இந்த ஜனவரி மாசத்துல இத்தன கார்கள் விற்பனைக்கு வர இருக்குதா? இப்புதுமுக கார்களுக்கு எதிர்பார்ப்பு ரொம்ப அதிகம்!

நடப்பு 2022 ஜனவரி மாதத்தில் விற்பனைக்கு அறிமுகமாக இருக்கும் கார்களையும், அவைகுறித்த தகவலையும் இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இந்த ஜனவரி மாசம் மட்டும் எத்தனை கார் விற்பனைக்கு வர இருக்கு தெரியுமா? இந்த புதுமுக கார்களுக்கு எதிர்பார்ப்பு அதிகம்!

இந்தியாவில் கடந்த ஆண்டைப் போலவே புதிதாகத் தொடங்கி இருக்கும் 2022ம் ஆண்டிலும் பல புதுமுக வாகனங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. இதற்காக வாகன உற்பத்தி நிறுவனங்கள் சில ஏற்கனவே தயாராகிவிட்டன. நிகழ்வாண்டை கலக்கும் வகையில் பல்வேறு புதிய தயாரிப்புகளை அவை நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றன.

இந்த ஜனவரி மாசம் மட்டும் எத்தனை கார் விற்பனைக்கு வர இருக்கு தெரியுமா? இந்த புதுமுக கார்களுக்கு எதிர்பார்ப்பு அதிகம்!

அந்தவகையில், நடப்பு ஜனவரி மாதத்தில் விற்பனைக்கு வர இருப்பதாக கூறப்படும் குறிப்பிட்ட சில கார் மாடல்கள் பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். நாம் பார்க்க இருக்கும் அனைத்து புதிய கார் மாடல்களும் இந்த மாதமே விற்பனைக்கு வந்துவிடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. வாருங்கள் அவை குறித்த தகவலைக் கீழே காணலாம், வாங்க.

இந்த ஜனவரி மாசம் மட்டும் எத்தனை கார் விற்பனைக்கு வர இருக்கு தெரியுமா? இந்த புதுமுக கார்களுக்கு எதிர்பார்ப்பு அதிகம்!

ஸ்கோடா கோடியாக் (SKODA KODIAQ)

ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனமே இந்த ஆண்டில் நாட்டில் முதலாவதாக புதிய காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. வரும் 10ம் தேதியை நிறுவனம் அதன் கோடியாக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய தேர்வு செய்திருக்கின்றது. இது ஓர் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனாகும். புதிய பிஎஸ்6 மாசு உமிழ்வு விதி காரணமாக இந்த கார் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்டது.

இந்த ஜனவரி மாசம் மட்டும் எத்தனை கார் விற்பனைக்கு வர இருக்கு தெரியுமா? இந்த புதுமுக கார்களுக்கு எதிர்பார்ப்பு அதிகம்!

ஆகையால், இக்கார் விற்பனைக்குக் கிடைக்காத நிலை உருவாகியது. இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் புதுப்பித்தல்களுடன் நாட்டை வந்தடைய இருக்கின்றது, ஸ்கோடா கோடியாக். இந்த கார் போன வருடமே உலகளவில் வெளியீட்டைப் பெற்றுவிட்டது. ஆனால், இந்தியாவில் இந்த மாதமே விற்பனைக்கு வர இருக்கின்றது.

இந்த ஜனவரி மாசம் மட்டும் எத்தனை கார் விற்பனைக்கு வர இருக்கு தெரியுமா? இந்த புதுமுக கார்களுக்கு எதிர்பார்ப்பு அதிகம்!

இந்த காரில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 190 பிஎச்பி மற்றும் 320 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இதே எஞ்ஜின்தான் ஸ்கோடாவின் மற்ற கார் மாடல்களான சூப்பர்ப் மற்றும் ஆக்டோவியா ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகின்றது. இந்த எஞ்ஜினில் சிறப்பு வசதியாக 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் அனைத்து வீல்கள் இயக்கம் வசதியுடன் வழங்கப்பட இருக்கின்றது.

இந்த ஜனவரி மாசம் மட்டும் எத்தனை கார் விற்பனைக்கு வர இருக்கு தெரியுமா? இந்த புதுமுக கார்களுக்கு எதிர்பார்ப்பு அதிகம்!

