2022 இல் இத்தன கார்கள் பத்து லட்ச ரூபாவுக்கும் குறைவான விலையில் விற்பனைக்கு வந்திருக்கா?..

நடப்பு 2022 ஆம் ஆண்டில் பத்து லட்ச ரூபாவுக்கும் குறைவான விலையில் பன்முக கார் மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகி இருக்கின்றன. பட்ஜெட் வாகன பிரியர்களைக் கவரும் விதமாக இந்த கார்களை உற்பத்தியாளர்கள் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றனர். அவற்றின் லிஸ்டையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி உள்ளம். ஒட்டுமொத்தமாக ஆறு கார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன. அவை எவை?, அவற்றின் சிறப்புகள் என்ன என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (Maruti Alto K10):

மாருதி சுஸுகி ஆல்டோ கே10, இந்தியாவின் விலை குறைவான கார் மாடல்களில் இதுவும் ஒன்று ஆகும். ரூ. 3.99 லட்சம் விலையே இதற்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் முந்தைய தலைமுறை ரூ. 3.39 லட்சத்திற்கு விற்பனைக்குக் கிடைத்து வந்தது குறிப்பிடத்தகுந்தது. பல ஆண்டுகளாக விற்பனையில் இருக்கும் இந்த கார் மாடல் தொடர்ச்சியாக அப்டேட்டுகளைப் பெற்றே விற்பனையில் இருந்து வருகின்றது. எஸ்டிடி, எல்எக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ பிளஸ், விஎக்ஸ்ஐ (ஏடி) மற்றும் விஎக்ஸ்ஐ பிளஸ் (ஏடி) ஆகிய வேரியண்டுகளிலேயே புதிய ஆல்டோ கே10 விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில், எஸ்டிடி என்பதே ஆரம்ப நிலை வேரியண்ட் ஆகும். இதன் விலையே ரூ. 3.99 லட்சம் ஆகும்.

பட்ஜெட் கார்

இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், டிஜிட்டல் திரை என எக்கசக்க அம்சங்கள் இந்த காரில் வழக்கமான அம்சங்களாக வழங்கப்பட்டிருக்கின்றன. இதன் உயர்நிலை வேரியண்டில் பன்முக சிறப்பு தொழில்நுட்ப வசதிகளை மாருதி வழங்கியிருக்கின்றது. செலிரியோ கார் மாடலில் இருப்பதைப் போல 7 அங்குல தொடுதிரை சிஸ்டம், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளது. சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் என இரு விதமான தேர்வுகளில் இந்த கார் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

சிட்ரோன் சி3 (Citroen C3):

இந்தியாவின் மலிவு விலை கார் மாடல்களில் சிட்ரோன் சி 3-ம் ஒன்று. இதன் ஆரம்ப விலையே ரூ. 5.88 லட்சம் ஆகும். இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளில் இந்த காரை சிட்ரோன் நிறுவனம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. லைவ் மற்றும் ஃபீல் என்கிற இரு ட்ரிம்களிலேயே அது விற்கப்படுகின்றது. இத்துடன், 1.2 லிட்டர் நேச்சுரல் அஸ்பையர்டு மோட்டார் மற்றும் 1.2 லிட்டர் டர்போ மோட்டார் ஆகிய இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளிலும் அது விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த காரில் ஏராளமான சிறப்பம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், 10.25 அங்குல இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஒயர் லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஒயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே இணைப்பு வசதி உடன் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த திரை வாயிலாக எக்கசக்க சிறப்பு வசதிகளை சி3 பயனர்களால் பெற்றுக் கொள்ள முடியும். மேலும், மற்ற கார்களில் இருந்து இந்த சி3 காரை மாறுபட்டுக் காட்சியளிக்க வைக்கும் விதமாக இக்காரின் ஜன்னல்களை திறக்கும் பவர் பட்டன்கள் கியர் லிவருக்கு பின்னால் வழங்கப்பட்டிருக்கின்றது.

