இவைதான் இந்தியாவின் தாராளமான லெக்ரூம் வசதிகொண்ட ஹேட்ச்பேக் கார்கள்! ஏனோதானோனு காரை வாங்கிட்டு அவஸ்தபடாதீங்கபா!

காரை வாங்குறது பெரிய விஷயமே இல்லைங்க. அந்த காரு நமக்கு ஏத்ததா?, நம்முடைய குடும்பத்திற்கு ஏத்ததா?, வீட்ல இருக்கு எல்லாராலையும் கம்ஃபேர்டா பயணிக்க முடியுமா இதெல்லாம் வாங்குறதுதாங்க மிகப் பெரிய டாஸ்க்கே. ஏன்னா வீட்டுல ஒரு உயரமாகவும், ஒருத்தர் குட்டையாகவும் இருப்பாங்க.

இதுமட்டுமில்ல, குண்டு, மெல்லிய தேகம் என கலவையாக இருக்கும் குடும்பங்களும் இந்தியாவில் உண்டு. இந்த மாதிரியான குடும்பங்களைக் கொண்டிருப்பவர்கள் காரை வாங்கச் செல்லும்முன் அந்த கார் உங்கள் குடும்பத்திற்கு ஏற்றதாக இருக்குமா என பார்த்து வாங்குவதே நல்லதே. இந்த கார்களை அமேசானில் வாங்கும் செல்போன் நினைத்து கொள்ள வேண்டாம். பிடிக்கவில்லை என்றால் வாகனங்களை திருப்பி கொடுத்து பணத்தை பெறுவது என்பது இயலாத ஒன்று.

அதிக இட வசதி கொண்ட கார்

எனவேதான் அவற்றை வாங்குமுன் ஒன்றிற்கு பல முறை டெஸ்ட் டிரைவ் செய்தும், யோசித்தும் வாங்க வேண்டும். இந்த பதிவில் நாங்கள் நமது வாசகர்களுக்கு பயனளிக்கும் விதமாக இந்தியாவின் அதிகமான லெக்ரூம் வசதிக் கொண்ட கார்களின் லிஸ்டை தொகுத்து வழங்கியிருக்கின்றோம். சிறிய ரக கார் பிரியர்களுக்கு உதவும் விதமாக பெரிய லெக்ரூம் கொண்ட ஹேட்ச்பேக் கார்களின் லிஸ்டையே இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

டாடாவின் எந்தெந்த ஹேட்ச்பேக் ரக கார்கள் அதிக லெக்ரூமுடன் விற்பனைக்குக் கிடைக்கின்றது?

டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் முன்னணி கார் மாடல்களில் அல்ட்ராஸும் ஒன்று. இது ஓர் அதிக பிரீமியம் வசதிகள் கொண்ட ஹேட்ச்பேக் ரக காராகும். இந்த காரின் வீல் பேஸ் 2,501 மிமீட்டராக இருக்கின்றது. ஆகையால், லெக்ரூம் நாம் எதிர்பார்த்த அளவிற்கு இருக்கும். இதேபோல் இக்காரின் கேபின் அளவும் பெரியதாக இருக்கும். இதுமட்டுமில்லைங்க, இந்த கார் பாதுகாப்பு விஷயத்திலும் நம்மை வியப்பில் ஆழ்த்தும் வகையில் இருக்கின்றது. இது ஐந்துக்கு 5 ஸ்டார்களை பெற்ற பாதுகாப்பான காராகும். இந்த கார் ரூ. 6.34 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இந்த காருக்கு அடுத்தபடியாக டாடா நிறுவனத்தின் அதிகம் லெக்ரூம் கொண்ட ஹேட்ச்பேக் காராக டியாகோ இருக்கின்றது. இதுவும் அல்ட்ராஸைப் போல் அதிக பாதுகாப்பான கார் மாடல் ஆகும். இந்த காரின் வீல் 2,400 மிமீ ஆகும். ஆகையால், அசௌகரியமில்லாத ஓர் லெக்ரூம் வசதியை இதில் பயணிப்பவர்களால் பெற்றுக் கொள்ள முடியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. குறிப்பாக, 6 அடி வரையில் உயரம் கொண்டவர்களுக்கு இந்த காரில் போதுமான லெக்ரூம் கிடைக்கும். இந்த காரை டாடா மோட்டார்ஸ் ரூ. 5.45 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்கு வழங்குகின்றது.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் அதிகம் லெக்ரூம் வசதிக் கொண்ட கார்கள்:

மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் பிரபலமான ஹேட்ச்பேக் ரக கார் மாடல்களில் பலினோவும் ஒன்று. இது அதிக பிரீமியம் வசதிகள் நிறைந்த ஹேட்ச்பேக் ரக காராகும். இதன் நீளமான வீல் பேஸ் காருக்குள் அமர்ந்து பயணிப்பவர்களுக்கு போதுமான லெக்ரூமை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. இதன் வீல் பேஸ் நீளம் 2,520 மிமீ ஆகும். இதுவே பின் பக்க இருக்கையாளர்களுக்கு மிக சிறப்பான லெக்ரூமை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. இநத் காரின் ஆரம்ப நிலை வேரிண்ட் ரூ. 6.49 லட்சத்திற்கு விற்கப்படுகின்றது.

