கியாவில் எந்த காரை வாங்கலாம்? செல்டோஸா? அல்லது கேரன்ஸா? தேர்வு செய்யும்முன் இவற்றை தெரிஞ்சிக்கோங்க...

தென்கொரிய கார் தயாரிப்பு நிறுவனமான கியா இந்தியாவில் செல்டோஸ் எஸ்யூவியின் மூலம் நுழைந்தது. செல்டோஸ் கியாவிற்கு இந்திய சந்தையில் நிலையான ஓர் இடத்தை பெற்று தந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல், கேரன்ஸ் கியாவின் சமீபத்திய வெற்றிக்கரமான மாடலாக உருவெடுத்துள்ளது.

கியாவில் எந்த காரை வாங்கலாம்? செல்டோஸா? அல்லது கேரன்ஸா? தேர்வு செய்யும்முன் இவற்றை தெரிஞ்சிக்கோங்க...

இதனால் இந்த இரு கியா கார்களில் எதனை தேர்வு செய்வது என்கிற குழப்பம் உங்களுக்கு ஏற்படலாம்... செல்டோஸ் & கேரன்ஸ் கார்களின் முக்கிய சிறப்பம்சங்களை இந்த செய்தியில் கூறிவிடுகிறோம். உங்களுக்கு எது சரியானதாக இருக்கும் என்பதை அறிந்து அதனை தேர்வு செய்ய பாருங்கள்.

கியாவில் எந்த காரை வாங்கலாம்? செல்டோஸா? அல்லது கேரன்ஸா? தேர்வு செய்யும்முன் இவற்றை தெரிஞ்சிக்கோங்க...

விலை

கியாவின் நடுத்தர-அளவு எஸ்யூவி காராக விளங்கும் செல்டோஸின் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.12.18 லட்சத்தில் இருந்து ரூ.22.05 லட்சம் வரையில் உள்ளன. அதுவே நமது சென்னையில் செல்டோஸின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.12.70 லட்சத்தில் இருந்து ரூ.22.53 லட்சம் வரையில் உள்ளன.

கியாவில் எந்த காரை வாங்கலாம்? செல்டோஸா? அல்லது கேரன்ஸா? தேர்வு செய்யும்முன் இவற்றை தெரிஞ்சிக்கோங்க...

கடந்த பிப்ரவரி மாதத்தில் கியாவின் மலிவான எம்பிவி காராக அறிமுகப்படுத்தப்பட்ட கேரன்ஸின் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.11.30 லட்சத்தில் இருந்து ரூ.21.40 லட்சம் வரையில் உள்ளது. அதுவே சென்னையில் கேரன்ஸின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.11.60 லட்சத்தில் இருந்து ரூ.21.84 லட்சம் வரையில் உள்ளன. இந்த வகையில் பார்த்தோமேயானால், செல்டோஸை காட்டிலும் கேரன்ஸ் சற்று விலை குறைவானதாக உள்ளது.

கியாவில் எந்த காரை வாங்கலாம்? செல்டோஸா? அல்லது கேரன்ஸா? தேர்வு செய்யும்முன் இவற்றை தெரிஞ்சிக்கோங்க...

என்ஜின்

செல்டோஸில் இரு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என்ஜின் தேர்வுகளை கியா நிறுவனம் வழங்குகிறது. இதில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 115 எச்பி மற்றும் 144 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாகவும், 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் 140 எச்பி மற்றும் 242 என்எம் டார்க் திறன் வரையிலும் வெளிப்படுத்தக்கூடியதாகவும் உள்ளது. 1.5 லிட்டர் டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 115 பிஎச்பி மற்றும் 250 என்எம் வரையில் காருக்கு வழங்கக்கூடியதாக உள்ளது.

கியாவில் எந்த காரை வாங்கலாம்? செல்டோஸா? அல்லது கேரன்ஸா? தேர்வு செய்யும்முன் இவற்றை தெரிஞ்சிக்கோங்க...

