தேவைக்கேற்ப நிறத்தை மாற்றிக்கொள்ளும் புதிய பிஎம்டபிள்யூ எலக்ட்ரிக் கார்!! பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எம்60...!

தேவைக்கு ஏற்ப நிறத்தை மாற்றிக்கொள்ளும் வசதியுடன் பிஎம்டபிள்யூ நிறுவனம் அதன் முதல் எம்-பிராண்ட் எலக்ட்ரிக் காரினை வெளியீடு செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

தேவைக்கேற்ப நிறத்தை மாற்றிக்கொள்ளும் புதிய பிஎம்டபிள்யூ எலக்ட்ரிக் கார்!! பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எம்60...!

ஒரே நிறத்தில் காரை பயன்படுத்தி வருவது சிலருக்கு ஒரு கட்டத்தின் மேல் சலிப்பு ஏற்பட்டுவிடும். இதற்காக சிலர் காரின் நிறத்தின் புதிய வ்ராப்-ஆல் மாற்றுவது உண்டு. ஆனால் ஒரு பொத்தானை அழுத்தினாலே நிறத்தை மாற்றிக்கொள்ளக்கூடிய தொழிற்நுட்பத்துடன் புதிய எலக்ட்ரிக் காரினை பிஎம்டபிள்யூ உருவாக்கியுள்ளது.

தேவைக்கேற்ப நிறத்தை மாற்றிக்கொள்ளும் புதிய பிஎம்டபிள்யூ எலக்ட்ரிக் கார்!! பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எம்60...!

ஐஎக்ஸ் எம்60 என பெயர் கொண்ட இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி கார் 2022 நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்புமிக்க தொழிற்நுட்பத்துடன் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எம்-பிராண்டில் வெளியீடு செய்யப்பட்டுள்ள முதல் எலக்ட்ரிக் கார் என்ற சிறப்பை பெற்றுள்ளது.

தேவைக்கேற்ப நிறத்தை மாற்றிக்கொள்ளும் புதிய பிஎம்டபிள்யூ எலக்ட்ரிக் கார்!! பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எம்60...!

ஐஎக்ஸ் எம்60 காரின் மூலமாக இந்த வெளிப்புற பெயிண்ட்டை மாற்றும் தொழிற்நுட்பத்தையும் பார்வையாளர்கள் முன்பு பிஎம்டபிள்யூ காட்சிப்படுத்தி உள்ளது. நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் அடர் க்ரே நிறத்தில் காட்சியளித்த கார் பின்னர் வெள்ளை நிறத்திற்கு மாறுகிறது. பிஎம்டபிள்யூவின் இந்த பெயிண்ட்-மாற்று தொழிற்நுட்பமானது இ-பேப்பர் மூலமாக செயல்படுகிறது.

தேவைக்கேற்ப நிறத்தை மாற்றிக்கொள்ளும் புதிய பிஎம்டபிள்யூ எலக்ட்ரிக் கார்!! பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எம்60...!

இ-ரீடர்கள் (e-readers)-ஐ பற்றி கேள்விப்பட்டுள்ளீர்களா? கிட்டத்தட்ட இதே போன்றதுதான் இந்த தொழிற்நுட்பமும். இருப்பினும் இந்த தொழிற்நுட்பம் இன்னமும் பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் ஃப்ளோ என்ற பெயரில் கான்செப்ட் வெர்சனாகவே காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த தொழிற்நுட்பத்தை, இ இன்க் உடன் காரின் மேற்பரப்பு பூச்சு மனித முடியின் தடிமனுக்கு சமமான விட்டம் கொண்ட மில்லியன் கணக்கான மைக்ரோ கேப்சூல்களை கொண்டுள்ளது.

தேவைக்கேற்ப நிறத்தை மாற்றிக்கொள்ளும் புதிய பிஎம்டபிள்யூ எலக்ட்ரிக் கார்!! பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எம்60...!

இந்த மைக்ரோ கேப்சூல்கள் ஒவ்வொன்றிலும் எதிர்மறையாக சார்ஜ் செய்யப்பட்ட வெள்ளை நிறமிகள் மற்றும் நேர்மறையாக சார்ஜ் செய்யப்பட்ட கருப்பு நிறமிகள் உள்ளன. இதுகுறித்து பிஎம்டபிள்யூ ஏஜி, மேம்பாட்டு நிர்வாக குழு உறுப்பினர்ட் ஃபிராங்க் வெபர் கூறுகையில், "டிஜிட்டல் அனுபவங்கள் எதிர்காலத்தில் காட்சிகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாது.

தேவைக்கேற்ப நிறத்தை மாற்றிக்கொள்ளும் புதிய பிஎம்டபிள்யூ எலக்ட்ரிக் கார்!! பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எம்60...!

