சமரசம்லாம் பண்ணிக்க முடியாது... முடிவு எடுத்தது எடுத்ததுதான்... இந்தியாவை அண்ணாந்து பார்க்கும் உலக நாடுகள்!

உலக நாடுகளை எல்லாம் இந்தியா அண்ணாந்து பார்க்க வைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சமரசம்லாம் பண்ணிக்க முடியாது... முடிவு எடுத்தது எடுத்ததுதான்... இந்தியாவை அண்ணாந்து பார்க்கும் உலக நாடுகள்!

உலகில் சாலை விபத்துக்கள் அதிகளவில் நடைபெறும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இங்கு பல லட்சக்கணக்கானோர் சாலை விபத்துக்களில் சிக்கி உயிரிழந்தும், படுகாயமடைந்தும் வருகின்றனர். எனவே சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களால் உயிரிழப்போர், காயம் அடைவோரின் எண்ணிக்கை குறைக்க மத்திய அரசு தீவிரமாக முயன்று வருகிறது.

சமரசம்லாம் பண்ணிக்க முடியாது... முடிவு எடுத்தது எடுத்ததுதான்... இந்தியாவை அண்ணாந்து பார்க்கும் உலக நாடுகள்!

இதன் ஒரு பகுதியாக கார்களில் பல்வேறு பாதுகாப்பு வசதிகள் இடம்பெறுவதை மத்திய அரசு தொடர்ச்சியாக கட்டாயமாக்கி வருகிறது. இதன் காரணமாக கார்களின் விலைகள் சற்று உயர்ந்தாலும் கூட, பயணிகளின் பாதுகாப்பு மேம்பட்டு கொண்டுள்ளது. இந்த வரிசையில் மத்திய அரசு அதிரடியான ஒரு அறிவிப்பை ஏற்கனவே வெளியிட்டிருந்தது.

சமரசம்லாம் பண்ணிக்க முடியாது... முடிவு எடுத்தது எடுத்ததுதான்... இந்தியாவை அண்ணாந்து பார்க்கும் உலக நாடுகள்!

இந்த அறிவிப்பின்படி, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து எம்-1 கேட்டகரி வாகனங்களிலும் (M-1 Category) 6 ஏர்பேக்குகள் (6-Airbags) இடம்பெறுவது கட்டாயம் ஆகும். பயணிகளை ஏற்றி செல்வதற்கு பயன்படுத்தப்படும், ஓட்டுனர் இருக்கை உள்பட 8 இருக்கைகளுக்கு மிகாமல் இருக்கும் வாகனங்கள்தான் எம்-1 கேட்டகரியில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

சமரசம்லாம் பண்ணிக்க முடியாது... முடிவு எடுத்தது எடுத்ததுதான்... இந்தியாவை அண்ணாந்து பார்க்கும் உலக நாடுகள்!

இதன்படி பார்த்தால் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் கிட்டத்தட்ட அனைத்து கார்களும் எம்-1 கேட்டகரியை சேர்ந்தவைதான். எனவே அனைத்து கார்களிலும் 6 ஏர்பேக்குகளை கட்டாயம் வழங்கியாக வேண்டும் என்ற சூழல் கார்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு ஏற்பட்டது. இந்த உத்தரவு 2022ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதியில் இருந்து அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டது.

சமரசம்லாம் பண்ணிக்க முடியாது... முடிவு எடுத்தது எடுத்ததுதான்... இந்தியாவை அண்ணாந்து பார்க்கும் உலக நாடுகள்!

அதாவது நடப்பாண்டு அக்டோபர் 1ம் தேதியில் இருந்து, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து கார்களிலும் 6 ஏர்பேக்குகள் கட்டாயம் என்ற உத்தரவு அமலுக்கு வரும் என மத்திய அரசு கூறியிருந்தது. மத்திய அரசு வழங்கியிருந்த காலக்கெடு முடிவடைவதற்கான நேரம் நெருங்கி கொண்டிருக்கும் சூழ்நிலையில், தற்போது மற்றொரு அதிரடியான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சமரசம்லாம் பண்ணிக்க முடியாது... முடிவு எடுத்தது எடுத்ததுதான்... இந்தியாவை அண்ணாந்து பார்க்கும் உலக நாடுகள்!

இந்த புதிய அறிவிப்பின்படி, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து கார்களிலும் 6 ஏர்பேக்குகளை கட்டாயமாக வழங்க வேண்டும் என்ற சட்டம் வரும் 2023ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதியில் இருந்துதான் அமலுக்கு வரவுள்ளது. அதாவது இந்த புதிய சட்டத்ததை மத்திய அரசு ஓராண்டு காலத்திற்கு தள்ளி வைத்துள்ளது.

சமரசம்லாம் பண்ணிக்க முடியாது... முடிவு எடுத்தது எடுத்ததுதான்... இந்தியாவை அண்ணாந்து பார்க்கும் உலக நாடுகள்!

