கடந்த ஜூனில் கார்கள் விற்பனை ‘செம்ம தூள்’!! மீண்டும் 2வது இடத்தில் ஹூண்டாய்!

கடந்த 2022 ஜூன் மாதத்தில் அதிகளவில் பயணிகள் கார்களை விற்பனை செய்த டாப்-10 கார் பிராண்ட்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கடந்த ஜூனில் கார்கள் விற்பனை ‘செம்ம தூள்’!! மீண்டும் 2வது இடத்தில் ஹூண்டாய்!

கடந்த 2021ஆம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், கடந்த ஜூன் மாதத்தில் பெரும்பான்மையான கார் பிராண்ட்களின் விற்பனை குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. ஆனால் முதலிடத்தில் உள்ள மாருதி சுஸுகியின் விற்பனை மட்டும் 1.28% குறைந்துள்ளது. பெரிய அளவில் இல்லையென்றாலும், மற்ற நிறுவனங்கள், கார்கள் விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்துள்ள போது இது கவனிக்கத்தக்கதாக உள்ளது.

கடந்த ஜூனில் கார்கள் விற்பனை ‘செம்ம தூள்’!! மீண்டும் 2வது இடத்தில் ஹூண்டாய்!

கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட மொத்த மாருதி சுஸுகி கார்களின் எண்ணிக்கை 1,22,685 ஆகும். ஆனால் 2021 ஜூனில் இதனை காட்டிலும் 1,595 யூனிட்கள் அதிகமாக 1,24,280 மாருதி சுஸுகி கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த மாதத்தில் விற்பனை சற்று குறைந்திருப்பினும், கடந்த ஜூனில் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்ட மொத்த பயணிகள் கார்களில் மாருதி சுஸுகியின் பங்கு மட்டுமே 38.24% ஆகும்.

கடந்த ஜூனில் கார்கள் விற்பனை ‘செம்ம தூள்’!! மீண்டும் 2வது இடத்தில் ஹூண்டாய்!

மாருதி சுஸுகிக்கு அடுத்து, ஒரு மாத கால இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஹூண்டாய் மோட்டார்ஸ் 2வது இடத்திற்கு வந்துள்ளது. 2021 ஜூனில் 40,496 ஹூண்டாய் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த மாதத்தில் 49,001 ஹூண்டாய் கார்கள் விற்கப்பட்டுள்ளன. இந்த வகையில் ஹூண்டாய் கார்களின் விற்பனை வருடம்-வருடம் ஒப்பிடுகையில் 21% அதிகரித்துள்ளது.

கடந்த ஜூனில் கார்கள் விற்பனை ‘செம்ம தூள்’!! மீண்டும் 2வது இடத்தில் ஹூண்டாய்!

கடந்த 2022 மே மாதத்தில் ஹூண்டாய் நிறுவனத்தை காட்டிலும் சில ஆயிரம் கார்களை அதிகமாக விற்று 2வது இடம் பிடித்திருந்த டாடா மோட்டார்ஸ் இம்முறை 3வது இடத்திற்கு சரிந்துள்ளது. ஆனால் உண்மையில், 2022 மே மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த ஜூன் மாதத்தில் சில ஆயிரம் யூனிட்கள் அதிகமாகவே கார்களை டாடா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. உள்நாட்டு சந்தையில் டாடா மோட்டார்ஸ் கடந்த மாதத்தில் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை 45,197 ஆகும்.

கடந்த ஜூனில் கார்கள் விற்பனை ‘செம்ம தூள்’!! மீண்டும் 2வது இடத்தில் ஹூண்டாய்!

ஆனால் 2021 ஜூன் மாதத்தில் இதனை காட்டிலும் கிட்டத்தட்ட 87.46% குறைவாக 24,110 டாடா கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. டாடா நிறுவனத்தின் இத்தகைய முன்னேற்றத்திற்கு கடந்த ஒரு வருடத்தில் டாடா நெக்ஸான் மற்றும் பஞ்ச் எஸ்யூவி கார்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை முக்கிய காரணியாக சொல்ல வேண்டும்.

