ஸ்கார்பியோ-என் காரை டெலிவரி எடுத்த ஆனந்த் மஹிந்திரா... நல்ல பெயர் வைக்கும்படி நெட்டிசன்களுக்கு வேண்டுகோள்!

மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரை, ஆனந்த் மஹிந்திரா டெலிவரி எடுத்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஸ்கார்பியோ-என் காரை டெலிவரி எடுத்த ஆனந்த் மஹிந்திரா... நல்ல பெயர் வைக்கும்படி நெட்டிசன்களுக்கு வேண்டுகோள்!

மஹிந்திரா குழுமத்தின் தலைவர் (Mahindra Group Chairman) ஆனந்த் மஹிந்திரா (Anand Mahindra) தற்போது புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ-என் (Mahindra Scorpio-N) எஸ்யூவி காரை டெலிவரி எடுத்துள்ளார். இதனை தனது சமூக வலை தள பக்கங்கள் மூலமாகவும் அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஸ்கார்பியோ-என் காரை டெலிவரி எடுத்த ஆனந்த் மஹிந்திரா... நல்ல பெயர் வைக்கும்படி நெட்டிசன்களுக்கு வேண்டுகோள்!

அத்துடன் தனது புதிய காருக்கு நல்ல ஒரு பெயரை பரிந்துரை செய்யும்படியும் அவர் நெட்டிசன்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இங்கே ஒரு விஷயத்தையும் நாங்கள் கண்டிப்பாக குறிப்பிட்டே ஆக வேண்டும். ஆனந்த் மஹிந்திராவிற்கு புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரின் டெலிவரி உடனடியாக கிடைத்திருக்கலாம்.

ஸ்கார்பியோ-என் காரை டெலிவரி எடுத்த ஆனந்த் மஹிந்திரா... நல்ல பெயர் வைக்கும்படி நெட்டிசன்களுக்கு வேண்டுகோள்!

ஆனால் தற்போதைய சூழலில், இந்த புதிய எஸ்யூவி காருக்கான காத்திருப்பு காலம் சுமார் 2 ஆண்டுகள் வரை நீண்டுள்ளது! அதாவது நீங்கள் தற்போது முன்பதிவு செய்தால், 2 ஆண்டுகளுக்கு பிறகுதான் கார் டெலிவரி செய்யப்படும்! முன்பதிவு தொடங்கப்பட்டதில் இருந்தே மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காருக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஸ்கார்பியோ-என் காரை டெலிவரி எடுத்த ஆனந்த் மஹிந்திரா... நல்ல பெயர் வைக்கும்படி நெட்டிசன்களுக்கு வேண்டுகோள்!

முன்பதிவுகள் தொடங்கப்பட்ட முதல் 30 நிமிடங்களிலேயே மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காருக்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்து விட்டன. இது உண்மையிலேயே மிகப்பெரிய சாதனை என்பதில் துளியும் சந்தேகமில்லை. தற்போதைய நிலையில் மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரின் 11.99 லட்ச ரூபாயாக இருக்கிறது.

ஸ்கார்பியோ-என் காரை டெலிவரி எடுத்த ஆனந்த் மஹிந்திரா... நல்ல பெயர் வைக்கும்படி நெட்டிசன்களுக்கு வேண்டுகோள்!

அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 23.90 லட்ச ரூபாயாக உள்ளது. இங்கே குறிப்பிடப்பட்டுள்ளவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அவை 2.2 லிட்டர் mHawk டீசல் மற்றும் 2.0 லிட்டர் mStallion பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் ஆகும்.

ஸ்கார்பியோ-என் காரை டெலிவரி எடுத்த ஆனந்த் மஹிந்திரா... நல்ல பெயர் வைக்கும்படி நெட்டிசன்களுக்கு வேண்டுகோள்!

டிரான்ஸ்மிஷன் பணிகளை பொறுத்தவரையில், புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரில், 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன. அத்துடன் புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரில், வாடிக்கையாளர்களுக்கு தேவையான ஏராளமான வசதிகளும் வழங்கப்படுகின்றன.

ஸ்கார்பியோ-என் காரை டெலிவரி எடுத்த ஆனந்த் மஹிந்திரா... நல்ல பெயர் வைக்கும்படி நெட்டிசன்களுக்கு வேண்டுகோள்!

இதில், 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ட்யூயல் ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், தற்போது வேகமாக பிரபலம் அடைந்து வரும் கனெக்டட் கார் தொழில்நுட்பம் மற்றும் எலெக்ட்ரிக் சன்ரூஃப் போன்ற வசதிகள் இங்கே குறிப்பிடத்தக்கவை ஆகும்.

ஸ்கார்பியோ-என் காரை டெலிவரி எடுத்த ஆனந்த் மஹிந்திரா... நல்ல பெயர் வைக்கும்படி நெட்டிசன்களுக்கு வேண்டுகோள்!

இந்திய சந்தையில் டாடா ஹாரியர் (Tata Harrier), டாடா சஃபாரி (Tata Safari), ஹூண்டாய் அல்கஸார் (Hyundai Alcazar), எம்ஜி ஹெக்டர் (MG Hector) மற்றும் (MG Hector Plus) போன்ற கார்களுக்கு புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ-என் கார் விற்பனையில் மிகவும் கடுமையான சவாலை வழங்கி வருகிறது.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Anand mahindra takes delivery of scorpio n suv
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X