இந்த மாடலுக்கு அடுத்தபடியாக மாருதியின் அதிகம் வீல் பேஸ் கொண்ட ஹேண்ட்ச்பேக் காராக ஸ்விஃப்ட் இருக்கின்றது. இந்த காரின் வீல் பேஸ் 2,450 மிமீ ஆகும். இதுவே கேபினையும், லெக்ரூமையும் விசாலமானதாக மாற்றியிருக்கின்றது. இந்த காரின் ஆரம்ப விலை ரூ. 5.92 லட்சம் ஆகும். இந்த விலையிலேயே அதிக சிறப்பு வசதிகளுடன் ஸ்விஃப்ட் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதைத்தொடர்ந்து, நிறுவனத்தின் மூன்றாவது அதிகம் லெக்ரூம் கொண்ட காராக வேகன்ஆர் இருக்கின்றது. இந்த காரின் வீல் பேஸ் 2,435 என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதன் விலை ரூ. 5.47 லட்சம் ஆகும். இந்த லெக்ரூம் மட்டுமல்ல ஹெட்ரூம் மிக தாராளமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. மாருதியின் அதிக லெக்ரூம் வசதிக் கொண்ட கார்களின் எண்ணிக்கை வேகன்ஆர் மாடலுடன் நிறைவுறவில்லை. இந்த பட்டியல் சற்று நீண்டு காணப்படுகின்றது. ஆமாங்க, நிறுவனத்திடம் நான்காவதாக ஓர் அதிகம் லெக்ரூம் வசதிக் கொண்ட கார் மாடலும் இருக்கின்றது. அது செலிரியோ ஆகும். இந்த காரின் பின்புறத்தில் மூன்று பேர் வரை மிக தாராளமாக அமர்ந்து பயணிக்க முடியும். மிக சிறப்பான லெக்ரூம் மற்றும் ஹெட்ரூம் வசதியுடன் அவர்களால் பயணிக்க முடியும்.

ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகம் லெக்ரூம் வசதிக் கொண்ட கார்கள்:

ஹூண்டாய் நிறுவனத்தின் ஐ20 இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் அதிக லெக்ரூம் வசதிக் கொண்ட கார் மாடல்களில் ஒன்றாகும். இந்த காரின் வீல்-பேஸ் 2,580 ஆக இருக்கின்றது. இதுவே பயணிகளுக்கு போதுமான லெக்ரூமை ஏற்படுத்திக் கொடுக்க ஏதுவானதாக அமைந்துள்ளது. இந்த கார் நிறுவனத்தின் அதிகம் பிரீமியம் வசதிகள் நிறைந்த வாகனமாக இருக்கின்றது. குறிப்பாக, மிகப் பெரிய ரூமில் கிடைக்கும் வசதி இந்த காரில் தாராளமாகக் கிடைக்கும். இந்த காருக்கு அடுத்தபடியாக ஹூண்டாய் ஐ10 நியாஸ் இருக்கின்றது. இந்த காரின் வீல்பேஸ் 2.450 மிமீ ஆகும். மிக சிறந்த ஸ்பேஸ் மற்றும் லெக்ரூம் கொண்ட காராக இது இருக்கின்றது. இந்த காரின் ஆரம்ப விலை ரூ. 5.42 லட்சம் ஆகும். ஹூண்டாய் ஐ20 இன் ஆரம்ப விலை 13 லட்ச ரூபா ஆகும்.

டொயோட்டா மற்றும் ரெனால்ட் நிறுவனங்களின் அதிகம் லெக்ரூம் கொண்ட கார்:

டொயோட்டா நிறுவனம் மாருதி சுஸுகியின் பலினோ காரை ரீபேட்ஜ் செய்து கிளான்ஸா எனும் பெயரில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. எனவே பலினோவில் உள்ள அனதை்து வசதிகளையும் இந்த காரிலும் நம்மால் பெற்றுக் கொள்ள முடியும். ஆமாங்க, அந்த காரின் லெக்ரூமும் கிளான்ஸாவும் லெக்ரூம் ஒன்றே ஆகும். இதுமட்டுமின்றி, பலினோவில் இல்லாத சில சிறப்பு வசதிகளையும் இந்த காரில் நம்மால் பெற முடியும். குறிப்பாக, அதிக பிரீமியம் வசதிகளை இந்த காரில் நம்மால் தாராளமாக பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

நம்முடைய இந்த லிஸ்டில் கடைசியான கார் மாடலாக ரெனால்ட் க்விட் இருக்கின்றது. ரூ. 4.64 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் கிடைக்கும் இந்த ஹேட்ச்பேக் ரக காரின் வீல் பேஸ் 2,422 மிமீ ஆகும். ஆகையால், லெக்ரூம் மிக தாராளமானதாகக் காட்சியளிக்கின்றது. இதனை எஸ்யூவி ஸ்டைலில் ரெனால்ட் நிறுவனம் உருவாக்கியிருப்பதால் இட வசதிக்கும் பற்றாக் குறையின்றி க்விட் காட்சியளிக்கின்றது. இந்த காரின் பின்-பக்க மைய இருக்கைக்கு பிரத்யேகமாக ஆர்ம்ரெஸ்ட் வழங்கப்பட்டிருப்பது பயணிகளுக்கு கூடுதல் சௌகரியமானதாக அமைந்துள்ளது.

Most Read Articles
English summary
Best legroom hatchbacks
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X