கடந்த ஜூனில் கார்கள் விற்பனை ‘செம்ம தூள்’!! மீண்டும் 2வது இடத்தில் ஹூண்டாய்!

டாடாவிற்கு அடுத்து 4வது இடத்தில் மற்றொரு முற்றிலுமான இந்திய ஆட்டோமொபைல் நிறுவனமான மஹிந்திரா 26,880 கார்கள் விற்பனையுடன் உள்ளது. அதுவே கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட மஹிந்திரா கார்களின் எண்ணிக்கை 16,913 மட்டுமே ஆகும். இந்த வகையில் மஹிந்திரா கார்களின் விற்பனை 58.93% அதிகரித்துள்ளது.

கடந்த ஜூனில் கார்கள் விற்பனை ‘செம்ம தூள்’!! மீண்டும் 2வது இடத்தில் ஹூண்டாய்!

மஹிந்திராவை தொடர்ந்து, ஹூண்டாயை போல் தென்கொரிய கார் பிராண்டான கியா 5வது இடம் வகிக்கிறது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட மொத்த கியா கார்களின் எண்ணிக்கை 24,024 ஆகும். கியாவும் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 60% குறைவாக ஏறக்குறைய 15 ஆயிரம் கார்களையே இந்திய சந்தையில் விற்பனை செய்திருந்தது. 6வது இடத்தை டொயோட்டா பிடித்துள்ளது.

கடந்த ஜூனில் கார்கள் விற்பனை ‘செம்ம தூள்’!! மீண்டும் 2வது இடத்தில் ஹூண்டாய்!

கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட மொத்த டொயோட்டா கார்களின் எண்ணிக்கை 16,512 ஆகும். ஆனால் 2021 ஜூனில் 9 ஆயிரத்திற்கும் குறைவாக 8,798 கார்களையே டொயோட்டா நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் இந்தியாவில் டொயோட்டா கார்களின் விற்பனை 87.68% அதிகரித்துள்ளது. 7வது மற்றும் 8வது இடங்களில் ரெனால்ட் மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் முறையே 9,317 மற்றும் 7,834 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளன.

கடந்த ஜூனில் கார்கள் விற்பனை ‘செம்ம தூள்’!! மீண்டும் 2வது இடத்தில் ஹூண்டாய்!
Rank Brand Jun-22 Jun-21 Growth (%)
1 Maruti 1,22,685 1,24,280 -1.28
2 Hyundai 49,001 40,496 21.00
3 Tata 45,197 24,110 87.46
4 Mahindra 26,880 16,913 58.93
5 Kia 24,024 15,015 60.00
6 Toyota 16,512 8,798 87.68
7 Renault 9,317 6,100 52.74
8 Honda 7,834 4,767 64.34
9 Skoda 6,023 734 720.57
10 MG (Retail) 4,503 3,558 26.56
11 Nissan 3,515 3,503 0.34
12 Volkswagen 3,315 1,633 103.00
13 Jeep 1,963 789 148.80
14 Citroen 77 41 87.80
15 Ford 0 4,936 -100.00

9வது மற்றும் 10வது இடங்களில் ஸ்கோடா & எம்ஜி மோட்டார் நிறுவனங்கள் பிடித்துள்ளன. கடந்த மாதத்தில் மொத்தம் 14 பிராண்ட்களில் இருந்து கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் மாருதி சுஸுகியை தவிர்த்து மற்ற அனைத்துமே 2021 ஜுன் மாதத்தை காட்டிலும் கடந்த ஜூன் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்துள்ளன.

Most Read Articles
மேலும்... #விற்பனை #sales
English summary
Car sales june 2022 maruti again top
Story first published: Monday, July 4, 2022, 12:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X