொண்டே போகலாம்.

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

இதில், அப்டேட் செய்யப்பட்ட 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், புதிய சீட் அப்ஹோல்ஸ்ட்ரி, ட்யூயல்-ஸோன் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், பனரோமிக் சன்ரூஃப், 6 ஏர்பேக்குகள் மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட், கீலெஸ் எண்ட்ரி மற்றும் ஸ்டார்ட், ஹில் டெசண்ட் கண்ட்ரோல், ரியர் பார்க்கிங் கேமரா மற்றும் பிளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங் சிஸ்டம் ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை.

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

ஆனால் நாங்கள் ஏற்கனவே கூறியபடி இன்ஜின் ஆப்ஷன்களில் மாற்றங்கள் செய்யப்படவில்லை. முந்தைய மாடலில் இருந்த அதே 2.0 லிட்டர், நான்கு-சிலிண்டர், டீசல் இன்ஜின் ஆப்ஷன்தான் புதிய மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 3,750 ஆர்பிஎம்மில் 177 ஹெச்பி பவரையும், 2,000 ஆர்பிஎம்மில் 400 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் ஒரே ஒரு கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது. அது 8 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆகும்.

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

இப்படி பல்வேறு அப்டேட்கள் செய்யப்பட்டுள்ள காரணத்தால், ஃபேஸ்லிஃப்ட்டிற்கு முந்தைய மாடலுடன் ஒப்பிடும்போது சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காரின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்லிஃப்ட்டிற்கு முந்தைய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி கார் ஷைன் (Shine) மற்றும் ஃபீல் (Feel) ஆகிய வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைத்து வந்தது. ஆனால் தற்போதைய ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஷைன் வேரியண்ட்டில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும்.

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காரில் தற்போது பல்வேறு அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளதால், வரும் மாதங்களில் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிட்ரோன் நிறுவனத்தின் சி3 கார் விலை குறைவான மாடலாக உள்ள நிலையில், சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி மிகவும் விலை உயர்ந்த பிரீமியம் மாடலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

Most Read Articles
மேலும்... #சிட்ரோன் #citroen
English summary
2022 citroen c5 aircross facelift launched in india
Story first published: Thursday, September 8, 2022, 14:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X