ஸ்கோடா குஷாக் & டைகுன் எஸ்யூவி கார்களில் முக்கிய வசதி நீக்கம்!! காரணம் என்ன தெரியுமா?

குறைக்கடத்திகளுக்கான பற்றாக்குறை உலகளவில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களையும் பதம் பார்த்து வருகின்றன. இந்த பிரச்சனை தற்போதைக்கு தீரும் நிலையில் இல்லை. ஆதலால் வரும் மாதங்களுக்கு குறைக்கடத்திகளுக்கான தேவை அதிகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.

ஸ்கோடா குஷாக் & டைகுன் எஸ்யூவி கார்களில் முக்கிய வசதி நீக்கம்!! காரணம் என்ன தெரியுமா?

குறிப்பாக, மிக சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மாடர்ன் வாகனங்களை தயாரிக்கவே அதிகளவில் குறைக்கடத்திகளுக்கான தேவை ஏற்படுகிறது. இதனால் சில ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது விற்பனை வாகனங்களில் சில வசதிகளை நீக்க திட்டமிட்டு வருகின்றன. மஹிந்திரா அதன் எக்ஸ்யூவி700 எஸ்யூவி காரினை அதிநவீன ஓட்டுனர் உதவி அம்சங்கள் இல்லாமல் விற்பனை செய்ய உள்ளதாக சமீபத்தில் நமது செய்திதளத்தில் பார்த்திருந்தோம்.

ஸ்கோடா குஷாக் & டைகுன் எஸ்யூவி கார்களில் முக்கிய வசதி நீக்கம்!! காரணம் என்ன தெரியுமா?

இந்த வகையில் ஃபோக்ஸ்வேகன் & ஸ்கோடா நிறுவனங்கள் அவற்றின் டைகுன் மற்றும் குஷாக் காம்பெக்ட் எஸ்யூவி மாடல்களில் எலக்ட்ரிக் மூலமாக மடக்கக்கூடிய பின்பக்கத்தை காட்டும் வெளிப்புற கண்ணாடிகளை நீக்க உள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. இத்தகைய அம்சம் இந்த கார்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளதை அறிந்த வாடிக்கையாளர் ஒருவர் இதுகுறித்து டுவிட்டரில் ஸ்கோடா இந்தியா நிறுவனர் ஸாக் ஹோலிஸிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஸ்கோடா குஷாக் & டைகுன் எஸ்யூவி கார்களில் முக்கிய வசதி நீக்கம்!! காரணம் என்ன தெரியுமா?

பின்னர் இதற்கு பதிலளித்த ஸாக் ஹோலிஸ், குறைக்கடத்திகளுக்கான பற்றாக்குறையால் இத்தகைய முடிவினை எடுத்துள்ளதாகவும், இந்த சூழ்நிலை விரைவில் சீராகும் என நம்பிக்கையாக இருங்கள் எனவும் தெரிவித்துள்ளார். குறைக்கடத்திகளின் பற்றாக்குறையால் சில பாகங்களை தயாரிப்பு நிறுவனங்களால் தயாரிக்க முடியாமல் போக, இது மொத்த காரின் தயாரிப்பு பணிகளுக்கும் தடையாக அமைந்துவிடுகிறது.

ஸ்கோடா குஷாக் & டைகுன் எஸ்யூவி கார்களில் முக்கிய வசதி நீக்கம்!! காரணம் என்ன தெரியுமா?

இதில் இருந்து தப்பிக்கவே குறைக்கடத்திகள் அதிகம் தேவைப்படும் பாகங்களின் தயாரிப்பு நிறுத்தி கொள்ளப்பட்டு வருகிறது. ஸ்கோடா & ஃபோக்ஸ்வேகன் நிறுவனங்களின் இணைய பக்கத்தில் இருந்து எஸ்யூவி கார்கள் குறித்த விபரங்களில் எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய வெளிப்புற கண்ணாடிகளுக்கு பதிலாக, மேனுவலான வெளிப்புற கண்ணாடிகளின் பெயர் கொடுக்கப்பட்டுள்ளன.

ஸ்கோடா குஷாக் & டைகுன் எஸ்யூவி கார்களில் முக்கிய வசதி நீக்கம்!! காரணம் என்ன தெரியுமா?

இதனால் குஷாக் & டைகுன் மாடல்களின் அனைத்து வேரியண்ட்களிலும் எலக்ட்ரிக் மூலமாக மடக்கும் வெளிப்புற கண்ணாடிகள் கிடைக்காதா என்பது உறுதியாக தெரியவில்லை. வெப்சைட்டில் இந்த அப்டேட்டினை பார்த்த பின்புதான் இதுகுறித்து ஸாக் ஹோலிஸிடம் இந்த நபர் கேள்வியெழுப்பி இருக்க வேண்டும். பொதுவாக இவ்வாறு காரின் வசதிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டால், அதற்கேற்ப காரின் விலைகளும் மாற்றப்படும்.

