பல்க் ஆர்டர்! தமிழக நிறுவனத்தின் வாகனங்களை மொத்தமா வாங்கி போட்ட வெளிநாட்டு போலீஸ்! இவ்ளோ வண்டிகள் டெலிவரியா!

வெளிநாடு ஒன்றின் காவல் துறைக்கு அசோக் லேலண்ட் நிறுவனத்தின் வாகனங்கள் 'பல்க்'-ஆக டெலிவரி செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்த தகவல்களை விரிவாக பார்க்கலாம்.

அசோக் லேலண்ட் (Ashok Leyland) நிறுவனத்தை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இந்திய அளவில் மட்டுமல்லாது, உலக அளவிலும் முன்னணி வர்த்தக வாகன (Commercial Vehicles) தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக அசோக் லேலண்ட் திகழ்கிறது.

பல்க் ஆர்டர்! தமிழக நிறுவனத்தின் வாகனங்களை மொத்தமா வாங்கி போட்ட வெளிநாட்டு போலீஸ்! இவ்ளோ வண்டிகள் டெலிவரியா!

இது 74 வருட பாரம்பரியம் கொண்ட நிறுவனம் ஆகும் (அசோக் லேலண்ட் நிறுவனம் கடந்த 1948ம் ஆண்டு தொடங்கப்பட்டது). பஸ் மற்றும் லாரி போன்ற வர்த்தக வாகனங்களை அசோக் லேலண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. தமிழக தலைநகர் சென்னையில்தான் (Chennai) அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைமையகம் (Headquarters) அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம் ஓசூர் (Hosur) போன்ற பல்வேறு நகரங்களில் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்தியாவின் விமானப்படை போன்ற பாதுகாப்பு படைகளும், பல்வேறு போக்குவரத்து கழகங்களும் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் வாகனங்களை தற்போது பயன்படுத்தி வருகின்றன.

இந்த சூழலில், தான்சானியா நாட்டின் காவல் துறைக்கு (Tanzania Police Force) அசோக் லேலண்ட் நிறுவனம் தற்போது 150 வாகனங்களை டெலிவரி செய்துள்ளது. இந்த வாகனங்களை டெலிவரி செய்வது தொடர்பாக ஏற்கனவே தான்சானியா உள்துறை அமைச்சகம் மற்றும் அசோக் லேலண்ட் ஆகிய நிறுவனங்களுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தது.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் அசோக் லேலண்ட் நிறுவனம் தற்போது தான்சானியா காவல் துறைக்கு வாகனங்களை டெலிவரி செய்துள்ளது. தான்சானியா காவல் துறைக்கு அசோக் லேலண்ட் நிறுவனம் தற்போது டெலிவரி செய்துள்ள வாகனங்களில், காவல் துறையினர் பயணம் செய்யக்கூடிய பஸ்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் மீட்பு வாகனங்கள் போன்றவை அடங்குகின்றன.

ஆனால் தான்சானியா காவல் துறையினர் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் வாகனங்களை பயன்படுத்துவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே தான்சானியா முழுவதும் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் 475 வாகனங்களை அந்நாட்டின் காவல் துறை பயன்பாட்டில் வைத்துள்ளது. இந்த சூழலில் தற்போது அசோக் லேலண்ட் நிறுவனத்தின் 150 வாகனங்கள் அவர்களிடம் புதிதாக இணைந்துள்ளன.

இதன் மூலம் தான்சானியா காவல் துறையிடம் தற்போது உள்ள அசோக் லேலண்ட் நிறுவனத்தின் வாகனங்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 625 ஆக உயர்ந்துள்ளது. வரும் காலங்களில் தான்சானியா காவல் துறைக்கு அசோக் லேலண்ட் நிறுவனம் இன்னும் நிறைய வாகனங்களை சப்ளை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு இந்திய நிறுவனத்தின், அதுவும் தமிழகத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஒரு நிறுவனத்தின் வாகனங்கள் வெளிநாட்டு காவல் துறையால் பயன்படுத்தப்பட்டு வருவது நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டிய விஷயம்தான். தான்சானியா மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளுக்கும் அசோக் லேலண்ட் நிறுவனம் வாகனங்களை சப்ளை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Ashok leyland delivers 150 trucks and buses to tanzania
Story first published: Thursday, November 17, 2022, 18:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X