இந்த விஷயத்துல அனைத்து மாநிலங்களும் கர்நாடகா மாதிரி இருக்கணும்.. அசூர வேகத்தில் வளர்ந்திருக்கு! எதுல தெரியுமா?

மின்சார வாகனம் (Electric Vehicles) விஷயத்தில் கர்நாடகா மாநிலம் அசூர வளர்ச்சியைச் சந்தித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக மாநிலத்தின் பெங்களூருவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் பன்மடங்கு அதிக வேகத்தில் வளர்ச்சியடைந்துக் காணப்படுகின்றது. இதுகுறித்து தற்போது வெளியாகியிருக்கும் முக்கிய தகவல்களையே இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

இந்த விஷயத்துல அனைத்து மாநிலங்களும் கர்நாடகா மாதிரி இருக்கணும்... அசூர வேகத்தில் வளர்ந்திருக்கு! எதுலனு தெரியுமா?

மின்சார வாகனங்களை தத்தெடுப்பதில் தென் மாநிலங்களிலேயே முதல் இடத்தில் கர்நாடகா இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து தி ஹிந்து வெளியிட்டிருக்கும் செய்தியில், இம்மாநிலத்தில் ஐந்து மடங்கு அதிகளவில் மின் வாகனங்கள் 2018 - 2021 ஆம் ஆண்டிற்குள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த விஷயத்துல அனைத்து மாநிலங்களும் கர்நாடகா மாதிரி இருக்கணும்... அசூர வேகத்தில் வளர்ந்திருக்கு! எதுலனு தெரியுமா?

இதனால் நாட்டில் அதிகம் மின்சார வாகனங்களை பதிவு செய்த மாநிலங்களின் பட்டியலில் கர்நாடகா முதல் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கின்றது. 2018ம் ஆண்டு வரை மாநிலத்தில் 3,806 யூனிட் மின்சார வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்தன. ஆனால், 2021ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்த எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து 22,264 யூனிட்டுகளாக மாறியுள்ளன.

இந்த விஷயத்துல அனைத்து மாநிலங்களும் கர்நாடகா மாதிரி இருக்கணும்... அசூர வேகத்தில் வளர்ந்திருக்கு! எதுலனு தெரியுமா?

தற்போதைய நிகழ்கால நிலவரப்படி இன்னும் பல ஆயிரம் மின்சார வாகனங்கள் கர்நாடகாவில் பதிவு செய்யப்பட்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, மாநிலத்தின் பெங்களூரு நகரத்திலேயே மின் வாகனங்கள் அதிகளவில் வளர்ச்சியடைந்துக் காணப்படுகின்றன. கார்களைக் காட்டிலும் டூ-வீலர் மற்றும் மூன்று சக்கர எலெக்ட்ரிக் வாகனங்களே அங்கு அதிகளவில் பயன்பாட்டில் இருப்பதாக தற்போது வெளியாகியிருக்கும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விஷயத்துல அனைத்து மாநிலங்களும் கர்நாடகா மாதிரி இருக்கணும்... அசூர வேகத்தில் வளர்ந்திருக்கு! எதுலனு தெரியுமா?

இதேவேகத்தில் பெங்களூருவில் மின்சார வாகனங்கள் வளர்ச்சியடையுமானால் 2030ம் ஆண்டிற்குள் அந்த நகரத்தில் எலெக்ட்ரிக் டூ-வீலர் மற்றும் மூன்று சக்கர வாகனங்களின் ஆதிக்கமே அதிகளவில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் அரசும் சார்பிலும் மின் வாகன ஊக்குவிப்பு பணிகள் மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த விஷயத்துல அனைத்து மாநிலங்களும் கர்நாடகா மாதிரி இருக்கணும்... அசூர வேகத்தில் வளர்ந்திருக்கு! எதுலனு தெரியுமா?

