புதிய அப்டேட்களுடன் 2022 கியா சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி கார் அறிமுகம்!! விலை ரூ.30,000 வரையில் அதிகரிப்பு!

2022 கியா சொனெட் புதிய வசதிகள், நிறத்தேர்வுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய அப்டேட்களுடன் 2022 கியா சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி கார் அறிமுகம்!! விலை ரூ.30,000 வரையில் அதிகரிப்பு!

இந்திய பயணிகள் கார்கள் சந்தையில் பலத்த போட்டி மிகுந்த பிரிவாக காம்பெக்ட் எஸ்யூவி விளங்கி வருகிறது. இதனால் இந்த பிரிவில் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி கார் பிராண்ட்களும் குறைந்தது ஒரு மாடலையாவது கொண்டுள்ளன. மேலும் இதனாலேயே இந்த பிரிவில் ஒவ்வொரு மாடல்களும் அவ்வப்போது அப்டேட்டை பெற்றுவிடுகின்றன.

புதிய அப்டேட்களுடன் 2022 கியா சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி கார் அறிமுகம்!! விலை ரூ.30,000 வரையில் அதிகரிப்பு!

இந்த வகையில், தென்கொரிய முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான கியா இந்திய சந்தையில் சில அப்டேட்களுடன் 2022 சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி காரை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய சொனெட்டின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.7.15 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அதிகப்பட்ச எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.13.79 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய அப்டேட்களுடன் 2022 கியா சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி கார் அறிமுகம்!! விலை ரூ.30,000 வரையில் அதிகரிப்பு!
Sonet P 1.2 New Price Old Price Difference
HTE 5MT ₹7,15,000 ₹6,95,000 ₹20,000
HTK 5MT ₹8,15,000 ₹7,95,000 ₹20,000
HTK+ 5MT ₹9,05,000 ₹8,79,000 ₹26,000
Sonet P 1.0 New Price Old Price Difference
HTK+ iMT ₹9,99,000 ₹9,89,000 ₹10,000
HTX iMT ₹10,79,000 ₹10,49,000 ₹30,000
HTX AE iMT ₹11,19,000 ₹10,89,000 ₹30,000
HTX 7 DCT ₹11,39,000 ₹11,09,000 ₹30,000
HTX AE 7 DCT ₹11,79,000 ₹11,49,000 ₹30,000
HTX+ iMT ₹12,09,000 ₹11,89,000 ₹20,000
GTX+ iMT ₹12,45,000 ₹12,35,000 ₹10,000
GTX+ 7DCT ₹13,09,000 ₹12,99,000 ₹10,000
Sonet D 1.5 New Price Old Price Difference
HTE 6MT ₹8,89,000 ₹8,65,000 ₹24,000
HTK 6MT ₹9,69,000 ₹9,59,000 ₹10,000
HTK+ 6MT ₹10,35,000 ₹10,09,000 ₹26,000
HTX 6MT ₹11,19,000 ₹10,89,000 ₹30,000
HTX AE 6MT ₹11,59,000 ₹11,29,000 ₹30,000
HTX 6AT ₹11,99,000 ₹11,69,000 ₹30,000
HTX AE 6AT ₹12,39,000 ₹12,09,000 ₹30,000
HTX+ 6MT ₹12,49,000 ₹12,39,000 ₹10,000
GTX+ 6MT ₹12,85,000 ₹12,85,000 0
GTX+ 6AT ₹13,69,000 ₹13,59,000 ₹10,000

இவை சொனெட்டின் முந்தைய எக்ஸ்-ஷோரூம் விலைகளை காட்டிலும் ரூ.30,000 வரையில் வேரியண்ட்டை பொறுத்து அதிகமாகும். ஏற்கனவே கூறியதுபோல், இந்த விலை உயர்விற்கு ஏற்ப சில அப்டேட்டான வசதிகளை இந்த கியா காம்பெக்ட் எஸ்யூவி கார் பெற்றுள்ளது. இதன்படி சொனெட்டின் ஆரம்ப நிலை எச்டிஇ வேரியண்ட் புதியதாக டயர்களின் அழுத்தத்தை கண்காணிக்கும் அமைப்பு மற்றும் பக்கவாட்டு காற்றுப்பைகளை பெற்றுள்ளது.

