பென்ட்லி கார்ல இருக்குற இந்த விஷயம் பலருக்குத் தெரியாது... இதுல இவ்வளவு சிக்ரெட் இருக்குதா?

பென்ட்லி நிறுவனம் தனது கார்களுக்கு முன்னாள் பொருத்தக்கூடிய ஃபிளையிங் பி மாஸ்காட்டின் 6 வது தலைமுறையைச் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்திற்குப் போட்டியாக இதை பென்ட்லி நிறுவனம் செய்துள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கார்களில் முன்பக்கம் ஸ்பிரிட் ஆஃப் எஸ்டெசி பொம்மை பொருத்தப்பட்டிருக்கும். இந்த பொம்மை குறித்து பலர் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதை நீங்கள் திருடவோ, உடைக்கவோ சேதப்படுத்தவோ முடியாது. இதற்கான முயற்சியைச் செய்தாலே இந்த பொம்மை தானாக காருக்குள்ளே சென்று மறைந்து கொண்டு தன்னை பாதுகாத்துக்கொள்ளும்.

பென்ட்லி கார்ல இருக்குற இந்த விஷயம் பலருக்குத் தெரியாது... இதுல இவ்வளவு சிக்ரெட் இருக்குதா?

ரோல்ஸ் ராய்ஸ் காரின் இந்த ஸ்பிரிட் ஆஃப் எஸ்டெசி வடிவத்திற்குப் பின்னால் ஒரு பெரும் வரலாறே இருக்கிறது. இதற்குப் போட்டியாக தற்போது பென்ட்லி நிறுவனமும் இதே போல தன் காரின் முன்னால் வைக்க Flying B என்ற மாஸ்காட்டை உருவாக்கியுள்ளது. இதை இந்நிறுவனம் நீண்ட ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகிறது. இதுவரை இந்த மஸ்கட்வின் 5ம் தலைமுறை மஸ்கட்வை இந்நிறுவனம் பயன்படுத்தி வந்த நிலையில் அடுத்ததாக 6ம் தலைமுறை மஸ்கட்டை வெளியிட்டுள்ளனர்.

பென்ட்லி இந்நிறுவனம் Flying B மாஸ்காட்டை 316 கிரேடு ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் உருவாக்கப்பட்டுள்ளது. இது ரஃப்பாகவும், ஆஸ்டென்டிக் கிரிஸ்டலின் வடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இது அதிக குளிர் மற்றும் அதிக வெப்பம் ஆகிய 2 தட்ப வெப்ப நிலையைத் தாங்கும் திறன் கொண்டது. மேலும் இது எப்பொழுதும் வெளியில் மழை, காற்று, தூசு போன்ற விஷயங்களுக்கு எக்ஸ்ஃபோஸ் ஆனாலும் அதனால் எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்க இதில் மாலிபிடினம் என்ற வேதிப் பொருள் சேர்க்கப்பட்டுள்ளது.

பென்ட்லி நிறுவனம் இந்த Flying B மாஸ்காட்டை உருவாக்க இன்வெஸ்ட்மெண்ட் கேஸ்டிங் புரோசெஸை செய்கிறது. இது மிக முக்கியமா பாகங்களாகன கேஸ் டர்பைன் பிளேடு, உள்ளிட்ட பொருட்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் முறையாகும். இந்த முறை அதிக நேரம் எடுக்கக்கூடியது. இந்த முறை பெரும்பாலும் மிகக் குழப்பமான அல்லது சிக்கலான வடிவங்களைக் கொண்ட டிசைன்களை உருவாக்கப் பயன்படுத்தப்படும்.

குறிப்பாக டைட்டான டாலரென்ஸ், லேசான சுவர் பகுதி, சிறப்பான சர்ஃபேஸ் ஃபினீஷ், ஆகியவை இதில் சிறப்பாக இருக்கும். சாண்ட் கேஸ்டிங்கை விட இந்த முறை தான் சிறப்பான ரிசெல்டை தரும் என்பதால் இந்த முறையில் பென்ட்லி நிறுவனம் உருவாக்கியுள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்திற்கு எப்படி ஒரு கிரேஸ் உள்ளதோ அதே போல இந்த Flying B மாஸ்காட்டிற்கும் ஒரு கிரேஸ் உள்ளது.

இந்த Flying B மாஸ்காட்டை பென்ட்லி நிறுவனம் தனது ஃபிளையின் ஸ்பவுர் காரில் மட்டுமே பயன்படுத்தப்படவுள்ளது. இந்த கார் பென்ட்லி நிறுவனத்தின் விலையுயர்ந்த கார்களில் ஒன்றாகும். இந்த காரின் இந்திய மதிப்பு ரூ3.41 கோடியாகும். இந்த காரில் இந்த Flying B மாஸ்காட் இல்லாத வேரியன்டும் இருக்கிறது. பென்ட்லி நிறுவனம் ஃபிளையிங் ஸ்பவுர் காரை வாங்கும் 97 சதவீதம் பேர் இந்த மாஸ்காட் உடன் தான் வாங்குகின்றனர் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary
Bently introduce 6th gen flying b mascot
Story first published: Monday, November 21, 2022, 12:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X