Just In
- 7 min ago
இந்தியாவின் கடைசி போலோ கார் டெலிவரி வழங்கப்பட்டது... சோகத்தில் மூழ்கிய ஃபோக்ஸ்வேகன் நிர்வாகம்!
- 1 hr ago
காலி பால்பாக்கெட்டிற்கு தள்ளுபடி விலையில் பெட்ரோல் / டீசல்... அசத்தும் தொழிலதிபர்...
- 2 hrs ago
விபத்தில் சிக்கிய பாடகியின் டாடா பஞ்ச் கார்... ஹைலைட் என்னனா அவங்களுக்கு சின்னத ஒரு கீரல்கூட ஏற்படல!
- 13 hrs ago
விமான பணிப்பெண்களுக்கு இவ்ளோ சம்பளம் தர்றாங்களா! இத்தன சலுகைகள் வேற இருக்கா! இதுக்கெல்லாம் குடுப்பினை வேணும்!
Don't Miss!
- News
ஆஹா இது தெரியாம போச்சே.. "ரக்கர்ட் பாய்ஸ்"னா யாரு? அவங்களைதான் பொண்ணுங்களுக்கு ரொம்ப பிடிக்குமாம்!
- Technology
5.8-இன்ச் டிஸ்பிளேவுடன் விரைவில் அறிமுகமாகும் சூப்பரான Samsung போன்.!
- Finance
தங்கம் விலை இன்று எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா.. இது வாங்க சரியான நேரம் தான்!
- Movies
முதல் ரவுண்டில் ப்ளாக் பஸ்டர் கொடுத்த டாப் ஹீரோஸ்: இரண்டாவது ரவுண்ட்ல சக்சஸ் பண்ண முடிஞ்சுதா?
- Sports
காமன்வெல்த்-ல் அனல்பறந்த குத்தாட்டம்.. அரங்கையே ஆட வைத்த தமிழர்கள்.. சர்வதேச அளவில் பெருமை - வீடியோ!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய ஒப்பந்தம் எதையும் செய்திடாமல் இருப்பது நல்லது...
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
சென்னை ஆலையில் தயாரிக்கப்பட்ட புதிய காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது பிஎம்டபிள்யூ! இது செம்ம வேகத்துல போகும்!
பிஎம்டபிள்யூ நிறுவனம் சென்னை ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட அதிக வேகத்தில் இயங்கக் கூடிய புதுமுக சொகுசு கார் ஒன்றை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான பிஎம்டபிள்யூ சென்னை ஆலையில் வைத்து உருவாக்கப்பட்ட புதுமுக சொகுசு கார் ஒன்றை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. எம்340ஐ எக்ஸ்டிரைவ் 50 ஜஹ்ரே எம் எடிசன் (BMW M340i xDrive 50 Jahre M Edition) எனும் சிறப்பு பதிப்பு காரையே அது விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட மிகவும் வேகமாக இயங்கக் கூடிய சொகுசு கார் இதுவாகும். இந்த கார் வெறும் 4.4 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டிவிடும். இந்த சூப்பர் ஃபாஸ்ட் வேகத்திற்காக சொகுசு காரில் 6 சிலிண்டர் எம் பெட்ரோல் எஞ்ஜினையே பிஎம்டபிள்யூ நிறுவனம் பயன்படுத்தியிருக்கின்றது.

இதுமட்டுமின்றி இன்னும் பல்வேறு அம்சங்கள் அடங்கிய வாகனமாகவும் எம்340ஐ எக்ஸ்டிரைவ் 50 ஜஹ்ரே எம் எடிசனை புதிய பிஎம்டபிள்யூ நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. பிஎம்டபிள்யூ இந்தியா 'பிஎம்டபிள்யூ எம்' -ன் 50 ஆம் ஆண்டு விழாவை கொண்டாடி வருகின்றது. அதாவது, எம் பிரிவு வாகனங்களை நிறுவனம் அறிமுகப்படுத்தியது 50 ஆண்டுகள் ஆகின்றன. இதனையே நிறுவனம் விழாவாகக் கொண்டாட்டி வருகின்றது.

இதன் ஒரு பகுதியாகவே 'எம்' பிரிவில் சிறப்பு பதிப்புகளை நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பிஎம்டபிள்யூ அறிவித்தது. ஒட்டுமொத்தமாக பத்து எம் ரக சிறப்பு பதிப்பு சொகுசு கார்களை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்தது.

இந்த நிலையிலேயே முதல் சிறப்பு பதிப்பாக எம்340ஐ எக்ஸ்டிரைவ் 50 ஜஹ்ரே எம் எடிசன் நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 68,90,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே. பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்த காரை அட்டகாசமான வெளிப்புற தோற்றம் கொண்ட வாகனமாக உருவாக்கியிருக்கின்றது.

