கார்களுக்கு 3 ஆண்டு, பைக்குகளுக்கு 5 ஆண்டு; வரப்போது புதிய இன்சூரன்ஸ் திட்டம்!

இன்சூரன்ஸ் ஒழுங்கு அமைப்பு இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார் மற்றும் பைக்குகளுக்கு 3 மற்றும்5 ஆண்டிற்கான இன்சூரன்ஸை கட்டாயமாக்குவதற்கான திட்டத்தை வரைவு செய்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் உள்ள இன்சூரன்ஸ் நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் அமைப்பு தான் இன்சூரன்ஸ் ரெகுலேட்டரி மற்றும் டெவலப்மென்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா (IRDAI) என்ற அமைப்பு. தற்போது இந்தியாவில் கார், பைக் வாங்கும்போது வழங்கப்படும் இன்சூரன்ஸில் புதிய மாற்றம் ஒன்றைக் கொண்டு வர முடிவு செய்துள்ளது. இன்சூரன்ஸ் வாடிக்கையாளர்களுக்கு அதிகமான தேர்வுகளைக் கொண்டு வரும் நோக்கில் இது முடிவு செய்துள்ளது.

கார்களுக்கு 3 ஆண்டு, பைக்குகளுக்கு 5 ஆண்டு வரப்போது புதிய இன்சூரன்ஸ் திட்டம்!

அதன்படி இந்த புதிய திட்டத்தின்படி "நீண்ட கால மோட்டார் புரோடெக்ட்" என்ற பெயரில் புதிய இன்சூரன்ஸ் திட்டங்களை அறிமுகப்படுத்தவுள்ளது. அதில் ஒரு வாகனத்தின் மூன்றாம் நபருக்கான இன்சூரன்ஸ் மற்றும் சொந்த வாகன டேமேஜ் ஆகியன சேர்த்து வழங்கப்படும். தற்போது புதிதாக வாகனம் வாங்கினால் கார்களுக்கு 3 ஆண்டும், பைக்குகளுக்கு 5ஆண்டும் இன்சூரன்ஸ் வழங்கப்படுகிறது. இது முற்றிலும் 3ம் நபருக்கான இன்சூரன்ஸ் மட்டுமே கட்டாயம்.

இனி மூன்றாம் நபருக்கான இன்சூரன்ஸூடன் சேர்த்து ஓன் டேமேஜ் இன்சூரன்ஸையும் எடுத்துக்கொள்ள முடியும். இது கார்களுக்கு குறைந்தது கட்டாயம் 3ஆண்டுகளுக்கும், டூவீலர்களுக்கு குறைந்தது கட்டாயம் 5 ஆண்டுகளுக்கும் செல்லுபடியாகும்படி இந்த இன்சூரன்ஸ் வழங்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 25ம்தேதி IRDAI இன்சூரன்ஸ் துறையில் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டு வர ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தங்களின் ஸ்லோவென்ஸி மார்ஜினை குறைக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

2047ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் இன்சூரன்ஸ் என்ற ஒரு இலக்கை நோக்கி இந்த அமைப்பு பயணித்து வருகிறது. இதற்கான முக்கிய மாற்றமாக பிரைவேட் ஈக்குவிட்டி முதலீடுகளை நேரடியாக இன்சூரன்ஸ் நிறுவனங்களில் முதலீடு செய்ய அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் தான் கார் பைக் இன்சூரன்ஸில் ஓன் டேமேஜ் இன்சூரன்ஸ் சேர்ந்த திட்டத்தைக் கொண்டு வர முடிவு செய்துள்ளது.

இந்த புதிய திட்டத்தின்படி இன்சூரன்ஸ் பிரிமியத்தை கார்/பைக் வாங்கும் போது செலுத்த வேண்டும். இந்த லாக் டெர்ம் இன்சூரன்ஸில் நோ-கிளைம் போனஸ் கணக்கிடப்படும். இது எப்படி ஓராண்டு இன்சூரன்ஸ் திட்டத்தின் இன்சூரன்ஸ் காலத்தின் முடிவில் கணக்கிடப்படுமோ அதேபோல இந்த இன்சூரன்ஸிலும் அவ்வாறே கணக்கிடப்படுகிறது.தற்போது இந்த திட்டம் என்பது அனுமதிக்காக வரைவாகவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த வரைவுக்கான அனுமதி இதுவரை கிடைக்கவில்லை.

இதற்கான அனுமதி கிடைத்துவிட்டால் இனி கார்பைக்குகளுக்கான இன்சூரன்ஸ் பிரிமியம் கூட வாய்ப்பு இருக்கிறது. அதே நேரம் இனி 3ம் நபருக்கான இன்சூரன்ஸ் மட்டுமல்லாமல் ஓன் டேமேஜ் இன்சூரன்ஸூம் இதில் அடங்கும். இந்த புதிய திட்டம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்

Most Read Articles

English summary
3 year cover for car 5 years cover for bikes irdai proposes new insurance cover
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X