சூப்பரோ சூப்பரான காரை சொகுசு காரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்திருக்கும் ஆடி! விலைகூட அவ்வளவு அதிகமில்ல!

ஆடி (Audi) நிறுவனம் அதன் க்யூ5 (Audi Q5) சொகுசு கார் மாடலில் சிறப்பு பதிப்பு (special edition) ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த வாகனம் குறித்த கூடுதல் விபரங்களை கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

சூப்பரோ சூப்பரான காரை சொகுசு காரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்திருக்கும் ஆடி... விலைகூட அவ்வளவு அதிகமில்ல!

ஆடி (Audi) நிறுவனம் இந்திய சொகுசு வாகன சந்தையில் க்யூ5 ஸ்பெஷல் எடிசன் (Q5 special edition)-ஐ விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. வழக்கமான ஆடி க்யூ5 காரைக் காட்டிலும் அதிக சொகுசு வசதிகள் மற்றும் அலங்கார அணிகலன்களைக் கொண்டதாக இந்த ஸ்பெஷல் எடிசனை நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

சூப்பரோ சூப்பரான காரை சொகுசு காரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்திருக்கும் ஆடி... விலைகூட அவ்வளவு அதிகமில்ல!

இதனை ஸ்பெஷல் வாகனமாக காட்ட ஆடி என்னென் சிறப்பு வசதிகளை இக்காரில் கையாண்டுள்ளது என்பது பற்றிய விரிவான விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

சூப்பரோ சூப்பரான காரை சொகுசு காரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்திருக்கும் ஆடி... விலைகூட அவ்வளவு அதிகமில்ல!

ஆடி க்யூ5 காரின் வேரியண்ட் விபரம்:

ஆடி நிறுவனம் ஏற்கனவே க்யூ5 பிரீமியம் பிளஸ் (Audi Q5 Premium Plus) மற்றும் க்யூ5 டெக்னாலஜி (Audi Q5 Technology) எனும் இரு தேர்வுகளை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவற்றின் வரிசையிலேயே தற்போது புதிதாக ஆடி க்யூ5 ஸ்பெஷல் எடிசன் (Audi Q5 Special Edition) சேர்க்கப்பட்டுள்ளது. ஆகையால், தற்போது ஆடி க்யூ5 மூன்று விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும்.

சூப்பரோ சூப்பரான காரை சொகுசு காரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்திருக்கும் ஆடி... விலைகூட அவ்வளவு அதிகமில்ல!

விலை விபரம்:

 • ஆடி க்யூ5 பிரீமியம் பிளஸ் : ரூ. 60,50,000
 • ஆடி க்யூ5 டெக்னாலஜி : ரூ. 66,21,000
 • ஆடி க்யூ5 ஸ்பெஷல் எடிசன் : ரூ. 67,05,000
 • அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் மதிப்பாகும்.

  சூப்பரோ சூப்பரான காரை சொகுசு காரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்திருக்கும் ஆடி... விலைகூட அவ்வளவு அதிகமில்ல!

  க்யூ5 ஸ்பெஷல் எடிசனில் அதிகளவு சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்ற காரணத்தினாலேயே அதன் விலை மட்டும் பிற வேரியண்டுகளைக் காட்டிலும் அதிகமானதாகக் காட்சியளிக்கின்றது. தெளிவாகக் கூற வேண்டுமானால் ரூ. 84 ஆயிரம் வழக்கமான வேரியண்டான டெக்னாலஜியைக் காட்டிலும் அதிக விலையைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது.

  சூப்பரோ சூப்பரான காரை சொகுசு காரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்திருக்கும் ஆடி... விலைகூட அவ்வளவு அதிகமில்ல!

  மோட்டார்:

  இந்த காரில் மிக சிறந்த திறன் வெளிப்பாட்டிற்காக 2.0 லிட்டர் 45 டிஎஃப்எஸ்ஐ மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 249 எச்பி பவரையும், 370 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 237 கிமீ ஆகும். அதேவேலையில், இது வெறும் 6.3 செகண்டில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டும் திறன் கொண்டது.

  சூப்பரோ சூப்பரான காரை சொகுசு காரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்திருக்கும் ஆடி... விலைகூட அவ்வளவு அதிகமில்ல!