புதிய அப்டேட்களுடன் 2022 கியா சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி கார் அறிமுகம்!! விலை ரூ.30,000 வரையில் அதிகரிப்பு!

இவற்றுடன் வெள்ளை நிற தையல்களுடன் செமி-லெதர் இருக்கைகள் மற்றும் பின்பக்க இருக்கை வரிசையிலும் மடக்கூடிய க்னாப் போன்றவற்றையும் இந்த விலை குறைவான சொனெட் வேரியண்ட் ஏற்றுள்ளது. இதற்கடுத்த எச்டிகே வேரியண்ட்டிற்கு எந்த அப்டேட்டும் இல்லை. அடுத்த எச்டிகே+ (டர்போ ஐஎம்டி வேரியண்ட்)-விற்கு எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், , வாகன ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், மலைத்தொடர்களில் ஏறுவதற்கான கண்ட்ரோல் மற்றும் பிரேக் உதவி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

புதிய அப்டேட்களுடன் 2022 கியா சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி கார் அறிமுகம்!! விலை ரூ.30,000 வரையில் அதிகரிப்பு!

அப்டேட்களை பெறாவிடினும், எச்டிகே வேரியண்ட்டின் விலை ரூ.20,000 வரையில் உயர்த்தப்பட்டுள்ளது. 4.2 இன்ச் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் புதியதாக சொனெட்டின் மத்திய-நிலை எச்டிஎக்ஸ் வேரியண்ட் மற்றும் எச்டிஎக்ஸ் ஆண்டுநிறைவு எடிசனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரை ஏற்கனவே பெற்றுவரும் எச்டிஎக்ஸ்+ வேரியண்ட்டில் காற்றுப்பைகளின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது.

புதிய அப்டேட்களுடன் 2022 கியா சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி கார் அறிமுகம்!! விலை ரூ.30,000 வரையில் அதிகரிப்பு!

அத்துடன் கியா கனெட் செயலி மற்றும் பின்புறத்தை காட்டும் உட்புற கண்ணாடியில் இந்த கனெட் செயலி & எஸ்ஓஎஸ்-ஸிற்கான பொத்தான்கள் போன்றவற்றையும் சொனெட் எச்டிஎக்ஸ்+ வேரியண்ட் பெற்றுள்ளது. டாப் ஜிடிஎக்ஸ்+ வேரியண்ட்டிற்கு எந்த அப்டேட்டும் இல்லை. இதனால்தான் இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.10,000 மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது.

புதிய அப்டேட்களுடன் 2022 கியா சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி கார் அறிமுகம்!! விலை ரூ.30,000 வரையில் அதிகரிப்பு!

இந்த தொழிற்நுட்ப அப்டேட்கள் மட்டுமின்றி, சொனெட்டின் பெயிண்ட் தேர்வுகளிலும் இம்முறை கியா கை வைத்துள்ளது. இதன்படி, முன்பு பயன்பாட்டில் இருந்த இண்டெலிஜன்ஸ் நீலம், கோல்டு பழுப்பு மற்றும் இரும்பு சில்வர் என்கிற 3 நிறத்தேர்வுகள் நீக்கிக்கொள்ளப்பட்டுள்ளன. அதேபோல் பழுப்பு-கோல்டு என்கிற இரட்டை-நிறத்தேர்வும் நிறுத்தி கொள்ளப்பட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #கியா #kia
English summary
2022 kia sonet launched price 7 15 lakh features engine update details
Story first published: Tuesday, April 5, 2022, 15:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X