பழைய ஆக்டிவா, ஜுபிடர் எதுவா இருந்தாலும் எக்ஸ்சேஞ்ஜ் செய்துக்கலாம்.. ஏத்தரின் இயர் என்ட் 1ரூபா ஆஃபரும் அறவிப்பு

நாட்டின் முன்னணி மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஏத்தர் எனெர்ஜியும் ஒன்று. இந்த நிறுவனம் இந்திய சந்தையில் ஏத்தர் 450 பிளஸ் மற்றும் ஏத்தர் 450 எக்ஸ் என்கிற இரு விதமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இவை இரண்டிற்கும் இந்தியர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்பு நிலவிக் கொண்டிருக்கின்றது. சென்ற நவம்பர் மாதத்தில் மட்டும் 7 ஆயிரத்து 234 யூனிட்டுகள் வரை ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையாகி உள்ளன. இந்த அளவிற்கே பேராதரவு ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு நாட்டில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பை இரட்டிப்பாக்கும் முயற்சியிலேயே தற்போது ஏத்தர் களமிறங்கியிருக்கின்றது. இதன் அடிப்படையில் சூப்பர் ஆஃபரை நிறுவனம் நாட்டில் அறிமுகம் செய்திருக்கின்றது.

ஏத்தர்

எக்ஸ்சேஞ்ஜ் மற்றும் சிறப்பு ஃபைனான்ஸ் திட்டங்களை ஆஃபரின் கீழ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதுதவிர, கூடுதல் சிறப்பாக ரூ. 6,999 மதிப்புள்ள பேட்டரிக்கான கூட்டப்பட்ட வாரண்டி காலத்தை வெறும் ரூ. 1க்கு வழங்க இருப்பதாகவும் ஏத்தர் எனெர்ஜி தெரிவித்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களால் பேட்டரி மீது கூடுதலாக இரண்டு ஆண்டுகள் வாரண்டியை பெற முடியும். அதாவது, வழக்கமான ஓராண்டு வாரண்டியுடன் சேர்த்து ரூ. 1 செலவில் அதை மூன்று ஆண்டுகளாக வாடிக்கையாளர்களால் உயர்த்திக் கொள்ள முடியும்.

புதிய வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு நிறுவனம் இந்த சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. நடப்பு ஆண்டின் இறுதியை முன்னிட்டும் இந்த ஆஃபர் அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் காரணத்தினாலேயே 'ஏத்தர் எலெக்ட்ரிக் டிசம்பர்' என அந்த திட்டத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழே புதிய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட இருக்கின்றன. முன்னதாக கூறியதைப் போல் நிதி திட்டத்தையும் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக நிறுவனம் ஐடிஎஃப்சி வங்கி உடன் கூட்டு சேர்ந்திருக்கின்றது. இந்த கூட்டணியின் வாயிலாக 8.5 சதவீதம் என்கிற மிகக் குறைவான வட்டியின்கீழ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு வழங்கப்பட இருக்கின்றன. மேலும், மிகக் குறைவான டவுண்பேமென்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வழங்க இருப்பதாகவும் ஏத்தர் தெரிவித்துள்ளது. வாகனத்தின் மொத்த விலையில் 5 சதவீதம் செலுத்தினாலே போதுமாம். இத்துடன், 48 மாத கால இஎம்ஐ திட்டமும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

இத்துடன், பூஜ்ஜியம் புராசஸிங் கட்டணம் மற்றும் உடனடி லேன் அப்ரூவலையும் வழங்குவதற்கான ஏற்பாடுகளை நிறுவனம் செய்துள்ளது. இதுதவிர, எக்ஸ்சேஞ்ஜ் திட்டமும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. பெட்ரோல் இருசக்கர வாகனத்தையும் எக்ஸ்சேஞ்ஜ் செய்து கொள்ளலாம் என ஏத்தர் அறிவித்துள்ளது. இந்தியாவில் பெட்ரோல் வாகன பயன்பாட்டைக் குறைத்து மின்சார இருசக்கர வாகன பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாகவே இந்த சிறப்பு எக்ஸ்சேஞ்ஜை அறிவித்துள்ளது. எக்ஸ்சேஞ்ஜை ஊக்குவிக்க நிறுவனம் கூடுதல் போனஸாக ரூ. 4 ஆயிரம் வழங்க இறுப்பதாக தெரிவித்துள்ளது.

இவற்றுடன் மதிப்பு கூட்டப்பட்ட திட்டமட்டமாக ஏத்தர் கிரிட் எலெக்ட்ரிக் சார்ஜிங் மையத்தை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பையும் நிறுவனம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. 31 டிசம்பர் 2023 வரை இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலே பார்த்த இந்த சலுகைகள் அனைத்தும் புதிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். குறிப்பாக, இந்த சலுகை இந்த 2022 டிசம்பர் வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும். இந்த சிறப்பு சலுகைகள் அனைத்தும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆண்டின் இறுதியில் விற்பனையில் புதிய விற்பனை உச்சத்தை தொட வேண்டும் என்ற நோக்கிலும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது விற்பனையில் இருப்பது 450 எக்ஸ் ஜென் 3 வெர்ஷன் ஆகும். இது ரூ. 1.57 லட்சம் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஏத்தர் 450 பிளஸ் ரூ. 1.35 லட்சம் விலை விற்கப்படுகின்றது. இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். ஏத்தர் டாட்/ போர்டபிள் சார்ஜர் மற்றும் பெர்ஃபார்மன்ஸ் அப்கிரேட் ஆகிய இரண்டும் இந்த கட்டணத்தின் கீழே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

450 பிளஸ் ஓர் முழு சார்தில் 85 கிமீ தூரம் வரை பயணிக்கும். இதனை ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்யும் பட்சத்தில் வெறும் பத்தே நிமிடங்களில் 10 கிமீ தூரம் பயணிப்பதற்கான சார்ஜை ஏற்றிக் கொள்ளும். 450 எக்ஸ்-இல் ஃபுல் சார்ஜில் 105 கிமீ பயணிக்க முடியும். இது 450 பிளஸ் தேர்வைக் காட்டிலும் அதிக சிறப்பு வசதிகள் கொண்டதாக காட்சியளிக்கின்றது. இசையை அனுபவிக்கும் வசதி மற்றும் ப்ளூடூத் இணைப்பு வசதிக் கொண்ட திரை உள்ளிட்டவை 450 பிளஸ் தேர்வில் இடம் பெற்றிருக்கும்.

Most Read Articles
English summary
Ather energy announced special offers
Story first published: Saturday, December 3, 2022, 18:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X