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறையின் அமைச்சரான நிதின் கட்கரிதான் (Nitin Gadkari) தற்போது இந்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். சர்வதேச அளவில் உதிரி பாகங்களின் வினியோக சங்கிலியில் தற்போது பல்வேறு பிரச்னைகள் காரணப்படுகின்றன. இதன் காரணமாக கார் உற்பத்தி நிறுவனங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

சமரசம்லாம் பண்ணிக்க முடியாது... முடிவு எடுத்தது எடுத்ததுதான்... இந்தியாவை அண்ணாந்து பார்க்கும் உலக நாடுகள்!

எனவே தற்போதைய சூழலில் அனைத்து கார்களிலும் 6 ஏர்பேக்குகள் கட்டாயம் என்ற சட்டத்தை அமலுக்கு கொண்டு வருவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. இதனை மனதில் வைத்துதான், 6 ஏர்பேக்குகள் கட்டாயம் என்ற உத்தரவு அமலுக்கு வருவது ஓராண்டு காலத்திற்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

சமரசம்லாம் பண்ணிக்க முடியாது... முடிவு எடுத்தது எடுத்ததுதான்... இந்தியாவை அண்ணாந்து பார்க்கும் உலக நாடுகள்!

எனினும் 2023ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதியில் இருந்து இந்த உத்தரவு அமலுக்கு வந்து விடும். அதன் பின்னர் மத்திய அரசு காலக்கெடுவை நீட்டிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என கருதப்படுகிறது. இதன் காரணமாக அடுத்தாண்டு அக்டோபர் 1ம் தேதிக்கு பிறகு, இந்தியாவில் விற்பனைக்கு வரும் கார்கள் தற்போது இருப்பதை காட்டிலும் மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும்.

சமரசம்லாம் பண்ணிக்க முடியாது... முடிவு எடுத்தது எடுத்ததுதான்... இந்தியாவை அண்ணாந்து பார்க்கும் உலக நாடுகள்!

இந்த விதிமுறை முறைப்படி அமலுக்கு வந்த பின், இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்கள் மற்றும் காயம் அடைபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது. எனவே மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமரசம்லாம் பண்ணிக்க முடியாது... முடிவு எடுத்தது எடுத்ததுதான்... இந்தியாவை அண்ணாந்து பார்க்கும் உலக நாடுகள்!

ஆனால் கார் உற்பத்தி நிறுவனங்கள் குறைந்தபட்சம் 6 ஏர்பேக்குகளை கட்டாயமாக வழங்கியாக வேண்டும் என்பதால், கார்களின் விலைகள் அதிரடியாக உயர்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் சிறிய அளவில் பணத்தை மிச்சம் பிடிப்பதற்காக பாதுகாப்பு விஷயத்தில் நாம் கடுகளவு கூட சமசரம் செய்து கொள்ள கூடாது. எனவே இது வரவேற்க வேண்டிய ஒரு நடவடிக்கைதான்.

சமரசம்லாம் பண்ணிக்க முடியாது... முடிவு எடுத்தது எடுத்ததுதான்... இந்தியாவை அண்ணாந்து பார்க்கும் உலக நாடுகள்!

உலகின் பல்வேறு நாடுகளிலும் பயணிகளுக்கு போதிய பாதுகாப்பை வழங்காத கார்கள் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்தியாவும் கூட ஒரு காலத்தில் அப்படிப்பட்ட நாடுகளில் ஒன்றாகதான் இருந்தது. ஆனால் இந்தியாவில் தற்போது கார்களின் பாதுகாப்பு வெகுவாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. வரும் காலங்களில் இந்திய கார்கள் பாதுகாப்பு விஷயத்தில் சர்வதேச தரத்தில் இருக்கும் என்பது உறுதி.

சமரசம்லாம் பண்ணிக்க முடியாது... முடிவு எடுத்தது எடுத்ததுதான்... இந்தியாவை அண்ணாந்து பார்க்கும் உலக நாடுகள்!

அதற்காக மத்திய அரசு உறுதியுடன் செயல்பட்டு வருவது பாராட்டுக்குரியது. இன்னும் சொல்லப்போனால் 6 ஏர்பேக்குகள் கட்டாயம் என்ற திட்டத்திற்கு இந்தியாவில் பல்வேறு நிறுவனங்களும் எதிர்ப்பு தெரிவித்தன. கார்களின் விலை உயர்ந்து, விற்பனை குறைந்து விடும் என்பதுதான் இந்த எதிர்ப்புகளுக்கு மிகவும் முக்கியமான காரணம்.

சமரசம்லாம் பண்ணிக்க முடியாது... முடிவு எடுத்தது எடுத்ததுதான்... இந்தியாவை அண்ணாந்து பார்க்கும் உலக நாடுகள்!

ஆனால் மத்திய அரசு அதனையெல்லாம் பொருட்படுத்தாமல், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் மிக உறுதியாக உள்ளது. 6 ஏர்பேக்குகள் கட்டாயம் என்ற திட்டம் சூழ்நிலை காரணமாக தற்போதைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதே தவிர, கார் நிறுவனங்களின் எதிர்ப்புகள் காரணமாக, மத்திய அரசு இந்த நல்ல திட்டத்தை ரத்து செய்து விடவில்லை!

Most Read Articles
English summary
6 airbags to become mandatory in every car from october 2023
Story first published: Thursday, September 29, 2022, 18:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X