நேற்று முன் தினம் விற்பனைக்கு அறிமுகமான ஸ்கோடா கோடியாக் கார் இன்று விற்பனையில் இல்லை... என்ன இதுதான் காரணமா?

ஸ்கோடா நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் கோடியாக் எஸ்யூவி காரின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனை இந்தியாவில் நேற்று முன் தினம் (ஜனவரி 10) இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. விற்பனைக்கு வந்த 24 மணி நேரங்களே ஆகின்ற நிலையில் தற்போது இந்த கார் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்காத நிலை உருவாகி இருக்கின்றது. இதற்கான காரணத்தையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

நேத்து முன் தினம் விற்பனைக்கு வந்த ஸ்கோடா கோடியாக் கார் இன்னைக்கு விற்பனையில் இல்ல... அட என்னங்க நம்ம ஆளுங்க இப்படி இருக்காங்க!!

ஸ்கோடா நிறுவனம் அதன் புதுப்பிக்கப்பட்ட கோடியாக் எஸ்யூவி ரக கார் மாடலை நேற்று முன் தினம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இக்கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இரண்டு நாட்களே ஆகின்ற நிலையில் தற்போது அது இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்காது என்கிற நிலை உருவாகியுள்ளது.

நேத்து முன் தினம் விற்பனைக்கு வந்த ஸ்கோடா கோடியாக் கார் இன்னைக்கு விற்பனையில் இல்ல... அட என்னங்க நம்ம ஆளுங்க இப்படி இருக்காங்க!!

நேற்றைய தினமே இந்த நிலை ஏற்பட்டுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, விற்பனைக்கு வந்த 24 மணி நேரத்திலேயே இத்தகையை நிலைக்கு ஸ்கோடா கோடியாக் கார் சென்றிருக்கின்றது. இந்த நிலைக்கு இக்காருக்கு இந்தியர்கள் மத்தியில் புக்கிங் குவிந்ததே முக்கிய காரணமாக இருக்கின்றது. ஆம், ஸ்கோடா கோடியாக் காருக்கு இந்தியாவில் மிக அமோகமான டிமாண்ட் கிடைத்திருக்கின்றன.

நேத்து முன் தினம் விற்பனைக்கு வந்த ஸ்கோடா கோடியாக் கார் இன்னைக்கு விற்பனையில் இல்ல... அட என்னங்க நம்ம ஆளுங்க இப்படி இருக்காங்க!!

இதன் விளைவாக விற்பனைக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து யூனிட்டுகளும் 24 மணி நேரத்திற்கும் உள்ளாக விற்று தீர்ந்திருக்கின்றன. இந்த நிலை தற்போது தற்காலிகமாக ஸ்கோடா கோடியாக் விற்பனைக்குக் கிடைக்காது என்ற சூழலை ஏற்படுத்தியிருக்கின்றது.

நேத்து முன் தினம் விற்பனைக்கு வந்த ஸ்கோடா கோடியாக் கார் இன்னைக்கு விற்பனையில் இல்ல... அட என்னங்க நம்ம ஆளுங்க இப்படி இருக்காங்க!!

ஸ்கோடா நிறுவனம் கோடியாக் எஸ்யூவி காரை கடந்த இரண்டு வருடங்களுக்கு இந்தியாவில் இருந்து வெளியேற்றியது. எனவே இந்த கார் நமது நாட்டில் விற்பனைக்காத நிலை உருவானது. இந்த வெளியேற்றத்திற்கு புதிய பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதியே காரணம் ஆகும். இந்த நிலையிலேயே இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று முன் தினம் புதிய அப்டேட்டுகளுடன் கோடியாக் எஸ்யூவி இந்திய சந்தையை வந்தடைந்தது.

நேத்து முன் தினம் விற்பனைக்கு வந்த ஸ்கோடா கோடியாக் கார் இன்னைக்கு விற்பனையில் இல்ல... அட என்னங்க நம்ம ஆளுங்க இப்படி இருக்காங்க!!

இதன் வருகையை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்த இந்தியர்கள் சிலர் உடனடியாக புக்கிங்கை வாரி இறைத்திருக்கின்றனர். இதன் விளைவு தற்போது ஸ்கோடா கோடியாக் பற்றிய தகவல் இந்திய வாகன உலகின் தலைப்பு செய்தியாக மாறி இருக்கின்றது.

நேத்து முன் தினம் விற்பனைக்கு வந்த ஸ்கோடா கோடியாக் கார் இன்னைக்கு விற்பனையில் இல்ல... அட என்னங்க நம்ம ஆளுங்க இப்படி இருக்காங்க!!

ஸ்கோடா நிறுவனம் இந்த 7 இருக்கைகள் வசதிக் கொண்ட கார் மாடலை சிகேடி வாயிலாக விற்பனைக்குக் களமிறக்கியது. இதன் வாயிலாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட அனைத்து யூனிட்டுகளும்தான் தற்போது விற்று தீர்ந்திருக்கின்றன. மிக சிறப்பான டிமாண்ட் இந்தியாவில் கோடியாக் காருக்கு கிடைத்திருப்பதை அடுத்து இன்னும் சில யூனிட்டுகளை மிக விரைவில் ஸ்கோடா இரண்டாவது பேட்ஜாக இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நேத்து முன் தினம் விற்பனைக்கு வந்த ஸ்கோடா கோடியாக் கார் இன்னைக்கு விற்பனையில் இல்ல... அட என்னங்க நம்ம ஆளுங்க இப்படி இருக்காங்க!!