கேரன்ஸிலும் செல்டோஸில் வழங்கப்படுகின்ற 3 என்ஜின் தேர்வுகள் தான் கொடுக்கப்படுகின்றன. ஆனால் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வித்தியாசப்படுகின்றன. செல்டோஸில் 6-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு ஐஎம்டி & சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. செல்டோஸ் பெட்ரோல் காரை இந்த 3 கியர்பாக்ஸில் ஏதேனும் ஒன்றுடன் வாங்கலாம். ஆனால் கேரன்ஸ் பெட்ரோல் காரை 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் மட்டுமே வாங்க முடியும்.

கியாவில் எந்த காரை வாங்கலாம்? செல்டோஸா? அல்லது கேரன்ஸா? தேர்வு செய்யும்முன் இவற்றை தெரிஞ்சிக்கோங்க...

சிறப்பம்சங்கள்

கியா செல்டோஸ் & கேரன்ஸில் 16-இன்ச் சக்கரங்கள் பொருத்தப்படுகின்றன. அதேநேரம் செல்டோஸின் எக்ஸ்-லைன் வெர்சனில் 18-இன்ச்சில் அலாய் சக்கரங்கள் வழங்கப்படுகின்றன. செல்டோஸின் முன் & பின்பக்கத்தில் ஸ்கிட் பிளேட்கள், பின்பக்க மேற்கூரையில் ஸ்பாய்லர், சுறா துடுப்பு வடிவிலான ஆண்டென்னா பொருத்தப்படுகின்றன. கேரன்ஸில் ரூஃப் ரெயில்கள், க்ரோம்-ஆல் ஆன கதவு கைப்பிடிகள் மற்றும் எலக்ட்ரிக் சன்ரூஃப் வழங்கப்படுகிறது.

கியாவில் எந்த காரை வாங்கலாம்? செல்டோஸா? அல்லது கேரன்ஸா? தேர்வு செய்யும்முன் இவற்றை தெரிஞ்சிக்கோங்க...

செல்டோஸின் உட்புறத்தில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஸ்டேரிங் சக்கரம், புறா ஊதா கதிர்களை தடுக்கும் ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் 8 விதங்களில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை & க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவையும், கேரன்ஸில் 10.25 இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பு, அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஸ்டேரிங் சக்கரம் மற்றும் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்களுக்கு பெடல் ஷிஃப்டர்கள் போன்றவையும் பொருத்தப்படுகின்றன.

கியாவில் எந்த காரை வாங்கலாம்? செல்டோஸா? அல்லது கேரன்ஸா? தேர்வு செய்யும்முன் இவற்றை தெரிஞ்சிக்கோங்க...

நிறை & குறைகள்

கியா செல்டோஸில் நிறை என்று பார்த்தால், அதிக எண்ணிக்கையில் வசதிகள், ப்ரீமியம் தரத்திலான கேபின், ஏகப்பட்ட என்ஜின் & கியர்பாக்ஸ் தேர்வுகள் உள்பட முக்கியமான பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்படுகின்றன. செல்டோஸின் முக்கியமான குறையாக அதன் விலையை தான் கூற வேண்டும். மற்ற நடுத்தர-அளவு எஸ்யூவி கார்களுடன் ஒப்பிடுகையில் செல்டோஸின் விலை சற்று அதிகமாக உள்ளது.

கியாவில் எந்த காரை வாங்கலாம்? செல்டோஸா? அல்லது கேரன்ஸா? தேர்வு செய்யும்முன் இவற்றை தெரிஞ்சிக்கோங்க...

கேரன்ஸிலும் எம்பிவி உடலமைப்பை கொண்ட காராக இருப்பதால், கேபினில் போதுமான இடவசதி கிடைக்கிறது. அதேபோல் செயல்முறைக்கு ஏற்ற வசதிகளும் கொடுக்கப்படுகின்றன. மேலும் என்ஜின் தேர்வுகளில் எந்த குறையும் இல்லை. ஆனால் பெட்ரொல் வேரியண்ட் உடன் ஒரேயொரு கியர்பாக்ஸ் தேர்வு மட்டுமே வழங்கப்படுகிறது. அதேபோல் குறைவான விலைக்காக சில தொழிற்நுட்ப அம்சங்கள் கேரன்ஸில் தவிர்க்கப்படுகின்றன.

Most Read Articles
மேலும்... #கியா #kia
English summary
2022 kia seltos vs 2022 carens comparision
Story first published: Friday, September 16, 2022, 20:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X