டொயோட்டா ஹைலக்ஸ் (Toyota Hilux)

இந்தியர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை தூண்டி வரும் கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். இது ஓர் பிக்-அப் ட்ரக் ரக வாகனமாகும். இந்த வாகனத்தின் துள்ளியமான அறிமுக விபரம் வெளியாகவில்லை. இருப்பினும் ஜனவரி மாதத்தை நெருக்கமாகக் கொண்டு இவ்வாகனம் விற்பனைக்கு வந்துவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையிலேயே டொயோட்டா நிறுவனம் இந்த வாகனத்தின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனை உலகளவில் வெளியீடு செய்தது.

இந்த ஜனவரி மாசம் மட்டும் எத்தனை கார் விற்பனைக்கு வர இருக்கு தெரியுமா? இந்த புதுமுக கார்களுக்கு எதிர்பார்ப்பு அதிகம்!

ஐஎம்வி-2 பிளாட்பாரத்தின்கீழ் இவ்வாகனம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. ஃபார்ச்சூனர் மற்றும் இன்னோவா க்ரிஸ்டா ஆகிய கார் மாடல்களின் சிறப்பு வசதிகளுடன் இக்கார் உருவாக்கப்பட்டிருக்கின்றது. 2.8 லிட்டர் டர்போ டீசல் எஞ்ஜின், 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு தானியங்கி டிரான்ஸ்மிஷன் யூனிட்டில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கும். இந்த கார் இந்தியாவில் இசுஸூ டி-மேக்ஸ் காருக்கு போட்டியாக விற்பனைக்கு வர இருக்கின்றது.

இந்த ஜனவரி மாசம் மட்டும் எத்தனை கார் விற்பனைக்கு வர இருக்கு தெரியுமா? இந்த புதுமுக கார்களுக்கு எதிர்பார்ப்பு அதிகம்!

ஆடி க்யூ7 ஃபேஸ்லிஃப்ட் (Audi Q7 Facelift)

ஆடி நிறுவனம் அதன் க்யூ சீரிஸில் விற்பனைக்குக் கிடைக்கு தேர்வுகளின் வரிசையை விரிவாக்கம் செய்ய இருக்கின்றது. இதன் அடிப்படையில் மிக விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் காராக க்யூ7 புதுப்பிக்கப்பட்ட வெர்ஷன் இருக்கின்றது. இந்த காரின் விற்பனையும் பிஎஸ்6 மாசு உமிழ்வு விதி காரணமாக இந்தியாவில் நிறுத்தப்பட்டது.

இந்த ஜனவரி மாசம் மட்டும் எத்தனை கார் விற்பனைக்கு வர இருக்கு தெரியுமா? இந்த புதுமுக கார்களுக்கு எதிர்பார்ப்பு அதிகம்!

தற்போது பல்வேறு புதிய அம்சங்களுடன் இந்த கார் மீண்டும் இந்திய சந்தையைக் களம் காண வர இருக்கின்றது. இக்கார் 3.0 லிட்டர் வி6 டர்போசார்ஜட் பெட்ரோல் எஞ்ஜினிலேயே விற்பனைக்கு வர இருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 335 பிஎச்பி மற்றும் 500 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

இந்த ஜனவரி மாசம் மட்டும் எத்தனை கார் விற்பனைக்கு வர இருக்கு தெரியுமா? இந்த புதுமுக கார்களுக்கு எதிர்பார்ப்பு அதிகம்!

கியா கேரன்ஸ் (Kia Carens)

கியா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்க இருக்கும் இரண்டாவது எம்பிவி ரக வாகனமே இந்த கேரன்ஸ். ஆனால், இதன் தோற்றம் எஸ்யூவி கார்களுக்கு இணையானதாக இருக்கின்றது. ஆகையால், இதன் வருகை இந்தியாவில் பிரமாண்ட தோற்றத்தில் விற்பனைக்குக் கிடைக்கும் எஸ்யூவி கார்களுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்த இருக்கின்றது.

இந்த ஜனவரி மாசம் மட்டும் எத்தனை கார் விற்பனைக்கு வர இருக்கு தெரியுமா? இந்த புதுமுக கார்களுக்கு எதிர்பார்ப்பு அதிகம்!

இக்காரின் அறிமுகம் வரும் ஜனவரி 14ம் தேதி அமைய இருக்கின்றது. மூன்று வரிசை இருக்கை அமைப்புடன் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்திற்கான புக்கிங் பணிகள் ஏற்கனவே இந்தியாவில் தொடங்கிவிட்டன. மிக விரைவில் இதன் விலை மற்றும் முக்கிய தகவல்கள் அனைத்தும் வெளியிடப்பட இருக்கின்றன.

Most Read Articles

English summary
Cars that are expected to launch in january in india
Story first published: Monday, January 3, 2022, 19:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X