  இதுதவிர, மிக சிறந்த சஸ்பென்ஷன் அனுபவத்திற்காக அடாப்டீவ் சஸ்பென்ஷன், டேம்பிங் கன்ட்ரோலுடன் வழங்கப்பட்டிருக்கின்றது. இதுதவிர, ஆறு விதமான ரைடிங் மோட்கள், குவாட்ரோ 4 வீல் டிரைவ் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்களும் இந்த காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. கம்ஃபோர்ட் (comfort), டைனமிக் (dynamic), இன்டிவிடுசுவல் (individual), ஆட்டோ (auto), எஃப்சீயன்சி (efficiency) மற்றும் ஆஃப் ரோடு (off-road) ஆகிய ரைடிங் மோட்களே வழங்கப்பட்டிருக்கின்றன.

  சூப்பரோ சூப்பரான காரை சொகுசு காரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்திருக்கும் ஆடி... விலைகூட அவ்வளவு அதிகமில்ல!

  காரின் வெளிப்புற தோற்றம்:

  காரின் வெளிப்புறத்தை அதிக கவர்ச்சியானதாக மாற்ற வேண்டும் என்பதற்காக சிங்கிள் ஃப்ரேம், வெர்டிக்கல் ஸ்ட்ரட்ஸ் உடன் வழங்கப்பட்டுள்ளது. இது காரின் முகப்பு பகுதிக்கு கூடுதல் கவர்ச்சியையும், அழகையும் வழங்கியிருக்கின்றது. இத்துடன், காருக்கு கூடுதல் அழகைச் சேர்க்கும் விதமாக எல்இடி ஹெட்லைட், பனோரமிக் சன்ரூஃப், சாவியில்லாமல் நுழையும் வசதி, சென்சார் கன்ட்ரோல்ட் பூட் லிட் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன.

  சூப்பரோ சூப்பரான காரை சொகுசு காரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்திருக்கும் ஆடி... விலைகூட அவ்வளவு அதிகமில்ல!

  காரின் உட்பக்கம்:

  ஆடி நிறுவனம் க்யூ5 ஸ்பெஷல் எடிசன் உட்பக்கத்தை முற்றிலும் அதிக சொகுசு வசதிகள் நிறைந்ததாக உருவாக்கியிருக்கின்றது. அந்தவகையில், காரின் அனைத்து இருக்கையிலும் லெதர் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இத்துடன், 8 ஏர் பேக்குகள், பார்க் அசிஸ்ட், ஞாபக வசதியுடன் கூடிய பவர் இருக்கைகள், ஒயர்லெஸ் சார்ஜிங், 3 ஜோன் ஏர் கன்டிஷனிங், ஆம்பியன்ட் லைட்டுகள் உள்ளிட்டவை இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

  சூப்பரோ சூப்பரான காரை சொகுசு காரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்திருக்கும் ஆடி... விலைகூட அவ்வளவு அதிகமில்ல!

  கூடுதல் சிறப்பு கருவியாக இந்த காரில் 25.65 செமீ அளவிலான வண்ண மல்டிமீடியா திரை வழங்கப்பட்டிருக்கின்றது. இது தொடுதிரை வசதிக் கொண்டது. இது தவிர ஆடியின் லேட்டஸ்ட் எம்எம்ஐ நேவிகேஷன், எம்எம்ஐ டச், வாய்ஸ் கன்ட்ரோல், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதிகளும் இந்த திரையில் வழங்கப்பட்டிருக்கும்.

  சூப்பரோ சூப்பரான காரை சொகுசு காரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்திருக்கும் ஆடி... விலைகூட அவ்வளவு அதிகமில்ல!

  இதுதவிர, ஆடி விர்சுவல் காக்பிட் பிளஸ், பிரீமியம் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த ஆடியோ சிஸ்டம் 19 ஸ்பீக்கர்கள் மற்றும் 3 டி சவுண்ட் சிஸ்டம் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இவற்றைத் தொடர்ந்து காரின் உட்பகுதியை கருப்பு நிறத்தால் அலங்கரித்திருக்கின்றது தயாரிப்பு நிறுவனம். மேலும், மிர்ரர், ஆடி லோகோ, ரூஃப் ரெயில்கள் மற்றும் அலாய் வீல் ஆகியவற்றிலும் கருப்பு நிறம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதுபோன்று இன்னும் பல சிறப்பு வசதிகளை இந்த காரில் ஆடி நிறுவனம் வழங்கியிருக்கின்றது.

  குறிப்பு: முதல் மூன்று படங்களை மற்ற அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.

Most Read Articles

English summary
Audi launches q5 special edition in india
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X