அதாவது, வழக்கமான எம்340ஐ எக்ஸ்டிரைவ் மாடலைக் காட்டிலும் பல மடங்கு கவர்ச்சியானதாக காட்சியளிக்கும் வகையில் புதிய வெளிப்புற தோற்றம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தோற்றம் காரின் ஸ்போர்ட்டி லுக்கை பன்மடங்கு பெருக்கும் வகையில் அமைந்திருக்கின்றது. முகப்பு பகுதியில் வழங்கப்பட்டிருக்கும் புதிய ஸ்டைலிலான க்ரில் அமைப்பே காருக்கு அதிக ஸ்போர்ட்டியான தோற்றத்தை வழங்கும் வகையில் உள்ளது.

இந்த கிட்னி ரக க்ரில்லை கூடுதலாக மெருகேற்றும் வகையில் உயர்-கிளாஸ் கருப்பு நிற பூச்சு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, ஜெட்-பிளாக் நிறம் காரின் விண்டோ, கண்ணாடி, அலாய் வீல்கள் உள்ளிட்ட பகுதிகளில் வழங்கப்பட்டுள்ளது. இந்த அலாய் வீல் 19 அங்குலம் கொண்டதாகும்.

சொகுசு காரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஹெட்லைட், அடாப்டீவ் எல்இடி ரக மின் விளக்காகும். இத்துடன், மிக சிறந்த பார்வை திறனை வழங்குவதற்காக பிஎம்டபிள்யூ லேசர் லைட்டும் 50 ஜஹ்ரே எடிசனில் வழங்கப்பட்டுள்ளது. இப்போது பார்த்த அனைத்தும் காரின் வெளிப்புறத்தில் செய்யப்பட்டிருக்கும் சிறப்பு வேலைபாடுகள் ஆகும்.

இதேபோல் காரின் உட்பக்கத்திலும் பன்முக சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. அந்தவகையில், ஸ்போர்ட்ஸ் ரக இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. இது அதிக மிருதுவானது. நீண்ட பயணத்திற்கு ஏதுவானதும்கூட. இந்த இருக்கைகள் மிக சிறந்த லெதர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது.

இதைத்தொடர்ந்து, லெதர் உறையால் போர்த்தப்பட்ட ஸ்டியரிங் வீல் பேடில் ஷிப்டர்களுடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், காரின் உட்பகுதியை மேலும் பிரீமியம் தரத்திலானதாக மாற்றும் விதமாக ஆம்பியன்ட் மின் விளக்கு, ஆட்டோமேட்டிக் 3 ஜோன் ஏசி சிஸ்டம், வெல்கம் லைட் கார்பெட் உள்ளிட்ட அம்சங்களும் எம்340ஐ எக்ஸ்டிரைவ் 50 ஜஹ்ரே எம் எடிசன் சொகுசு காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

முன்னதாக நாங்கள் இக்கார் அதி திறன் வாய்ந்தது என கூறியிருந்தோம். அந்தவகையில், காரின் சூப்பர் ஃபாஸ்ட் வேகத்திற்காக 2,998 சிசி ஸ்ட்ரைட் 6 பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 387 எச்பி பவர் மற்றும் 500 என்எம் டார்க்கை வெளியேற்றும்.

இந்த மோட்டாரே காரை வெறும் 4.4 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தில் இயங்க செய்ய வைக்கின்றது. ஒட்டுமொத்தமாக இரு விதமான நிற தேர்வுகளில் இப்புதிய காரை இந்தியாவில் வாங்கிக் கொள்ள முடியும். டிராவிட் கிரே ( Dravit Grey) மற்றும் டன்ஸனைட் ப்ளூ (Tanzanite Blue) ஆகிய நிற தேர்வுகளில் புதிய எம்340ஐ எக்ஸ்டிரைவ் 50 ஜஹ்ரே எம் எடிசன் விற்பனைக்குக் கிடைக்க உள்ளது.
குறிப்பு: முதல் 4 படங்களை தவிர மற்ற அனைத்து படங்களும் உதாரணத்திற்காக வழங்கப்பட்ட வழக்கமான எம்340ஐ எக்ஸ்டிரைவ்-இன் படங்கள் ஆகும்.
-
விமானிகளாக தாய்-மகள்... ஒன்றாக விமானத்தை இயக்கி சாதனை!! அமெரிக்காவில் நடந்த ருசிகர சம்பவம்!
-
இந்த செக்மெண்ட்ல இப்போ டாடாதான் கிங்... 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கி இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த கார் முதலிடம்!
-
விபத்து நடந்தா காசு மட்டும் கொடுத்து ஏமாறாதீங்க... என்ன செய்யனும்னு இங்க பாருங்க...