2022 சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் படங்கள் வெளியீடு!! இந்தியாவில் அறிமுகம் எப்போது தெரியுமா?

புதிய தோற்றம் மற்றும் கூடுதல் வசதிகளுடன் அப்டேட் செய்யப்பட்ட 2022 சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் நமக்கு தெரியவந்துள்ள விபரங்களை இனி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

2022 சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் படங்கள் வெளியீடு!! இந்தியாவில் அறிமுகம் எப்போது தெரியுமா?

கடந்த 2021 டிசம்பர் மாதத்தில் சிட்ரோன் சி5 ஃபேஸ்லிஃப்ட் காரின் படங்கள் இணையத்தில் கசிந்திருந்தன. அவற்றின் மூலமாக புதிய சி5 ஏர்க்ராஸ் மாடலில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம் என்பது குறித்து ஒரு புரிதல் நமக்கு கிடைத்திருந்தது.

2022 சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் படங்கள் வெளியீடு!! இந்தியாவில் அறிமுகம் எப்போது தெரியுமா?

இந்த நிலையில் தற்போது 2022 சிட்ரோன் சி5 ஏர்க்ராஸின் படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. பிரெஞ்சு நாட்டை சேர்ந்த சிட்ரோன் அதன் சமூக வலைத்தள பக்கங்களில் சி5 ஏர்க்ராஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் படங்களை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த சிட்ரோனில் பதிவில், "தற்போது உங்களுக்கு நிறைய (சி5 ஃபேஸ்லிஃப்ட்டை பற்றிய விபரங்கள்) தெரிந்திருக்கலாம்.

2022 சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் படங்கள் வெளியீடு!! இந்தியாவில் அறிமுகம் எப்போது தெரியுமா?

இருப்பினும் அதேநேரம் அவை போதாது, நீங்கள் நாளையும் வர வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் முதலாவதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள 2022 சி5 ஏர்க்ராஸின் வெளிப்பக்கத்தில் தற்கால ட்ரெண்ட்டிற்கு ஏற்ப ஏகப்பட்ட எல்இடி விளக்கு ஸ்ட்ரிப்கள் வழங்கப்பட்டுள்ளதை தற்போது வெளியிடப்பட்டுள்ள படத்தில் பார்க்க முடிகிறது.

2022 சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் படங்கள் வெளியீடு!! இந்தியாவில் அறிமுகம் எப்போது தெரியுமா?

நேர்த்தியான ஹெட்லேம்ப்கள் மற்றும் இரட்டை எல்இடி பகல்நேர ரன்னிங் விளக்குகள், இரு கிடைமட்ட எல்இடி ஸ்ட்ரிப்களுடன் நேர்த்தியான க்ரில் பகுதி உள்ளிட்டவற்றுடன் 2022 சிட்ரோன் சி5 ஏர்க்ராஸின் முன்பக்கம் முற்றிலுமாக அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இதில் க்ரில் பகுதியில் வழங்கப்பட்டுள்ள எல்இடி ஸ்ட்ரிப்களை சற்று உற்று பார்க்கும்போது அவற்றுள் சிறிய சிறிய எல்இடி விளக்குகள் உள்ளதை காண முடிகிறது.

2022 சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் படங்கள் வெளியீடு!! இந்தியாவில் அறிமுகம் எப்போது தெரியுமா?

இவற்றுடன் சி5 ஃபேஸ்லிஃப்ட்டின் முன்பக்கத்தில் தடிமனான கேரக்டர் லைன்களுடன் திருத்தியமைக்கப்பட்ட பொனெட், அகலமான மைய காற்று ஏற்பான் உடன் ரீஸ்டைலில் முன்பக்க பம்பர், சில்வர் நிற ஏர்டேம் மற்றும் செங்குத்தான வடிவில் ஃபாக் விளக்குகள் போன்றவை காரின் ஸ்போர்ட்டியான தோற்றத்தை மெருக்கேற்று வகையில் வழங்கப்பட்டுள்ளன.

2022 சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் படங்கள் வெளியீடு!! இந்தியாவில் அறிமுகம் எப்போது தெரியுமா?