உண்மையான மற்றும் மெய்நிகர் இரண்டிற்கும் இடையே வலுவான ஒருங்கிணைப்பு இருக்கும். பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் ஃப்ளோ மூலம், நாங்கள் காரின் உடலை உயிர்ப்பிக்கிறோம்." என்றார். பிஎம்டபிள்யூ க்ரூப் வடிவமைப்பு பிரிவின் முதன்மை அதிகாரி அட்ரியன் வான் ஹூய்டோன்க் பேசுகையில், "பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் ஃப்ளோ என்பது ஒரு மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு திட்டமாகும். மேலும் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் முற்போக்கான சிந்தனைக்கு இது சிறந்த எடுத்துக்காட்டாகும்." என்றார்.

தேவைக்கேற்ப நிறத்தை மாற்றிக்கொள்ளும் புதிய பிஎம்டபிள்யூ எலக்ட்ரிக் கார்!! பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எம்60...!

இந்த தொழிற்நுட்பம், எலக்ட்ரோஃபோரெடிக் வண்ணமயமாக்கல் என்று அழைக்கப்படுகிறது. இதன் உதவியுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளமைவை பொறுத்து, மின்சார புலம் மூலம் காரின் மேற்பரப்பின் நிறத்தை மாற்றி கொள்ளலாம். ஏற்கனவே கூறியதுபோல், இந்த செயல்பாடுகள் அனைத்தும் வெறும் ஒரு பொத்தானை தொடுவதின் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது.

தேவைக்கேற்ப நிறத்தை மாற்றிக்கொள்ளும் புதிய பிஎம்டபிள்யூ எலக்ட்ரிக் கார்!! பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எம்60...!

ஆனால் இப்போதைக்கு காரின் வெளிப்புற நிறத்தை வெள்ளையில் இருந்து அடர் க்ரே நிறத்திற்குமே மாற்றி கொள்ள முடிகிறது. பிஎம்டபிள்யூவின் கூற்றுப்படி, இந்த கஸ்டமைஷேஷன் வசதியானது சுற்றுச்சூழல் நிலைக்கு ஏற்ப மற்றும் செயல்பாட்டு தேவைகளுக்கு ஏற்ப பதிலளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேவைக்கேற்ப நிறத்தை மாற்றிக்கொள்ளும் புதிய பிஎம்டபிள்யூ எலக்ட்ரிக் கார்!! பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எம்60...!

இந்திய சந்தையை பொறுத்தவரையில், மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்திற்கு அடுத்து அதிகளவில் சொகுசு கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக பிஎம்டபிள்யூ விளங்குகிறது. அதிலிலும் குறிப்பாக, கடந்த 2021ஆம் ஆண்டு கடந்த 10 ஆண்டுகளிலேயே மிக சிறப்பான ஆண்டாக இந்திய சந்தையில் அமைந்துள்ளதாக பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் சார்பில் சமீபத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

தேவைக்கேற்ப நிறத்தை மாற்றிக்கொள்ளும் புதிய பிஎம்டபிள்யூ எலக்ட்ரிக் கார்!! பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எம்60...!

2021இல் ஒட்டுமொத்தமாக 8,876 கார்களை பிஎம்டபிள்யூ இந்திய சந்தையில் விற்பனை செய்துள்ளது. இதில் 8,236 பிஎம்டபிள்யூ கார்களும், 640 மினி கார்களும் கடந்த ஆண்டில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதேபோல் பிஎம்டபிள்யூ மோட்டார்சைக்கிள்களின் விற்பனையும் கடந்த ஆண்டில் குறிப்பிடத்தக்க அளவில் சிறப்பானதாகவே இருந்துள்ளது. கடந்த ஆண்டில் மொத்தம் 5,191 பிஎம்டபிள்யூ பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

தேவைக்கேற்ப நிறத்தை மாற்றிக்கொள்ளும் புதிய பிஎம்டபிள்யூ எலக்ட்ரிக் கார்!! பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எம்60...!

பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தியாவில் அதன் உற்பத்தி பணிகளை கிட்டத்தட்ட 40% வரையில் உள்ளூர் மயமாக்கி உள்ளது. இதன் காரணமாக மற்ற போட்டி நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு இணையாக, சவாலான விலையினை இந்த நிறுவனத்தால் நிர்ணயிக்க முடிந்துள்ளது. இந்த வகையில் எக்ஸ்1, எக்ஸ்3 மற்றும் எக்ஸ்5 ஆகிய கார் மாடல்களின் விலையை கணிசமாக குறைத்திருந்தது.

Most Read Articles
English summary
How to change the colour of your car Watch BMW iX M60 do with click of a button.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X