UK-வில் அதிகம் விற்பனையாகும் காராக டெஸ்லாவின் மாடல் 3 செடான்!! பெட்ரோல், டீசல் கார்களுக்கே டஃப் கொடுக்குது!

ஐக்கிய இராஜ்ஜியம் (UK)-இல் அதிகளவில் விற்பனை செய்யப்படும் கார்களுள் முதன்மையானதாக டெஸ்லா மாடல் 3 உருவெடுத்துள்ளது. இதுதொடர்பான கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

UK-வில் அதிகம் விற்பனையாகும் காராக டெஸ்லாவின் மாடல் 3 செடான்!! பெட்ரோல், டீசல் கார்களுக்கே டஃப் கொடுக்குது!

உலகளவில் பிரபலமான எலக்ட்ரிக் கார்களின் பெயர்களை குறிப்பிட்டால், நிச்சயம் அவற்றில் ஒரே ஒரு டெஸ்லா காரின் பெயரையாவது குறிப்பிடாமல் இருக்க முடியாது. ஏனெனில் அந்த அளவிற்கு உலகம் முழுவதிலும் டெஸ்லா எலக்ட்ரிக் கார்கள் பரந்து விரிந்துள்ளன. என்ன... இன்னும் நம் இந்தியாவில் தான் டெஸ்லா கார்கள் அறிமுகம் செய்யப்படவில்லை.

UK-வில் அதிகம் விற்பனையாகும் காராக டெஸ்லாவின் மாடல் 3 செடான்!! பெட்ரோல், டீசல் கார்களுக்கே டஃப் கொடுக்குது!

ஆனால் உலகின் மிக பெரிய ஆட்டோமொபைல் சந்தையாக விளங்கும் சீனாவில் மற்ற போட்டி நிறுவனங்கள் அனைத்தையும் முந்திக்கொண்டு டெஸ்லா முன்னிலையில் உள்ளது. சீனாவில் மட்டுமல்ல, அமெரிக்க இவி நிறுவனமாக இருப்பினும், ஐரோப்பாவிலும் டெஸ்லாவின் தயாரிப்பு வாகனங்களுக்கு நல்ல மார்க்கெட் தற்போதைக்கு உள்ளது.

UK-வில் அதிகம் விற்பனையாகும் காராக டெஸ்லாவின் மாடல் 3 செடான்!! பெட்ரோல், டீசல் கார்களுக்கே டஃப் கொடுக்குது!

அதிலிலும் குறிப்பாக, டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் செடான் காருக்கு யுகே எனப்படும் ஐக்கிய இராஜ்ஜியத்தில் எரிபொருள் என்ஜின் கார்களுக்கு இணையான வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த 2021ஆம் ஆண்டில் யுகேவில் விற்பனை செய்யப்பட்ட கார்களின் விற்பனை எண்ணிக்கை குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.

UK-வில் அதிகம் விற்பனையாகும் காராக டெஸ்லாவின் மாடல் 3 செடான்!! பெட்ரோல், டீசல் கார்களுக்கே டஃப் கொடுக்குது!

கடந்த ஆண்டு யுகே-வில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட காராக முதலிடத்தில் வோக்ஸ்ஹால் கோர்சா (Vauxhall Corsa) உள்ளது. இரண்டாவது இடத்தை டெஸ்லா மாடல் 3 பிடித்துள்ளது. உலகின் எந்தவொரு நாட்டிலும் மலிவான டெஸ்லா எலக்ட்ரிக் காராக மாடல் 3 விளங்குகிறது. இதனாலேயே யுகே-வில் மட்டுமில்லாமல், பெரும்பான்மையான நாடுகளில் அதிகளவில் விற்பனையாகும் டெஸ்லா மாடலாக மாடல் 3 உள்ளது.

UK-வில் அதிகம் விற்பனையாகும் காராக டெஸ்லாவின் மாடல் 3 செடான்!! பெட்ரோல், டீசல் கார்களுக்கே டஃப் கொடுக்குது!

இவ்வாறு எலக்ட்ரிக் காராக எப்போதோ தன்னை முன்னிலைப்படுத்திவிட்ட டெஸ்லா மாடல் 3 செடான் கார், தற்போது மொத்த கார்களுக்கு (அதாவது எரிபொருள் என்ஜின் கார்களையும் சேர்த்து) மத்தியிலும் தனக்கான இடத்தை வலுப்படுத்தி கொண்டு வருகிறது. யுகே-வில் கடந்த 2021ஆம் ஆண்டு கார்கள் விற்பனையில் டெஸ்லாவின் மாடல் 3 ஃபோக்ஸ்வேகன் போலோ & கோல்ஃப், ஃபோர்டு ஃபீஸ்டா & புமா, கியா ஸ்போர்டேஜ் மற்றும் டொயோட்டா யாரிஸ் போன்ற அங்கு பிரபலமான கார்களை பின்னுக்கு தள்ளியுள்ளது.

