2022 ஆடி க்யூ7 காருக்கான முன்பதிவுகள் இந்தியாவில் துவக்கம்!! பிப்ரவரியில் அறிமுகம்!

ஆடி இந்தியா நிறுவனம் அதன் புதிய எஸ்யூவி காரான க்யூ7 -க்கான முன்பதிவுகளை அதிகாரப்பூர்வமாக துவங்கியுள்ளது. இதுகுறித்தும், இந்த புதிய ஆடி எஸ்யூவி கார் குறித்தும் இனி இந்த செய்தியில் முழுமையாக பார்ப்போம்.

2022 ஆடி க்யூ7 காருக்கான முன்பதிவுகள் இந்தியாவில் துவக்கம்!! பிப்ரவரியில் அறிமுகம்!

ஜெர்மன் லக்சரி கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி விரைவில் அடுத்த தலைமுறை க்யூ7 மாடலை திருத்தப்பட்ட மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணக்கமானதாக இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதன் அறிமுகத்தை அடுத்த 2022 பிப்ரவரி மாதத்தில் எதிர்பார்க்கிறோம்.

2022 ஆடி க்யூ7 காருக்கான முன்பதிவுகள் இந்தியாவில் துவக்கம்!! பிப்ரவரியில் அறிமுகம்!

இந்த நிலையில் தான் தற்போது புதிய ஆடி க்யூ7 காருக்கான முன்பதிவுகள் ரூ.50,000 என்கிற முன்தொகை உடன் இந்தியா முழுவதும் துவங்கப்பட்டுள்ளன. விருப்பப்படும் வாடிக்கையாளர் இணையத்தளம் மூலமாகவும் அல்லது அருகில் உள்ள ஆடி இந்தியா டீலர்ஷிப் மையங்கள் மூலமாகவும் இந்த சொகுசு ஆடி எஸ்யூவி காரை புக் செய்யலாம்.

2022 ஆடி க்யூ7 காருக்கான முன்பதிவுகள் இந்தியாவில் துவக்கம்!! பிப்ரவரியில் அறிமுகம்!

புதிய தலைமுறை க்யூ7, பிரீமியம் ப்ளஸ் மற்றும் டெக்னாலஜி என்கிற இரு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட உள்ளது. இவை இரண்டிலும் ஆற்றல்மிக்க புதிய 3.0 லிட்டர் வி6 பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட உள்ளது. 2022 ஆடி க்யூ7 மாடலில் சிறப்பம்சங்களாக தகவமைத்து கொள்ளக்கூடிய காற்று சஸ்பென்ஷன், ஆடி ட்ரைவ் செலக்ட், குவாட்ரோ அனைத்து-சக்கர-ட்ரைவ் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன.

2022 ஆடி க்யூ7 காருக்கான முன்பதிவுகள் இந்தியாவில் துவக்கம்!! பிப்ரவரியில் அறிமுகம்!

இவற்றுடன் ஓட்டுனர் உதவி அம்சங்களாக 360-கோண கேமிரா உடன் பார்க்கிங் உதவி+ மற்றும் வாகனம் பாதை மாறுவதை எச்சரிக்கும் வசதி உள்ளிட்டவை கொடுக்கப்பட உள்ளன. பிரகாசமான ஒளியை வழங்க முன் மற்றும் பின்பக்கத்தில் மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் டைனாமிக் டர்ன் இண்டிகேட்டர்களுடன் எல்இடி டெயில்லேம்ப்களை க்யூ7 ஏற்றுவரவுள்ளது.

2022 ஆடி க்யூ7 காருக்கான முன்பதிவுகள் இந்தியாவில் துவக்கம்!! பிப்ரவரியில் அறிமுகம்!

பயணிகளின் பாதுகாப்பிற்கு 4-நிலை ஏசி, காற்று அயனியாக்கி & நறுமணமாக்கி, 30 நிறங்களுடன் கேபினை சுற்றிலும் விளக்குகள் மற்றும் பிரீமியம் தரத்திலான 3டி சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்டவற்றை புதிய க்யூ7 கொண்டுள்ளது. இத்தகைய காருக்கு முன்பதிவுகள் துவங்கப்பட்டிருப்பது குறித்து ஆடி இந்தியா நிறுவனத்தின் தலைமை அதிகாரி பல்பிர் சிங் தில்லோன் பேசுகையில், "2021ஆம் ஆண்டில் ஒன்பது தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

2022 ஆடி க்யூ7 காருக்கான முன்பதிவுகள் இந்தியாவில் துவக்கம்!! பிப்ரவரியில் அறிமுகம்!