இந்த காரின் விலை சற்றே அதிகமானதாக காட்சியளிக்கின்றது. ரூ. 34.99 லட்சம் என்ற விலையே புதுப்பிக்கப்பட்ட ஸ்கோடா கோடியாக் காருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இருப்பினும், இந்தியர்கள் சிலர் இக்காரை வெறித்தனமாக புக் செய்திருக்கின்றனர்.

நேத்து முன் தினம் விற்பனைக்கு வந்த ஸ்கோடா கோடியாக் கார் இன்னைக்கு விற்பனையில் இல்ல... அட என்னங்க நம்ம ஆளுங்க இப்படி இருக்காங்க!!

ஸ்கோடா நிறுவனம் 2021 ஏப்ரல் மாதத்தில் இப்புதுப்பிக்கப்பட்ட கோடியாக் காரை உலகளவில் வெளியீடு செய்தது. இந்த வெர்ஷனே எந்த மாற்றமும் இன்றி இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது. இது ஓர் மிக கவர்ச்சியான மற்றும் அதிக பிரீமியம் அம்சங்கள் கொண்ட எஸ்யூவி காராக காட்சியளிக்கின்றது.

நேத்து முன் தினம் விற்பனைக்கு வந்த ஸ்கோடா கோடியாக் கார் இன்னைக்கு விற்பனையில் இல்ல... அட என்னங்க நம்ம ஆளுங்க இப்படி இருக்காங்க!!

பட்டாம்பூச்சியின் வடிவத்தை ஒத்த க்ரில், எல்இடி டிஆர்எல்-கள் உடன் கூடிய கிரிஸ்டல்லின் எல்இடி ஹெட்லைட், புதிய பனி மின் விளக்கு, 18 இன்ச் அளவுள்ள ட்யூவல் டோன் அலாய் வீல்கள், வெள்ளீயம் நிறம் கொண்ட ரூஃப் ரெயில், புதிய ஸ்பாய்லர்கள், ஷார்பான பிம்பம் கொண்ட எல்இடி டெயில் லைட் மற்றும் ஸ்கோடா என்ற பெயர் பொதிந்த டெயில்கேட் உள்ளிட்ட கவர்ச்சிகரமான அம்சங்கள் பல இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

நேத்து முன் தினம் விற்பனைக்கு வந்த ஸ்கோடா கோடியாக் கார் இன்னைக்கு விற்பனையில் இல்ல... அட என்னங்க நம்ம ஆளுங்க இப்படி இருக்காங்க!!

ஸ்கோடா கோடியாக் காரின் உட்பகுதியிலும் புதுமுக அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன. 8.0 இன்ச் அளவுள்ள இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (இது நேவிகேஷன் மற்றும் ஒயர்லெஸ் ஸ்மார்ட் லிங் வசதியைக் கொண்டிருக்கின்றது), 10.25 இன்ச் அளவுள்ள விர்ச்சுவல் காக்பிட், பனோரமிக் சன்ரூஃப், மூன்று ஜோன் க்ளைமேட்ரானிக் ஏர் கன்டிஷன், சப் ஊஃபருடன் கூடிய 12 ஸ்பீக்கர்கள் அடங்கிய கேன்டன் சவுண்ட் சிஸ்டம் மற்றும் எல்க்ட்ரானிக் அட்ஜெஸ்ட் வசதிக் கொண்ட முன் பக்க இருக்கைகள் உள்ளிட்டவை காரின் உட்பகுதியில் வழங்கப்பட்டுள்ளன.

நேத்து முன் தினம் விற்பனைக்கு வந்த ஸ்கோடா கோடியாக் கார் இன்னைக்கு விற்பனையில் இல்ல... அட என்னங்க நம்ம ஆளுங்க இப்படி இருக்காங்க!!

இதுமட்டுமின்றி, லெதர் இருக்கைகள், குரோம்பூச்சிலான அலங்காரப் பொருட்களும் இந்த காரின் உட்பகுதியில் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன், பாதுகாப்பு அம்சங்களும் பல இதில் வழங்கப்பட்டுள்ளன. அந்தவகையில், ஒன்பது ஏர்-பேக்குகள், ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் (ஏபிஎஸ்), எலெக்ட்ரானிக் பிரேக் ஃபோர்ஸ் டிஸ்ட்ரிபியூஷன் (இபிடி), எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் (இஎஸ்சி), ஹைட்ராலிக் பிரேக் அசிஸ்ட் உடன் கூடிய மெக்கானிக்கல் பிரேக் அசிஸ்ட் (எம்பிஏ), ஆன்டி ஸ்லிப் ரெகுலேஷன் மற்றும் எலெக்ட்ரானிக் டிஃப்ரன்சியல் லாக் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் ஸ்கோடா கோடியாக் காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

நேத்து முன் தினம் விற்பனைக்கு வந்த ஸ்கோடா கோடியாக் கார் இன்னைக்கு விற்பனையில் இல்ல... அட என்னங்க நம்ம ஆளுங்க இப்படி இருக்காங்க!!

ஸ்கோடா கோடியாக் காரில் 2.0 லிட்டர், 4 சிலிண்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இிந்த எஞ்ஜினே ஸ்கோடாவின் பிற தயாரிப்புகளான சூப்பர்ப் மற்றும் ஆக்டேவியா ஆகிய கார்களில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 187 பிஎச்பி மற்றும் 320 என்எம் டார்க்கை வெளியேற்றும். 7 ஸ்பீடு டிஎஸ்ஜி தானியங்கி கியர்பாக்ஸில் இந்தத மோட்டார் இயங்குகின்றது.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
2022 skoda kodiaq suv facelift sold out with in 24 hours in india
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X