UK-வில் அதிகம் விற்பனையாகும் காராக டெஸ்லாவின் மாடல் 3 செடான்!! பெட்ரோல், டீசல் கார்களுக்கே டஃப் கொடுக்குது!

3மோட்டார் உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி பார்க்கும்போது, கடந்த ஆண்டில் பேட்டரி கார்களின் விற்பனை யுகே-வில் புதிய உச்சத்தை தொட்டுள்ளன. கடந்த ஆண்டில் அங்கு மொத்தம் 190,000 இவி-கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் எரிபொருள் என்ஜின் கார்களையும் சேர்த்த மொத்த விற்பனை, 1992க்கு பிறகு கடந்த 2021இல் வெகுவாக குறைந்துள்ளது.

UK-வில் அதிகம் விற்பனையாகும் காராக டெஸ்லாவின் மாடல் 3 செடான்!! பெட்ரோல், டீசல் கார்களுக்கே டஃப் கொடுக்குது!

கொரோனா வைரஸ் & குறைக்கடத்திகளுக்கான பற்றாக்குறை உள்ளிட்டவற்றினால் இதற்கு முந்தைய 2020ஆம் ஆண்டிலும் இத்தகைய நிலையே இருந்ததாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டில் யுகே-வில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 கார்களுள் ஒரே ஒரு எலக்ட்ரிக் காராக டெஸ்லா மாடல் 3 உள்ளது. இதில் இருந்து ஐக்கிய இராஜ்ஜிய வாடிக்கையாளர்களின் தேவை எந்த அளவிற்கு மாடல் 3 எலக்ட்ரிக் செடானின் மீது சாய்ந்துள்ளது என்பதை அறியலாம்.

UK-வில் அதிகம் விற்பனையாகும் காராக டெஸ்லாவின் மாடல் 3 செடான்!! பெட்ரோல், டீசல் கார்களுக்கே டஃப் கொடுக்குது!

ஏற்கனவே கூறியதுபோல், டெஸ்லா நிறுவனத்தின் விற்பனையில் மாடல் 3 கார் ஓர் முக்கியமான பங்காற்றி வருகிறது. இதற்கு இதன் மலிவான விலையினை முக்கிய காரணமாக சொல்லலாம். இருப்பினும், மாடல் 3-ஐ காட்டிலும் மலிவான எலக்ட்ரிக் காரினை தயாரிக்கும் பணிகளில் உள்ளதாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் முன்னதாக தெரிவித்து இருந்தார். இந்த புதிய மாடல் டெஸ்லாவின் உலகளாவிய விற்பனையை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

UK-வில் அதிகம் விற்பனையாகும் காராக டெஸ்லாவின் மாடல் 3 செடான்!! பெட்ரோல், டீசல் கார்களுக்கே டஃப் கொடுக்குது!

அதுமட்டுமின்றி புதிய நாட்டு சந்தைகளில் களம்புக டெஸ்லாவிற்கு நல்லதொரு அடித்தளத்தை அமைத்து கொடுக்கக்கூடிய தயாரிப்பாகவும் இது விளங்கலாம். எடுத்துக்காட்டு, இந்தியா. இந்திய சந்தையில் களமிறங்க கடந்த சில வருடங்களாக டெஸ்லா முயற்சிகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளது. இருந்தாலும் தற்போதுவரையில் இதற்கான ஒரு முடிவு எட்டப்படவில்லை.

UK-வில் அதிகம் விற்பனையாகும் காராக டெஸ்லாவின் மாடல் 3 செடான்!! பெட்ரோல், டீசல் கார்களுக்கே டஃப் கொடுக்குது!

இருப்பினும் சமீப காலங்களில், சில டெஸ்லா கார்களை நம் இந்திய சாலைகளில் பார்த்துள்ளோம். அதுமட்டுமில்லாமல் ஒருமுறை, டெஸ்லாவின் சூப்பர்சார்ஜர்கள் கூட கட்டடம் ஒன்றிற்குள் அடையாளம் காணப்பட்டு இருந்தன. மேலும் தேசிய தலைநகர் டெல்லி, சென்னை, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இந்த சூப்பர்சார்ஜர்களை நிறுவ எத்தகைய சாத்திய சூழல் உள்ளது என்பதையும் டெஸ்லா ஆராய்ந்து வருவதாக அந்த சமயத்தில் செய்திகள் வெளியாகி இருந்தன.

Most Read Articles
மேலும்... #டெஸ்லா #tesla
English summary
Best selling car in uk tesla model 3 took the second spot
Story first published: Friday, January 7, 2022, 23:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X