ஏழைக்கு ஏற்ற தரமான கார்... சிறிசா இருந்தாலும் இனி இது தான் சார் அவங்க சொர்க்கம்...

இந்தோனேசியாவில் சீனாவின் வூலிங் நிறுவனம் சிறிய ரக எலெக்ட்ரிக் கார் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் அறிமுகமான நானோ காரைவிட இந்த காருக்கு தான் பயங்கரமான மவுசு ஏற்பட்டுள்ளது. இந்த கார் குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்.

ஏழைக்கு ஏற்ற தரமான கார் . . . சிறிசா இருந்தாலும் இனி இது தான் சார் அவங்க சொர்க்கம் . . .

இந்திய மக்களுக்குச் சிறிய கார் என்றால் உடனே மக்களின் நினைவிற்கு வருவது டாடா நிறுவனத்தின் நானோ கார் தான். டாடா நிறுவனத்தின் தலைவர் ரத்தன் டாடா இந்திய மக்கள் சாலைகளில் டூவீலர்களில் குடும்பத்துடன் 3 பேர் 4 பேராகப் பயணிப்பதைப் பார்த்து சாதாரண நடுத்தர குடும்பத்தினர் செல்லும் வகையில் சிறிய ரக கார் ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டு சுமார் 1 லட்ச ரூபாய்க்குக் காரை விற்பனைக்குக் கொண்டுவர முடிவு செய்தார். அப்படியாக டாடா நானோ கார் பிறந்தது. ஆனால் பல்வேறு சிக்கல் காரணமாக டாடா நிறுவனத்தால் ரூ1 லட்சம் என்ற விலைக்குள் இந்த காரை விற்பனைக்குக் கொண்டுவர முடியவில்லை.

ஏழைக்கு ஏற்ற தரமான கார் . . . சிறிசா இருந்தாலும் இனி இது தான் சார் அவங்க சொர்க்கம் . . .

இது எல்லோருக்கும் தெரிந்த கதை ஆனால் இப்படியாகச் சிறிய ரக காரை நினைவுபடுத்தும் விதமாக தற்போது சீனாவைச் சேர்ந்த வூலிங் என்ற நிறுவனம் சிறிய ரக எலெக்ட்ரிக் காரை இந்தோனேசியச் சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்காக ஜகர்த்தா ஸ்போர்ட்ஸில் இந்த காரின் அறிமுகத்தை அந்நிறுவனம் செய்துள்ளது.

ஏழைக்கு ஏற்ற தரமான கார் . . . சிறிசா இருந்தாலும் இனி இது தான் சார் அவங்க சொர்க்கம் . . .

இந்த காரை பொருத்தவரை முற்றிலும் எலெக்ட்ரிக் காராக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. காரின் டிசைனை பொருத்தவரை முன்பக்கம் சிறிய பானட் உடன் பெரிய ஏரோ டைனமிக் விண்ட் ஷீல்டு, சிங்கிள் பாக்ஸ் சில்லவுட், அமைப்புகளுடன் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் முக்கியமான அம்சம் காரின் முன்பகுதியில் டிசைன் செய்யப்பட்டுள்ள எல்இடி பட்டை தான்.

ஏழைக்கு ஏற்ற தரமான கார் . . . சிறிசா இருந்தாலும் இனி இது தான் சார் அவங்க சொர்க்கம் . . .

இந்த எல்இடி பட்டைகள் காரின் முன்பகுதியில் பான்ட்டின் மேல் பகுதியில் நீளமாக உள்ளது. இது காரின் சைடு புரேபைலிக்கும் சென்று காரின் சைடு கண்ணாடி வரை டிசைன் செய்யப்பட்டுள்ளது. முகப்பு பகுதியில் கீழ் பகுதியில் பம்பர் அருகே வழக்கமான ஹெட்லைட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த காரின் முகப்பு டிசைன் ஒரு விஆர் கண்ணாடியின் டிசைன் போல வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஏழைக்கு ஏற்ற தரமான கார் . . . சிறிசா இருந்தாலும் இனி இது தான் சார் அவங்க சொர்க்கம் . . .

இந்த காரின் கொடுக்கப்பட்டுள்ள சிறிய வீல்கள் இந்த காருக்கு ஒரு சூப்பர் மார்கெட்டில் உள்ள டிராலி போன்ற தோற்றத்தைக் கொடுக்கிறது. இந்த கார் குறித்த அதிகாரப்பூர்வ செயல்திறன் மற்றும் அம்சங்கள் இதுவரை வெளியாகவில்லை. வெளிப்பபுறத்தோற்றம் மற்றும் டிசைன் குறித்த தகவல்கள் மட்டுமே வெளியாகியுள்ளது. இந்த கார் குறித்த சில தகவல்கள் மட்டும் லீக் ஆகியுள்ளது. அதன்படி இந்த கார் இரண்டு சீட்டர் காராக விற்பனைக்கு வருகிறது.

ஏழைக்கு ஏற்ற தரமான கார் . . . சிறிசா இருந்தாலும் இனி இது தான் சார் அவங்க சொர்க்கம் . . .

இந்த கார் மொத்தத்தில் இரண்டு வேரியன்ட்டில் விற்பனையாகி வருகிறது. ஒன்று 2599 மிமீ மற்றொன்று 2974 மிமீ இந்த இரண்டு வேரியன்ட்களில் 2599 மிமீ நீளம் உள்ள வேரியன்ட் இரண்டு சீட்டராகவும், 2974 மிமீ நீளம் உள்ள வேரியன்ட் 4 சீட்டராகவும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு கார்களிலும் ஒரே விதமான மோட்டரே பொருத்தப்படுகிறது. லீக் ஆன தகவலின்படி இந்த காரில் 40 எச்பி மோட்டார் பொருத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஏழைக்கு ஏற்ற தரமான கார் . . . சிறிசா இருந்தாலும் இனி இது தான் சார் அவங்க சொர்க்கம் . . .

இந்த கார் வரும் நவம்பர் மாதம் 15-16 ஆகிய தேதிகளில் பாலியின் நடக்கும் ஜி20 மாநாட்டிற்கு அதிகாரப்பூர்வமான காராக இந்த கார் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த மாநாட்டின் போது இந்த கார் பயன்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த ரக காருக்கான ரசிகர்கள் அதிகமாக இருந்தாலும் டிமாண்ட் பெரிய அளவில் இருக்குமா என்பது தெரியவில்லை.

ஏழைக்கு ஏற்ற தரமான கார் . . . சிறிசா இருந்தாலும் இனி இது தான் சார் அவங்க சொர்க்கம் . . .

மஹிந்திரா நிறுவனம் கிட்டத்தட்ட இதே போல e20, reva, ஆகிய கார்களை விற்பனை செய்த போது எதிர்பார்த்த அளவிற்கு மக்களிடம் வரவேற்பில்லை அதனால் இந்த ரக கார்களை இந்தியாவிற்குக் கொண்டு வர கார் தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

Most Read Articles
English summary
Chinese automaker rolled out tiny EV in Indonesia know full details
Story first published: Friday, June 3, 2022, 16:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X