2022 மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா இந்தியாவின் முதல் சிஎன்ஜி காம்பேக்ட் எஸ்யூவியா?

2022 மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா கார் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த கார் தொடர்பான முக்கிய தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2022 மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா இந்தியாவின் முதல் சிஎன்ஜி காம்பேக்ட் எஸ்யூவியா?

மாருதி சுஸுகி நிறுவனம், 2022 விட்டாரா பிரெஸ்ஸா காரை வரும் மே அல்லது ஜூன் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2016ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து உள்ளூர் சந்தையில் இந்த காம்பேக்ட் எஸ்யூவி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகியின் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாகும்.

2022 மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா இந்தியாவின் முதல் சிஎன்ஜி காம்பேக்ட் எஸ்யூவியா?

காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் அதிகரித்து கொண்டே வரும் போட்டிக்கு, வெகுவாக அப்டேட் செய்யப்பட்டு வரும் புதிய மாடலை சரியான பதிலை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2022 மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவில் புதிய வசதிகள் கூடுதலாக வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன.

2022 மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா இந்தியாவின் முதல் சிஎன்ஜி காம்பேக்ட் எஸ்யூவியா?

அத்துடன் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் மாற்றங்களையும் எதிர்பார்க்கலாம். இந்த 5 சீட்டர் எஸ்யூவி, குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் ஏற்கனவே 4 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது. இருப்பினும் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், வலுமான கட்டுமான தரத்தில் புதிய மாடல் உருவாக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2022 மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா இந்தியாவின் முதல் சிஎன்ஜி காம்பேக்ட் எஸ்யூவியா?

வெளிப்புறத்தை பொறுத்தவரையில், ரீ-டிசைன் செய்யப்பட்ட முன் பக்க க்ரில் அமைப்பு, ஷார்ப்பான எல்இடி ஹெட்லேம்ப்கள், புதிதாக டிசைன் செய்யப்பட்ட ட்யூயல்-டோன் 16 இன்ச் அலாய் வீல்கள், புதிய எல்இடி பகல் நேர விளக்குகள், புதிய எல்இடி டெயில்லைட்கள், அப்டேட் செய்யப்பட்ட முன் மற்றும் பின் பக்க பம்பர்கள் ஆகியவை எதிர்பார்க்கப்படுகிறது.

2022 மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா இந்தியாவின் முதல் சிஎன்ஜி காம்பேக்ட் எஸ்யூவியா?

அதே நேரத்தில் 2022 விட்டாரா பிரெஸ்ஸாவின் இன்டீரியருக்கும், 2022 பலேனோவின் இன்டீரியருக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. 2022 விட்டாரா பிரெஸ்ஸாவில் மாருதி சுஸுகி நிறுவனம், 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போஃடெயின்மெண்ட் சிஸ்டமை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வசதிகள் வழங்கப்பட்டிருக்கும்.

2022 மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா இந்தியாவின் முதல் சிஎன்ஜி காம்பேக்ட் எஸ்யூவியா?

மேலும் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே போன்ற வசதிகளும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா, புதிய தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டியரிங் வீல் ஆகிய வசதிகளும் வழங்கப்படலாம். மேலும் டாப் வேரியண்ட்களில் 6 ஏர்பேக்குகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் ஹில் ஹோல்டு, க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற வசதிகளும் வழங்கப்படலாம்.

2022 மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா இந்தியாவின் முதல் சிஎன்ஜி காம்பேக்ட் எஸ்யூவியா?

செயல்திறனை பொறுத்தவரையில், மைல்டு-ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய 1.5 லிட்டர் நான்கு-சிலிண்டர் K15C பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உள்ளிட்ட தேர்வுகள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

2022 மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா இந்தியாவின் முதல் சிஎன்ஜி காம்பேக்ட் எஸ்யூவியா?

மேலும் பேடில் ஷிஃப்டர்கள் வசதியும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் 2022 மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா காரில், சிஎன்ஜி தேர்வும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதன் மூலம் சிஎன்ஜி தேர்வுடன் கிடைக்க கூடிய முதல் காம்பேக்ட் எஸ்யூவி என்ற பெருமையை 2022 மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

2022 மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா இந்தியாவின் முதல் சிஎன்ஜி காம்பேக்ட் எஸ்யூவியா?

ஆனால் சிஎன்ஜி தேர்வுடன், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுஸுகி நிறுவனம் புதிய தலைமுறை செலிரியோ, செலிரியோ சிஎன்ஜி, 2022 பலேனோ, 2022 வேகன் ஆர், 2022 எர்டிகா என தொடர்ந்து தனது மாடல்களை அப்டேட் செய்து கொண்டே வருகிறது.

2022 மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா இந்தியாவின் முதல் சிஎன்ஜி காம்பேக்ட் எஸ்யூவியா?

இந்த வரிசையில் 2022 எக்ஸ்எல்6 எம்பிவியை மாருதி சுஸுகி விரைவில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. இதற்கு அடுத்தபடியாக 2022 மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா விற்பனைக்கு வரலாம். இவற்றுக்கு இடையே பலேனோ பிரீமியம் ஹேட்ச்பேக்கின் சிஎன்ஜி வெர்ஷன் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யப்படும் கார்களிலும் சிஎன்ஜி தேர்வை அதிகளவில் வழங்குவதற்கு மாருதி சுஸுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
English summary
2022 maruti suzuki vitara brezza compact suv here s everything you need to know
Story first published: Saturday, April 16, 2022, 16:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X