மறைக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் முதல்முறையாக உலாவந்த 2023 கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் கார்!!

கியா செல்டோஸ் எஸ்யூவி காரின் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் இந்தியாவில் பொது சாலையில் சோதனை ஓட்டத்தின்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நமக்கு கிடைக்க பெற்றுள்ள ஸ்பை படங்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

மறைக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் முதல்முறையாக உலாவந்த 2023 கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் கார்!!

தென்கொரியாவை சேர்ந்த கியா நிறுவனம் இந்திய சந்தையில் செல்டோஸ் காரின் மூலம் நுழைந்தது. 2019இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த காம்பெக்ட் எஸ்யூவி காருக்கு தற்போதுவரையில் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. இருப்பினும் இதன் போட்டி மாடல்கள் பல, தற்போதைய 2022ஆம் ஆண்டிற்கு ஏற்ப அப்டேட் ஆகி விட்டன.

மறைக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் முதல்முறையாக உலாவந்த 2023 கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் கார்!!

இதனால் செல்டோஸின் விற்பனையை மேலும் அதிகரிக்கும் பொருட்டு கியா நிறுவனம் அதன் செல்டோஸ் மாடலின் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இதற்கிடையில் தான் தற்போது புதிய செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் பொது சாலையில் சோதனை ஓட்டத்தின்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ரஷ்லேன் செய்திதளம் மூலம் கிடைத்துள்ள ஸ்பை படங்களை கீழே காணலாம்.

மறைக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் முதல்முறையாக உலாவந்த 2023 கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் கார்!!

2023 கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் இத்தகைய ஸ்பை படங்கள் இதற்கு முன்பு வரையில் தென்கொரியாவில் இருந்து மட்டுமே வெளியாகி கொண்டிருந்தன. ஆனால் தற்போது முதல்முறையாக புதிய செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் சோதனை ஓட்டத்தின்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போதைய ஸ்பை படங்களில் கார் முழுவதுமாக மறைப்பால் மறைக்கப்பட்டுள்ளதால், புதிய செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் காரில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்களை தெளிவாக அறிய முடியவில்லை.

மறைக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் முதல்முறையாக உலாவந்த 2023 கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் கார்!!

Source: Rushlane

மேலும், இந்த ஸ்பை படங்களில் காரின் பக்கவாட்டை மட்டுமே காண முடிகிறது. ஏனெனில் ஃபேஸ்லிஃப்ட் அப்டேட் என்பதால், முக்கியமான மாற்றங்கள் அனைத்தும் காரின் முன்பக்கத்திலேயே வழங்கப்பட உள்ளன. மொத்த தோற்றமாக பார்க்கும்போது, தற்போதைய செல்டோஸிற்கும், புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கும் இடையே பெரியதாக எந்த வித்தியாசமும் இருப்பதுபோல் தெரியவில்லை.

மறைக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் முதல்முறையாக உலாவந்த 2023 கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் கார்!!

எங்களுக்கு தெரிந்தவரையில், புதிய டிசைனில் முன் & பின்பக்க பம்பர்கள், புதிய ஹெட்லேம்ப் அமைப்பு மற்றும் திருத்தியமைக்கப்பட்ட வடிவில் டெயில்லைட்களை புதிய செல்டோஸில் எதிர்பார்க்கிறோம். அத்துடன் புதிய டிசைனிலான அலாய் சக்கரங்களை செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் காரில் கியா நிறுவனம் வழங்கும். ஆனால் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள இந்த சோதனை மாதிரியில் தற்காலிக இரும்பு சக்கரங்களே பொருத்தப்பட்டுள்ளன.

மறைக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் முதல்முறையாக உலாவந்த 2023 கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் கார்!!

மற்றப்படி, காரின் உட்புற கேபின் குறித்த படங்கள் எதுவும் தற்போதைக்கு கிடைக்க பெறவில்லை. 2023 செல்டோஸ் கார் கியாவின் யுவோ ப்ளாட்ஃபாரத்தின் வாயிலாக கூடுதல் இணைப்பு வசதிகளை பெற்றுவர உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, மாடர்ன் இந்திய கார்களில் அடிப்படை சிறப்பம்சமாக மாறிவரும் ADAS வசதிகளை குறைந்தப்பட்சம் புதிய செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் உயர்நிலை வேரியண்ட்களிலாவது எதிர்பார்க்கலாம்.

மறைக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் முதல்முறையாக உலாவந்த 2023 கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் கார்!!

அத்துடன் புத்துணர்ச்சியான தோற்றத்திற்காக புதிய உள்ளமைவில் கேபினை 2023 செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் காரில் கியா நிறுவனம் வழங்க முயற்சிக்கும். மேலும், தற்கால இந்திய வாடிக்கையாளர்கள் பனோராமிக் சன்ரூஃப்-ஐ எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டனர். அதுமட்டுமின்றி, வெளிநாட்டு செல்டோஸ் வெர்சன்களில் ஏற்கனவே வழங்கப்பட்டுவரும் பனோராமிக் சன்ரூஃப் இந்திய வெர்சனில் வழங்கப்படவில்லை.

மறைக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் முதல்முறையாக உலாவந்த 2023 கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் கார்!!

ஆதலால் புதிய செல்டோஸ் காரில் இந்த அம்சத்தை நிச்சயமாக எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது. புதிய செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் காரை பற்றி தென்கொரிய ஊடகங்களில், இந்த எஸ்யூவி காரில் டீசல் என்ஜின் தேர்வு நிறுத்தி கொள்ளப்பட உள்ளதாகவும், அதற்கு மாற்றாக ஆற்றல்மிக்க ஹைப்ரிட்-என்ஜின் தேர்வு வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஒருவேளை தென்கொரியாவில் 2023 செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் காரில் ஹைப்ரிட் தேர்வு சேர்க்கப்பட்டாலும், இந்தியாவில் வழங்கப்பட வாய்ப்பில்லை.

மறைக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் முதல்முறையாக உலாவந்த 2023 கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் கார்!!

ஏனெனில் நம் நாட்டு வாடிக்கையாளர்கள் இன்னமும் ஹைப்ரிட்-என்ஜின் ஆற்றல்-வழங்கிக்கு தயாராகவில்லை என்றுதான் கூற வேண்டும். அதுமட்டுமில்லாமல், கியா பிராண்டில் இருந்து சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கேரன்ஸ் எம்பிவி காரில் டீசல் என்ஜின் வழங்கப்பட்டதால், புதிய செல்டோஸ் மாடலிலும் தொடர்ந்து டீசல் என்ஜின் தேர்வு கொடுக்கப்பட வாய்ப்புகள் அதிகம்.

மறைக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் முதல்முறையாக உலாவந்த 2023 கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் கார்!!

ஆனால் அதிக மைலேஜை வாடிக்கையாளர்கள் பெறும் பொருட்டு, சிஎன்ஜி தேர்வு கொடுக்கப்படலாம். விற்பனையில் கியா செல்டோஸிற்கு போட்டியாக விளங்கும் ஹூண்டாய் க்ரெட்டா காம்பெக்ட் எஸ்யூவி மாடலும் விரைவில் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடினை பெறவுள்ளது. அதுமட்டுமின்றி, செல்டோஸ் & க்ரெட்டா எஸ்யூவி கார்களுக்கு போட்டியளிக்கும் விதத்தில் மாருதி சுஸுகி & டொயோட்டா பிராண்ட்களிலும் இருந்தும் விரைவில் புதிய காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் களமிறக்கப்பட உள்ளன.

Most Read Articles
மேலும்... #கியா #kia
English summary
2023 kia seltos facelift spied testing for first time in india
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X