குறிப்பாக, மாநிலத்தின் முக்கிய நகர் பகுதிகளில் மின் வாகனங்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளை துரிதப்படுத்தியிருக்கின்றது. ஆகையால், சார்ஜிங் மையங்களின் எண்ணிக்கை தற்போது பன் மடங்கு வளர்ந்துக் காணப்படுகின்றது. அதேவேலையில், தற்போது அதி வேகத்தில் மின் வாகனங்களின் எண்ணிக்கை உயர்ந்துக் கொண்டிருப்பதனால் மின் வாகனங்களை சார்ஜ் செய்யும் மையங்களின் தேவையும் பன் மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது.

இந்த விஷயத்துல அனைத்து மாநிலங்களும் கர்நாடகா மாதிரி இருக்கணும்... அசூர வேகத்தில் வளர்ந்திருக்கு! எதுலனு தெரியுமா?

எனவே பெங்களூரு நகரத்தின் ஒரு சில இடங்களில் சார்ஜிங் மையங்களின் பற்றாக் குறை ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேலையில் பல மடங்கு வேகத்தில் மின் வாகனங்களின் எண்ணிக்கை பெங்களூருவில் உயர்ந்துக் கொண்டிருப்பதனால், உலகளவில் மின் வாகனங்களை வேகமாக தத்தெடுக்கும் நகரங்களின் பட்டியலில் இது முதன்மையான இடத்தைப் பிடிப்பதற்கான வாய்ப்பு அதிகளவில் தென்படுகின்றது.

இந்த விஷயத்துல அனைத்து மாநிலங்களும் கர்நாடகா மாதிரி இருக்கணும்... அசூர வேகத்தில் வளர்ந்திருக்கு! எதுலனு தெரியுமா?

சவால்கள்:

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இப்போதே சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியை வழங்கும் பேட்டரி ஸ்வாப் மையங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. ஆனால், அவை தற்போது பயன்பாட்டில் உள்ள மின்சார வாகனங்களுக்குப் போதுமானதாக இல்லை. இந்த மாதிரியான சூழலால் பலர் மின்சார வாகனங்களைத் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகின்றது. வீட்டில் வைத்து எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்யும் பட்சத்தில் பல மணி நேரங்கள் முழுமையாக சார்ஜ் செய்ய தேவைப்படுகின்றது. ஆனால், மக்கள் பலர் அந்தளவிற்கு பொருமையாக காத்திருக்கும் மனப்பான்மையில் இல்லை என்பதே உண்மை.

இந்த விஷயத்துல அனைத்து மாநிலங்களும் கர்நாடகா மாதிரி இருக்கணும்... அசூர வேகத்தில் வளர்ந்திருக்கு! எதுலனு தெரியுமா?

ஆகையால், தற்போதும் பலர் எரிபொருளால் இயங்கும் வாகனங்களை வாங்குவதை நம்மால் காண முடிகின்றது. மக்களின் இந்த எண்ணத்தை மாற்றும் முயற்சியிலேயே மத்திய மற்றும் மாநில அரசுகள் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக மத்திய அரசு சார்பில் மானியம், வரி சலுகை உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன. இதேபோல், மாநில அரசுகளும் அவர்கள் சார்பில் மானியம், பதிவு கட்டண சலுகை உள்ளிட்டவை வழங்கிக் கொண்டிருக்கின்றன.

இந்த விஷயத்துல அனைத்து மாநிலங்களும் கர்நாடகா மாதிரி இருக்கணும்... அசூர வேகத்தில் வளர்ந்திருக்கு! எதுலனு தெரியுமா?

இதன் விளைவாக மக்கள் மின் வாகனங்களை வாங்கத் தொடங்கியிருக்கின்றனர். மேலும், சுற்றுச்சூழல் மீது ஆர்வம் கொண்டவர்கள் மற்றும் மின் வாகனங்கள்குறித்து விழிப்புணர்வு உடையவர்கள் எலெக்ட்ரிக் வாகனங்களைத் தயக்கமின்றி வாங்கத் தொடங்கியிருக்கின்றனர். இதன் விளைவாகவே நாட்டில் முன்பைக் காட்டிலும் தற்போது பல மடங்கு பேட்டரியால் இயங்கம் வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது.

Most Read Articles
English summary
5 fold increase in the registration of ev s between 2018 and 2021 karnataka
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X