ஸ்கோடா குஷாக் & டைகுன் எஸ்யூவி கார்களில் முக்கிய வசதி நீக்கம்!! காரணம் என்ன தெரியுமா?

ஆதலால் குஷாக் & டைகுன் கார்களின் விலைகளிலும் சற்று மாற்றம் கொண்டுவரப்பட்டிருக்கலாம். முழு விபரங்களுக்கு அருகில் உள்ள ஃபோக்ஸ்வேகன் ஸ்கோடா டீலர்ஷிப் மையங்களை அணுகவும். இந்த இரு எஸ்யூவி கார்களின் விலைகள் சமீபத்தில், இந்த 2022ஆம் ஆண்டின் துவக்கத்தில்தான் ரூ.45,000 வரையில் உயர்த்தப்பட்டு இருந்தன.

ஸ்கோடா குஷாக் & டைகுன் எஸ்யூவி கார்களில் முக்கிய வசதி நீக்கம்!! காரணம் என்ன தெரியுமா?

ஸ்கோடா ஆட்டோ நிறுவனமும், ஃபோக்ஸ்வேகனும் கூட்டணியில் இருப்பது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம். இதனாலேயே இவை இரண்டும் இந்தியா 2.0 என்கிற பெயரிலான திட்டத்தில் அவற்றின் புதிய எஸ்யூவி கார்களாக குஷாக் மற்றும் டைகுன் மாடல்களை கடந்த 2021ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தி இருந்தன. மேலும் இவை இரண்டிலும் பொதுவான வசதிகள் ஏகப்பட்டவை வழங்கப்படுகின்றன.

ஸ்கோடா குஷாக் & டைகுன் எஸ்யூவி கார்களில் முக்கிய வசதி நீக்கம்!! காரணம் என்ன தெரியுமா?

இதில், ஆப்பிள் கார்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ & மிரர்லிங்க் உடன் இணைக்கக்கூடிய 10-இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், மடக்கும் வசதி கொண்ட முன் இருக்கைகள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், கேபினை சுற்றிலும் விளக்குகள், கூல்டு க்ளோவ்-பாக்ஸ், எலக்ட்ரிக் சன்ரூஃப் மற்றும் வயர் இல்லா சார்ஜிங் வசதி உள்ளிட்டவை அடங்குகின்றன. டைகுன் மாடலில் கூடுதலாக முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் வழங்கப்படுகிறது.

ஸ்கோடா குஷாக் & டைகுன் எஸ்யூவி கார்களில் முக்கிய வசதி நீக்கம்!! காரணம் என்ன தெரியுமா?

ஆனால் குஷாக் மாடலில் இது செமி-டிஜிட்டல் தரத்திலேயே உள்ளது. பயணிகளின் பாதுகாப்பிற்கு இவை இரண்டும் 6 காற்றுப்பைகள், இபிடி உடன் ஏபிஎஸ், இஎஸ்சி, வாகனத்தை சுற்றிலும் ஏற்படும் மோதல்களை தடுக்கும் ப்ரேக்கிங், வாகனம் குலுங்குவதை தடுப்பான், ப்ரேக் டிஸ்க் துடைப்பான், ஏறுமுகமாக சாலையில் நிற்பதற்கான கண்ட்ரோல் மற்றும் டயரின் அழுத்தத்தை அளவிடும் அமைப்பு உள்ளிட்டவற்றை பெறுகின்றன.

ஸ்கோடா குஷாக் & டைகுன் எஸ்யூவி கார்களில் முக்கிய வசதி நீக்கம்!! காரணம் என்ன தெரியுமா?

ஆக்டிவ், அம்பிஷன் மற்றும் ஸ்டைல் என்கிற 3 விதமான ட்ரிம் நிலைகளில் விற்பனை செய்யப்படும் ஸ்கோடா குஷாக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.10.79 லட்சங்களில் இருந்து ரூ.17.99 லட்சங்கள் வரையில் உள்ளன. ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஆனது டைனாமிக் லைன் மற்றும் பெர்ஃபார்மன்ஸ் லைன் என்கிற 2 விதமான ட்ரிம் நிலைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.10.99 லட்சங்களில் இருந்து ரூ.17.99 லட்சங்கள் வரையில் உள்ளன.

Most Read Articles
English summary
Auto folding orvm feature deleted in skoda kushaq volkswagen taigun
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X