Just In
- 11 hrs ago
இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் அதிகம் விற்பனையான ஹேட்ச்பேக் கார்களின் பட்டியல்... மாருதி ஆதிக்கம்!
- 11 hrs ago
மணிக்கு 120 கிமீ வேகத்தில் பயணிக்கும் டிவிஎஸ் ரோனின் இந்தியாவில் அறிமுகம்... ஆரம்ப விலையே ரூ. 1.49 லட்சம்தான்!
- 12 hrs ago
ஹூண்டாய் அல்கஸார் காரில் புதிய மலிவு விலை தேர்வு அறிமுகம்! பெட்ரோல்-டீசல், 6&7 சீட்டர் தேர்வுகளில் கிடைக்கும்!
- 12 hrs ago
எப்பயும் போல ஹீரோ தான் நம்பர் 1 ஆனா வளர்ச்சியில் செம அடி...
Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசரமாக முக்கிய முடிவை எடுக்க வேண்டாம்...
- News
"மாநிலங்களை ஆண்ட இசைஞானி" - இளையராஜாவுக்கு மிட் நைட்டில் வாழ்த்து சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின்
- Sports
6 ஆண்டுகளுக்கு பிறகு கோலிக்கு சோகம்.. டெஸ்ட் தர வரிசையில் பண்ட் பாய்ச்சல்
- Movies
இளையராஜாவின் சாதனைக்கு ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம்...கமல்ஹாசன் வாழ்த்து
- Finance
தவறான வங்கி கணக்கிற்கு 7 லட்சம்.. லாட்டரி என நாடகம்.. போராடி பெற்ற பெண்..!
- Technology
இனி வீடே தியேட்டர் தான்: 50% தள்ளுபடியுடன் Samsung, Realme, Oneplus, Sony ஸ்மார்ட்டிவிகள்!
- Travel
ஆசியாவிலேயே தூய்மையான கிராமம் – மேகாலயாவில் உள்ள மவ்லின்னாங்கின் சுற்றுலாத் தலங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
மாருதி ஆல்டோ புதிய அவதாரத்தில் விற்பனைக்கு வரப்போகுது... அது மட்டுமா? இன்னும் நிறைய இருக்கு!
இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள ஹேட்ச்பேக் கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் தற்போது எஸ்யூவி கார்களின் ஆதிக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இருப்பினும் ஹேட்ச்பேக் கார்களுக்கு இன்னமும் வாடிக்கையாளர்கள் மத்தியில் மவுசு காணப்படவே செய்கிறது. எனவே இந்திய சந்தையில் ஏராளமான ஹேட்ச்பேக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு பல்வேறு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இதில், வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஹேட்ச்பேக் கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அடுத்த தலைமுறை மாருதி சுஸுகி ஆல்டோ (Next-generation Maruti Alto)
மாருதி சுஸுகி நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான கார்களில் ஒன்றாக ஆல்டோ உள்ளது. இந்த காரின் அடுத்த தலைமுறை மாடல் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஹார்டெக்ட் பிளாட்பார்ம் (Heartect Platform) அடிப்படையில் இந்த புதிய மாடல் உருவாக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது இருக்கும் மாடலை காட்டிலும், இந்த புதிய மாடல் அளவில் பெரியதாக இருக்கலாம். எனவே கூடுதல் இடவசதி கிடைக்கும். 0.8 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் என மாருதி சுஸுகி ஆல்டோ காரின் புதிய தலைமுறை மாடல் மொத்தம் 2 இன்ஜின் தேர்வுகள் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் (Tata Altroz EV)
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள பிரீமியம் ஹேட்ச்பேக் கார்களில் ஒன்று டாடா அல்ட்ராஸ். இது குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்ற மேட் இன் இந்தியா கார்களில் ஒன்றாகும். இதன் எலெக்ட்ரிக் வெர்ஷன்தான் டாடா அல்ட்ராஸ் இவி. டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் வெகு விரைவிலேயே விற்பனைக்கு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனேகமாக நடப்பு 2022ம் ஆண்டின் இறுதிக்குள் டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த எலெக்ட்ரிக் பிரீமியம் ஹேட்ச்பேக் காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவிலேயே காட்சிக்கு வைத்திருந்தது.

டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் காரின் டிரைவிங் ரேஞ்ச் 250 கிலோ மீட்டர்கள் முதல் 300 கிலோ மீட்டர்களாக இருக்கலாம். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வரும் நெக்ஸான் மற்றும் டிகோர் ஆகிய ஐசி இன்ஜின் கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களை போல், டாடா அல்ட்ராஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எம்ஜி எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் (MG Electric Hatchback)
வுல்லிங் ஏர் இவி-யின் (Wuling Air EV) அடிப்படையில், புதிய எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் கார் ஒன்றை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு எம்ஜி மோட்டார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் கார் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

இதை தொடர்ந்து 2023ம் ஆண்டிலேயே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் காரின் விலை 10 லட்ச ரூபாய்க்குள் இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் காரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 150 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும் என கூறப்படுகிறது.

சிட்ரோன் சி3 (Citroen C3)
சிட்ரோன் சி3 காரை இந்த பட்டியலில் சேர்த்திருப்பது உங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தலாம். இதனை பிரீமியம் ஹேட்ச்பேக் என்றும் சொல்கிறார்கள். சப்-காம்பேக்ட் எஸ்யூவி என்றும் சொல்கிறார்கள். எனவே சிட்ரோன் சி3 காரையும் நாங்கள் இந்த பட்டியலில் சேர்த்துள்ளோம். சிட்ரோன் சி3 கார் 2 இன்ஜின் தேர்வுகளுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

அவை இரண்டுமே 1.2 லிட்டர் இன்ஜின்கள்தான். இதில் ஒரு இன்ஜின், நேச்சுரலி-அஸ்பிரேட்டட் யூனிட் ஆகும். மற்றொன்று டர்போசார்ஜர் உடன் வரும் இன்ஜின் ஆகும். இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள சிட்ரோன் சி3 கார், வரும் ஜூலை 20ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. சிட்ரோன் சி3 காரை நாங்கள் ஏற்கனவே டெஸ்ட் டிரைவ் செய்து விட்டோம். இந்த காரின் பல்வேறு அம்சங்கள் எங்களை கவர்ந்தன.
-
யாரோ அடிச்சு விட்றத நம்பாதீங்க... விமானம் கிளம்பும் முன் ஏன் புகை வருகிறது தெரியுமா? உண்மையான காரணம் இதுதான்!
-
என்னங்க சொல்றீங்க... ரூ.6 லட்சத்தில் சிட்ரோன் காரா!! அதிகப்பட்ச விலையே ரூ.8.5 லட்சம் தானாம்!
-
தங்கம் அண்ணாவோட ஹெல்மெட் பத்திரமா இருக்கு! ஆனந்த கண்ணீரில் TTF ரசிகர்கள்! உண்மையில் என்ன நடந்துச்சு தெரியுமா?