எலெக்ட்ரிக் அவதாரம் எடுக்கும் விலை குறைவான கார்! ஜனவரியில் அறிமுகம் ஆக போகுது! டாடாவுக்கு இப்படி ஒரு சோதனையா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று சிட்ரோன் சி3 (Citroen C3). மிகவும் குறைவான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருப்பதால்தான், சிட்ரோன் சி3 கார் இந்திய வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் சிட்ரோன் சி3 காரின் ஆரம்ப விலை வெறும் 5.88 லட்ச ரூபாய் மட்டுமே.

அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 8.15 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்த சூழலில் சிட்ரோன் சி3 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சிட்ரோன் இசி3 (Citroen eC3) என்ற பெயரில் இந்த எலெக்ட்ரிக் கார் (Electric Car) விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது. தற்போது விற்பனையில் உள்ள சி3 காரில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே பிளாட்பார்ம் அடிப்படையில்தான், சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காரும் கட்டமைக்கப்படவுள்ளது.

எலெக்ட்ரிக் அவதாரம் எடுக்கும் விலை குறைவான கார்! ஜனவரியில் அறிமுகம் ஆக போகுது! டாடாவுக்கு இப்படி ஒரு சோதனையா!

சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காரில், 30.2 kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் 84 பிஹெச்பி பவரையும், 143 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய எலெக்ட்ரிக் மோட்டாரும் இந்த காரில் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள 2023 ஆட்டோ எக்ஸ்போ (Auto Expo) கண்காட்சியில், சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார் காட்சிக்கு வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிட்ரோன் சி3 காரை போலவே, சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காரும் மிகவும் குறைவான விலையில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகதான் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த எலெக்ட்ரிக் கார் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்திய சந்தையில் டாடா டியாகோ எலெக்ட்ரிக் காருடன் (Tata Tiago EV), சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார் நேருக்கு நேராக போட்டியிடும்.

அத்துடன் வரும் 2023ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக கூறப்படும் டாடா பன்ச் எலெக்ட்ரிக் காருக்கும் (Tata Punch EV), சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார் விற்பனையில் கடுமையான சவாலை அளிக்கும். ஒட்டுமொத்தத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் இசி3 எலெக்ட்ரிக் காரை சிட்ரோன் நிறுவனம் நிறுவனம் உருவாக்கி வருகிறது. இந்த சூழலில், சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காரின் இன்டீரியர் தொடர்பாக தற்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காரின் கேபின், கிட்டத்தட்ட சிட்ரோன் சி3 காரின் கேபினை போலவேதான் இருக்கும் என கூறப்படுகிறது. சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காருடைய டேஷ்போர்டின் மைய பகுதியில் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டிருக்கும். அத்துடன் தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டியரிங் வீல் கொடுக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இது 3 ஸ்போக் ஸ்டியரிங் வீல் ஆக இருக்கலாம். ஆனால் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் வசதி வழங்கப்படுமா? என்பது சந்தேகமாக இருக்கிறது.

எனினும் வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிட்ரோன் நிறுவனம் சி3 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் மட்டுமல்லாது, 7 சீட்டர் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளிலும் தீவிரம் காட்டி வருகிறது. இந்த 2 புதிய வெர்ஷன்களும் இந்திய சந்தையில் ஒன்றன் பின் ஒன்றாக விற்பனைக்கு கொண்டு வரப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

சிட்ரோன் சி3 காரின் 7 சீட்டர் வெர்ஷன், அதிக உறுப்பினர்களை கொண்ட, அதாவது பெரிய குடும்பங்களுக்கு ஏற்றதாக இருக்கும். 7 சீட்டர் வெர்ஷனுக்கு சிட்ரோன் நிறுவனம் மிகவும் சவாலான விலையை நிர்ணயம் செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே புதிய எலெக்ட்ரிக் கார் அல்லது 7 சீட்டர் கார் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை வாங்குவது குறித்து நீங்கள் பரிசீலனை செய்து கொண்டிருந்தால், இந்த கார்களுக்கு காத்திருக்கலாம்.

Most Read Articles
English summary
Citroen c3 electric car new details leaked
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X