Just In
- 27 min ago
இந்த காருக்கு வெயில்தான் எரிபொருள்.. கரண்ட், பெட்ரோல், டீசல்னு எதுமே தேவையில்ல! காச சூப்பரா மிச்சப்படுத்தலாம்!
- 52 min ago
விலை இவ்வளவு கம்மி தானா! ஆரா ஃபேஸ்லிஃப்ட் காரை அறிமுகப்படுத்திய ஹூண்டாய்!
- 1 hr ago
போட்டி நிறுவனங்களை கதிகலங்க வைத்த மாருதி! 2 புதிய கார்களுக்கு புக்கிங் குவியுது! மக்கள் போட்டி போட்றாங்க!
- 1 hr ago
கண் தெரியாமல் லாரியை ஓட்டும் டிரைவர்கள்! டாக்டர்கள் நடத்திய ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
Don't Miss!
- News
இருளில் மூழ்கிய பாகிஸ்தான்.. திடீரென துண்டிக்கப்பட்ட மின்சாரம்.. 12 மணி நேரம் ஆகுமாம்.. என்னாச்சு?
- Technology
விபூதி அடிக்கும் BharOS என்கிற "பாரத்" ஓஎஸ்? இந்த உண்மை தெரிஞ்சா.. கழுவி கழுவி ஊத்துவீங்க!
- Movies
சிறப்பாக முடிந்தது பிக்பாஸ் சீசன் 6.. அடுத்தது என்ன குக் வித் கோமாளி தான்!
- Finance
மீண்டும் இந்தியா.. டெஸ்லா-வுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் 3 மாநிலங்கள்..!
- Lifestyle
கும்பத்தில் உருவாகும் லட்சுமி நாராயண யோகத்தால் பிப்ரவரியில் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்க போகுது...
- Sports
"3 தனித்தனி அணிகள்.. ஆனாலும் ஒரு சிக்கல்".. பிசிசிஐ திட்டம் குறித்து கபில் தேவ் அறிவுரை.. அடேங்கப்பா
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
எகிறும் எதிர்பார்ப்பு... ஜூலை 1ம் தேதி இந்தியாவில் டொயோட்டா செய்ய போகும் மாஸான சம்பவம்... என்னனு தெரியுமா?
வரும் ஜூலை 1ம் தேதி டொயோட்டா நிறுவனம் தரமான சம்பவம் ஒன்றை செய்யவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் பத்திரிக்கைகளுக்கு தற்போது அழைப்பிதழ் ஒன்றை அனுப்பியுள்ளது. இது வரும் ஜூலை 1ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் ஆகும். ''எங்களுடைய முக்கியமான அறிவிப்பின் ஒரு பகுதியாக இருங்கள்'' என அதில் கூறப்பட்டுள்ளது. இது அனேகமாக புதிய தலைமுறை அர்பன் க்ரூஸர் காரின் அறிமுக நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் என கருதப்படுகிறது.

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா காரின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன்தான் டொயோட்டா அர்பன் க்ரூஸர் என்பது நம் அனைவருக்குமே தெரியும். சுஸுகி நிறுவனத்துடன் செய்து கொண்டுள்ள கூட்டணியின் அடிப்படையில் டொயோட்டா நிறுவனம் இதனை சாத்தியமாக்கி வருகிறது. இந்தியாவில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் 2 கார்களை டொயோட்டா நிறுவனம் தனது பிராண்டில் ரீபேட்ஜ் செய்து விற்பனை செய்து வருகிறது.

அவை டொயோட்டா அர்பன் க்ரூஸர் (மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா) மற்றும் டொயோட்டா க்ளான்சா (மாருதி சுஸுகி பலேனோ) ஆகியவை ஆகும். மாருதி சுஸுகி நிறுவனம் தனது விட்டாரா பிரெஸ்ஸா காரின் புதிய தலைமுறை மாடலை வரும் ஜூன் 30ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதையெல்லாம் வைத்து பார்க்கையில், டொயோட்டா நிறுவனம் வரும் ஜூலை 1ம் தேதி அர்பன் க்ரூஸர் காரின் புதிய தலைமுறை மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாகவே கருத வேண்டியுள்ளது.

நடப்பாண்டு தொடக்கத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் 2022 பலேனோ காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அதை தொடர்ந்து டொயோட்டா நிறுவனம் 2022 க்ளான்சா காரை விற்பனைக்கு கொண்டு வந்தது இங்கே குறிப்பிடத்தக்கது. 2022 டொயோட்டா அர்பன் க்ரூஸர் காரில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்படவுள்ளன? என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரியவரவில்லை.

ஆனால் முன் பகுதியில் நிறைய க்ரோம் வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் ஷார்ப் ஆன ஹெட்லேம்ப் க்ளஸ்ட்டர் வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும் பம்பர்களும் மாற்றம் செய்யப்பட்டிருக்கலாம். அதே நேரத்தில் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள பிரெஸ்ஸா காரின் பின் பகுதிக்கும், அர்பன் க்ரூஸர் காரின் பின் பகுதிக்கும் பேட்ஜ் மற்றும் லோகோக்களை தவிர எந்தவிதமான மாற்றங்களும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயம் 2022 டொயோட்டா அர்பன் க்ரூஸர் காரில், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வசதிகளுடன் 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், கனெக்டட் கார் தொழில்நுட்பம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், சன்ரூஃப், 6 ஏர்பேக்குகள், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, 360 டிகிரி கேமரா போன்ற பல்வேறு வசதிகள் வழங்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செயல்திறனை பொறுத்தவரையில், மைல்டு-ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய 1.5 லிட்டர், நான்கு-சிலிண்டர், K15C பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 6,000 ஆர்பிஎம்மில் 103 பிஎஸ் பவரையும், 4,400 ஆர்பிஎம்மில் 136.8 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

இந்திய சந்தையில் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா மட்டுமின்றி, டாடா நெக்ஸான், ரெனால்ட் கைகர், நிஸான் மேக்னைட், கியா சொனெட், மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் ஹூண்டாய் வெனியூ உள்ளிட்ட கார்களுடனும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் போட்டியிட்டு வருகிறது. டொயோட்டா அர்பன் க்ரூஸர் காரின் புதிய மாடல், இந்த கார்களுக்கு மேற்கொண்டு கூடுதல் சவாலை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் வரும் நாட்களில் பல்வேறு புதிய மாடல்கள் களமிறங்கவுள்ளன. மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் கார்களின் புதிய தலைமுறை மாடல்கள் மட்டுமல்லாது, ஹூண்டாய் வெனியூ காரின் 2022 மாடலும் இன்னும் சில நாட்களில் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

வெனியூ காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை வரும் ஜூன் 16ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக ஹூண்டாய் நிறுவனம் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது. எனவே வரும் மாதங்களில் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் இந்த கார்களுக்கிடையே போட்டி அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
யூஸ்டு மார்கெட்டின் சூப்பர் ஸ்டார்னு சொல்லலாம்... செகண்ட் ஹேண்டில் வாங்க மிக சிறந்த 5 சிறிய கார்கள்!
-
இதுல ஒன்னு கைகளுக்கு வந்தாலும் வேற லெவல்ல சீன் போடலாம்.. 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சி தந்த டாப் எஸ்யூவி கார்!
-
எதிர்பார்ப்பு எகிறுது! இன்னைக்கு நைட் தூக்கம் வராதே! நாளைக்கு தரமான சம்பவத்தை செய்ய போகும் ஹூண்டாய் நிறுவனம்!