இத்துடன் புதிய டிசைனிலான 18-இன்ச் சக்கரங்களை புதிய சி5 மாடல் பெற்றுள்ளது. பளபளப்பான கருப்பு நிறத்தில் பின்பக்கத்தை காட்டும் கண்ணாடிகள், சன்ரூஃப், க்ரோம்டு ஜன்னல் லைன், கருப்பு நிறத்தில் தடிமனான சக்கர வளைவு க்ளாடிங், மேற்கூரை கம்பிகள் மற்றும் செவ்வக வடிவிலான பக்கவாட்டு ஸ்கூப்ஸ் உள்ளிட்டவற்றை 2022 சி5-இன் மற்ற வெளிப்புற ஹைலைட்களாக சொல்லலாம்.

2022 சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் படங்கள் வெளியீடு!! இந்தியாவில் அறிமுகம் எப்போது தெரியுமா?

பின்பக்கத்தில் 2022 சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் ஆனது உட்புறமாக பிளவுப்பட்ட புதிய எல்இடி டெயில்லேம்ப்கள் மற்றும் அப்டேட் செய்யப்பட்ட பம்பரை கொண்டுள்ளது. இவற்றுடன் சி5 ஏர்க்ராஸின் உட்புறமும் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. உட்புற கேபின் சிட்ரோனின் சி5எக்ஸ் கான்செப்ட்டின் டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

2022 சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் படங்கள் வெளியீடு!! இந்தியாவில் அறிமுகம் எப்போது தெரியுமா?

இதன் டேஸ்போர்டில் புதிய 10-இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ரீடிசைனில் ஏசி துளைகள், அப்டேட்டான மைய கன்சோல் வழங்கப்பட்டுள்ளதை சிட்ரோன் வெளியிட்டுள்ள படங்களில் பார்க்க முடிகிறது. அத்துடன் புதிய ஹீட்டிங்/மஸாஜிங் இருக்கைகளை கூடுதல் பேடிங் உடன் சி5 ஏர்க்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் பெற்றுள்ளது.

2022 சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் படங்கள் வெளியீடு!! இந்தியாவில் அறிமுகம் எப்போது தெரியுமா?

ஐரோப்பாவில் பெட்ரோல், டீசல் மற்றும் ப்ளக்-இன் ஹைப்ரீட் தேர்வுகளில் 2022 சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி மாடல் விற்பனையை துவங்கவுள்ளது. இதில் ப்ளக்-இன் ஹைப்ரீட் வேரியண்ட்டில் 13.2 kWh பேட்டரி தொகுப்பு மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படுகிறது. இவற்றின் மூலமாக அதிகப்பட்சமாக 222எச்பி வரையிலான குதிரையாற்றல் கிடைக்கிறது. இந்த வேரியண்ட்டில் எலக்ட்ரிக் ஆற்றலில் மட்டும் கிட்டத்தட்ட 55 கிமீ தொலைவிற்கு காரை இயக்கி செல்ல முடியுமாம்.

2022 சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் படங்கள் வெளியீடு!! இந்தியாவில் அறிமுகம் எப்போது தெரியுமா?

இந்திய சந்தையில் பிரெஞ்சு கார் பிராண்டான சிட்ரோன் கடந்த 2021 ஏப்ரல் மாதத்தில் தான் அதன் சி5 ஏர்க்ராஸின் மூலம் நுழைந்தது. இந்த வகையில் நம் நாட்டில் விற்பனைக்கு வந்து இன்னும் 1 வருடமே நிறைவடையா விட்டாலும், இதன் புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அறிமுகத்தையும் இந்த 2022ஆம் ஆண்டிற்குள்ளாக எதிர்பார்க்கிறோம்.

2022 சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் படங்கள் வெளியீடு!! இந்தியாவில் அறிமுகம் எப்போது தெரியுமா?

இதுகுறித்த அறிவிப்பு எதையும் சிட்ரோன் இந்தியா நிறுவனம் தற்போதைக்கு வெளியிடவில்லை. இந்த அறிவிப்பினை வரும் மாதங்களில் எதிர்பார்க்கலாம். எப்படியிருந்தாலும், அப்டேட்டிற்கு ஏற்ப காரின் விலை சற்று உயர்த்தப்படும். ஏற்கனவே இந்த புதிய 2022ஆம் ஆண்டின் துவக்கத்தில் சி5 ஏர்க்ராஸின் விலையினை ரூ.1 லட்சம் வரையில் சிட்ரோன் உயர்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #சிட்ரோன் #citroen
English summary
2022 Citroen C5 Aircross Official Images.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X