மாருதி சுஸுகி பலேனோ (Maruti Baleno):

மாருதி சுஸுகி நிறுவனத்தின் பிரபலமான கார் மாடல்களில் பலேனோவும் ஒன்று. இந்த கார் மாடலுக்கு இந்தியர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் நிலவிக் கொண்டிருக்கின்றது. காரில் 9 அங்குல அளவுள்ள ஸ்மார்ட் ப்ளே ப்ரோ ஃப்ரீ ஸ்டேண்டிங் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதி கொண்டது), ஆர்கேமிஸ் சவுண்ட் சிஸ்டம், சுஸுகியின் கார் இணைப்பு அம்சம் (அலெக்ஸா சப்போர்ட்டும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது), 60:40 ஸ்பிளிட் ரக பின் பக்க இருக்கை உள்ளிட்ட அம்சங்கள் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

இதுமட்டுமின்றி, ஹெட்ஸ்-அப் திரை, 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, பின் பக்க பயணிகளுக்கான ஏசி வெண்ட், மழை பொழிந்தால் தானாக இயங்கும் வைப்பர் மற்றும் ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம்-கள் உள்ளிட்ட அம்சங்களும் 2022 பலேனோவில் கொடுக்கப்பட்டுள்ளன. கார் அதிக பாதுகாப்பான வாகனமாகவும் காட்சியளிக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக அதிக உறுதியான ஸ்டீலைக் கொண்டு கார் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, 6 ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஹோல்டு அசிஸ்ட், ஹை ஸ்பீடு அலர்ட், டிரைவர் மற்றும் கோ டிரைவர் பயணிக்கான சீட் பெல்ட் ரிமைண்டர், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் உள்ளிட்ட அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த காரின் ஆரம்ப விலை ரூ. 6.49 லட்சம் ஆகும்.

டொயோட்டா கிளான்ஸா (Toyota Glanza):

டொயோட்டா மற்றும் சுஸுகி ஆகிய இரு நிறுவனங்களின் இணைப்பைத் தொடர்ந்து, விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட முதல் கார் மாடலே இந்த கிளான்ஸா. மாருதியின் பலேனோவே கிளான்ஸா என ரீபேட்ஜ் செய்யப்பட்டு டொயோட்டா பிராண்டில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஆகையால், சிறப்பம்சம் விஷயத்தில் பலினோ மற்றும் கிளான்ஸா ஆகிய இரண்டும் ஒரே மாதிரியானதாகக் காட்சியளிக்கின்றன. 1.2 லிட்டர் கே12எம் விவிடி என்/ஏ 4 சிலிண்டர் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 82.94 பவரையும் (61 kW), 113 என்எம் டார்க்கையும் வெளப்படுத்தும் திறன் கொண்டது. இது லிட்டருக்கு 19.56 கிமீ தொடங்கி 21.01 கிமீ வரையில் மைலேஜ் தரும். இந்த காரின் ஆரம்ப விலை ரூ. 6.59 லட்சம் ஆகும்.

மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Brezza):

புதிய தலைமுறை 2022 ப்ரெஸ்ஸாவை நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இது ஓர் காம்பேக்ட் எஸ்யூவி காராகும். இந்த கார் இந்தியாவில் ரூ. 7.99 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. தொழில்நுட்ப வசதிகளாக இந்த காரில் ஸ்மார்ட் பிளே ப்ரோ பிளஸ் தொழில்நுட்ப வசதிக் கொண்ட 9.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் திரை, ஹெட்ஸ்-அப் திரை, ஒயர்லெஸ் சார்ஜர், கார் இணைப்பு தொழில்நுட்பம், க்ரூஸ் கன்ட்ரோல், ரியர் ஏசி வெண்ட், புஷ் பட்டன் ஸ்டார்ட் / ஸ்டாப் வசதி, சாவியில்லாமல் காருக்குள் நுழைதல் மற்றும் தானாகவே மடக்கிக் கொள்ளும் ஓஆர்விஎம் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஹூண்டாய் வென்யூ (Hyundai Venue):

புதிய 2022 வென்யூவிற்கு அறிமுக விலையாக ரூ. 7.53 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் உயர்நிலை வேரியண்ட் ரூ. 12.57 லட்சம் விலையில் விற்பனைக்குக் கிடைக்கும். டீசல் மற்றும் பெட்ரோல் என இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளில் வென்யூ விற்பனைக்குக் கிடைக்கும். 1.2 லிட்டர் பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ ஜிடிஐ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் சிஆர்டிஐ டீசல் ஆகிய மூன்று விதமான மோட்டார் தேர்வுகளிலேயே 2022 வென்யூ விற்பனைக்குக் கிடைக்கும். இத்துடன், 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு மேனுவல், ஐஎம்டி மற்றும் டிசிடி ஆகிய கியர்பாக்ஸ் தேர்வுகளும் இக்காரில் வழங்கப்படுகின்றது. அலெக்ஸா மற்றும் கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் போன்ற நவீன கால அம்சங்களும் அதில் வழங்கப்பட்டிருக்கின்றன.

குறிப்பு: மேலே பார்த்த அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

Most Read Articles

English summary
2022 launches budget price car
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X