மிகவும் குறைவான விலையில் வரும் எலெக்ட்ரிக் கார்! டாடாவுக்கு செக் வைக்கும் பிரான்ஸ் கம்பெனி! மாஸ் காட்ட போறாங்க

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள எலெக்ட்ரிக் கார்களில் ஒன்று சிட்ரோன் இ-சி3 (Citroen e-C3). பிரான்ஸை சேர்ந்த சிட்ரோன் நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ள முதல் எலெக்ட்ரிக் கார் இதுவாகும். இந்தியாவில் ஏற்கனவே பிரபலமாக உள்ள சிட்ரோன் சி3 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன்தான் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள 2023 ஆட்டோ எக்ஸ்போவில், சிட்ரோன் இ-சி3 எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மிகவும் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதுதான், சிட்ரோன் இ-சி3 எலெக்ட்ரிக் கார் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆவலை தூண்டியுள்ளதற்கு காரணம் ஆகும். விலை குறைவானது என்றாலும் கூட, சிட்ரோன் இ-சி3 எலெக்ட்ரிக் காரில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருக்கும்.

மிகவும் குறைவான விலையில் வரும் எலெக்ட்ரிக் கார்! டாடாவுக்கு செக் வைக்கும் பிரான்ஸ் கம்பெனி! மாஸ் காட்ட போறாங்க

சிட்ரோன் இ-சி3 எலெக்ட்ரிக் காரில், 30.2 kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இ-சி3 எலெக்ட்ரிக் காருக்காக ஸ்வோல்ட் எனர்ஜி (Svolt Energy) நிறுவனத்திடம் இருந்து, எல்எஃப்பி (LFP - Lithium Iron Phosphate) செல்கள் பெறப்படும் என்பதை சிட்ரோன் நிறுவனம் உறுதி செய்துள்ளது. ஸ்வோல்ட் எனர்ஜி என்பது, சீனாவை சேர்ந்த கிரேட் வால் மோட்டார்ஸ் (Great Wall Motors) நிறுவனத்தின் துணை நிறுவனம் ஆகும்.

என்எம்சி (NMC - Nickel Manganese Cobalt) செல்களை விட, எல்எஃப்பி பேட்டரிகள் அதிக நிலைத்தன்மை கொண்டவை மற்றும் மிகவும் விலை குறைவானவை. அத்துடன் இவற்றின் ஆயுட்காலம் அதிகம் என்பதுடன், பல்வேறு வெப்ப நிலைகளிலும் திறன் மிக்கதாக பணியாற்றும். எனவேதான் சிட்ரோன் நிறுவனம் இ-சி3 எலெக்ட்ரிக் காருக்கு, எல்எஃப்பி பேட்டரிகளை தேர்வு செய்துள்ளது. அதே நேரத்தில் சிட்ரோன் இ-சி3 எலெக்ட்ரிக் காரில், 2 சார்ஜர் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி 3.3 kW ஆன்போர்டு AC சார்ஜர் மற்றும் CCS2 ஃபாஸ்ட் சார்ஜர் ஆகிய ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சிட்ரோன் இ-சி3 எலெக்ட்ரிக் காரில், சிங்கிள் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த எலெக்ட்ரிக் மோட்டார் 86 பிஹெச்பி பவரையும், 143 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியதாக இருக்கலாம். அதே நேரத்தில் இ-சி3 எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் பயணிக்க கூடிய தூரமாக சிட்ரோன் நிறுவனம் குறிப்பிடுவது 250 - 300 கிலோ மீட்டர்கள் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபக்கம் சிட்ரோன் இ-சி3 எலெக்ட்ரிக் காரின் மிக முக்கியமான போட்டியாளரான டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரில் (Tata Tiago EV), 19.2 kWh மற்றும் 24 kWh என இரண்டு பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், முதலாவது பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 250 கிலோ மீட்டர்களும், இரண்டாவது பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 315 கிலோ மீட்டர்களும் பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே டிசைனை பொறுத்தவரையில் தற்போது விற்பனையில் உள்ள சிட்ரோன் சி3 காரை போலவேதான், சிட்ரோன் இ-சி3 எலெக்ட்ரிக் காரும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் எலெக்ட்ரிக் கார் என்பதால் ஒரு சில மாற்றங்கள் செய்யப்படலாம். அதே நேரத்தில் வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டி வசதியுடன் 10 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் டில்ட் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய ஸ்டியரிங் வீல் ஆகிய வசதிகள், சிட்ரோன் இ-சி3 எலெக்ட்ரிக் காரில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய சிட்ரோன் இ-சி3 எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 9 அல்லது 10 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் காரின் டாப் வேரியண்ட்டின் விலை 12 லட்ச ரூபாய் என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இவை எதிர்பார்க்கப்படும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். எனவே டாடா டியாகோ எலெக்ட்ரிக் காருக்கு, சிட்ரோன் இ-சி3 எலெக்ட்ரிக் கார் விற்பனையில் மிகவும் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Citroen c3 electric car expected price range features
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X