பிறகு, புத்தாண்டில் மற்றொரு நம்பமுடியாத அறிமுகத்துடன் காலடி எடுத்து வைப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் - பிரபலமான ஆடி க்யூ7 மாடலின் முன்பதிவுகளை இன்று துவங்குகிறோம். ஆடி க்யூ7 ஆனது அதன் ஈடில்லா மகத்தான சாலை நிலைப்பாடு மற்றும் அதன் பல்துறை செயல்திறனுக்காக எப்போதும் வாடிக்கையாளர்களால் விரும்பப்படுகிறது - சாலையில் மற்றும் வெளியே.

2022 ஆடி க்யூ7 காருக்கான முன்பதிவுகள் இந்தியாவில் துவக்கம்!! பிப்ரவரியில் அறிமுகம்!

ஆடி க்யூ7 -ஐ நாங்கள் இப்போது புதிய வடிவமைப்பு மற்றும் அம்சங்களுடன் ஒரு உச்சநிலையாக எடுத்து வருகிறோம். ஆடி குடும்பத்தில் சேர விரும்பும் தற்போதைய மற்றும் சாத்தியமான வாடிக்கையாளர்களால் ஆடி க்யூ7 தொடர்ந்து விரும்பப்படும் என்று நான் நம்புகிறேன்." என்றார். இந்திய சந்தையில் சொகுசு கார்கள் விற்பனையில் மெர்சிடிஸ்-பென்ஸ், பிஎம்டபிள்யூ நிறுவனங்களுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் தற்சமயம் ஆடி உள்ளது.

2022 ஆடி க்யூ7 காருக்கான முன்பதிவுகள் இந்தியாவில் துவக்கம்!! பிப்ரவரியில் அறிமுகம்!

இரண்டாவது இடத்திற்கு இந்த நிறுவனத்திற்கும், பிஎம்டபிள்யூவிற்கும் பலத்த போட்டி நிலவி வருகிறது. ஆனால் விரைவில் இரண்டாவது இடத்தை ஆடி பிடித்துவிடும் என்றே தெரிகிறது. ஏனெனில் கடந்த 2021ஆம் ஆண்டு விற்பனையில், அதற்கு முந்தைய 2020ஆம் ஆண்டை காட்டிலும் சுமார் 101% வளர்ச்சியை ஆடி இந்தியா நிறுவனம் அடைந்துள்ளது. மொத்தமாக கடந்த ஆண்டில் 3,293 ஆடி கார்கள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

2022 ஆடி க்யூ7 காருக்கான முன்பதிவுகள் இந்தியாவில் துவக்கம்!! பிப்ரவரியில் அறிமுகம்!

இத்தகைய வளர்ச்சிக்கு, இந்தியாவில் ஆடியின் 5 எலக்ட்ரிக் கார்களான இ-ட்ரான் 50, இ-ட்ரான் 55, இ-ட்ரான் ஸ்போர்ட்பேக் 55, இ-ட்ரான் ஜிடி, ஆர்எஸ் இ-ட்ரான் ஜிடி உள்ளிட்டவையும், பெட்ரோல் கார்களான க்யூ-வரிசை ஏ-செடான்களுமே முக்கிய காரணிகளாக விளங்குகின்றன. கடந்த ஆண்டில் இந்தியாவில் ஆடி அறிமுகப்படுத்திய 9 மாடல்களில் 5 இ-ட்ரான் எலக்ட்ரிக் கார்களும் அடங்குகின்றன.

2022 ஆடி க்யூ7 காருக்கான முன்பதிவுகள் இந்தியாவில் துவக்கம்!! பிப்ரவரியில் அறிமுகம்!

ஆடி இந்தியா நிறுவனத்தின் க்யூ வரிசையில் க்யூ8 மாடலுக்கு கீழே புதியதாக நிலைநிறுத்தப்பட உள்ள 2022 க்யூ7 காரின் அறிமுகத்தை முன்னதாக இந்த ஜனவரி மாதத்தில் எதிர்பார்த்தோம். ஏனெனில் இந்தியாவில் இந்த எஸ்யூவி கார் தயாரிக்கப்படுவது கடந்த டிசம்பர் மாத துவக்கத்திலேயே ஆரம்பித்துவிட்டது. ஆனால் இதன் அறிமுகம் அடுத்த 2022 பிப்ரவரி மாதத்தில்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஆடி #audi
English summary
Audi, the German luxury car manufacturer, today announced the commencement of bookings for its next-generation Audi Q7 in India. Powered by a new powerful 3.0L V6 TFSI petrol engine, the new Audi Q7 promises a perfect blend of performance, style, comfort and drivability. The Audi Q7 can be booked at an initial booking amount of INR 500,000.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X