இன்னும் குறைகள் இருந்தா இப்பவே சொல்லிடுங்க! கஸ்டமர்களின் திருப்திக்காக மலிவு விலை அலங்கரிக்கும் சிட்ரோன்!

சிட்ரோன் (Citroen), நிறுவனம் அதன் மலிவு விலை கார் மாடலான சி3 (C3)-இல் கூடுதல் சிறப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகளை வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இன்னும் குறைகள் இருந்தா இப்பவே சொல்லிடுங்க! கஸ்டமர்களின் திருப்திக்காக மலிவு விலை காரில் கூடுதல் அம்சங்களை சேர்க்கும் சிட்ரோன்!

பிரபல பிரீமியம் கார் உற்பத்தியாளரான சிட்ரோன் (Citroen), இந்திய சந்தையில் இப்போது வரை இரு கார் மாடல்களை மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. சி3 (C3) மற்றும் சி5 (C5) ஏர்கிராஸ் எஸ்யூவி ஆகிய இரு கார் மாடல்களையே அந்நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதில், சி5 ஏர்கிராஸ் எஸ்யூவி என்பது அதிக பிரீமியம் வசதிகள் நிறைந்த தயாரிப்பாகும்.

இன்னும் குறைகள் இருந்தா இப்பவே சொல்லிடுங்க! கஸ்டமர்களின் திருப்திக்காக மலிவு விலை காரில் கூடுதல் அம்சங்களை சேர்க்கும் சிட்ரோன்!

சி5 ஏர்கிராஸுடன் ஒப்பிடுகளையில் பலமடங்கு குறைவான அம்சங்களைக் கொண்ட சிட்ரோன் தயாரிப்பாக சி3 காட்சியளிக்கின்றது. விலை குறைவாக விற்பனைக்குக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக கணிசமான அம்சங்களுடன் மட்டுமே இந்த காரை நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.இந்த நிலையிலேயே இந்த தயாரிப்பை கூடுதல் சிறப்பு வசதிகளைக் கொண்டதாக மாற்றும் முயற்சியில் சிட்ரோன் களமிறங்கியிருக்கின்றது. அதாவது, அதிக தொழில்நுட்பம் மற்றும் கூடுதல் பிரீமியம் அம்சங்கள் கொண்ட காராக சி3-யை மாற்றும் பணியில் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.

இன்னும் குறைகள் இருந்தா இப்பவே சொல்லிடுங்க! கஸ்டமர்களின் திருப்திக்காக மலிவு விலை காரில் கூடுதல் அம்சங்களை சேர்க்கும் சிட்ரோன்!

இதன் விளைவாக சி3 காரின் விலை அதிகரிக்கும் அபயாம் ஏற்பட்டிருக்கின்றது. தற்போது, இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் மலிவு விலை கார் மாடல்களில் ஒன்றாக சி3 இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த புகழுக்கே நிறுவனத்தின் மேம்படுத்தும் முயற்சி குந்தகம் விளைவிக்குமோ என்ற கவலை எழும்பியிருக்கின்றது.

இன்னும் குறைகள் இருந்தா இப்பவே சொல்லிடுங்க! கஸ்டமர்களின் திருப்திக்காக மலிவு விலை காரில் கூடுதல் அம்சங்களை சேர்க்கும் சிட்ரோன்!

ஆனால், நிறுவனம் அதிக சிறப்பு வசதிகளை சி3-இன் உயர்நிலை வேரியண்டிலேயே சேர்க்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால், மலிவு விலை காரின் விலையில் பெரியளவில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பிருக்காது என நம்பலாம். தற்போது விற்பனையில் இருக்கும் சிட்ரோன் சி3-இன் டாப் வேரியண்டில் சில அம்சங்கள் இடம் பெறவில்லை என அதன் வாடிக்கையாளர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

இன்னும் குறைகள் இருந்தா இப்பவே சொல்லிடுங்க! கஸ்டமர்களின் திருப்திக்காக மலிவு விலை காரில் கூடுதல் அம்சங்களை சேர்க்கும் சிட்ரோன்!

இந்த கருத்துகளின் அடிப்படையிலேயே குறைகளை நீக்கும் விதமாக கூடுதல் அம்சங்களை சி3-யில் சேர்க்கும் பணியில் சிட்ரோன் ஈடுபட்டு வருகின்றது. அந்தவகையில், ரியர் வியூ கேமிரா, எலெக்ட்ரானிக் முறையில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் வசதிக் கொண்ட ஓஆர்விஎம், ரியர் விண்ட் ஸ்கிரீனுக்கான டிமிஸ்டர், காரின் பின் பகுதியில் வாஷர் மற்றும் வைப்பர் உள்ளிட்ட அம்சங்கள் புதிதாக சேர்க்கப்பட உள்ளன.

இன்னும் குறைகள் இருந்தா இப்பவே சொல்லிடுங்க! கஸ்டமர்களின் திருப்திக்காக மலிவு விலை காரில் கூடுதல் அம்சங்களை சேர்க்கும் சிட்ரோன்!

இந்த கூடுதல் சிறப்பம்சங்களைப் பெற்ற சி3 காரையே நிறுவனம் அடுத்த ஆண்டு விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. மேலே பார்த்த அம்சங்கள் மட்டுமின்றி புதிதாக அலாய் வீல்களும் 2023 சி3 இல் சேர்க்கப்பட இருப்பதாக கூறப்படுகின்றது. ஆகையால், சிட்ரோன் சி3 காரின் உயர்நிலை வேரியண்ட் மிகுந்த அட்டகாசமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்னும் குறைகள் இருந்தா இப்பவே சொல்லிடுங்க! கஸ்டமர்களின் திருப்திக்காக மலிவு விலை காரில் கூடுதல் அம்சங்களை சேர்க்கும் சிட்ரோன்!

பாதுகாப்பு அம்சங்களும் 2023 சிட்ரோன் சி3 இல் உயர்த்தப்பட இருக்கின்றது. அந்தவகையில், ஆறு ஏர் பேக்குகள், மும்முனை சீட் பெல்டுகள், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் அம்சங்கள் என பாதுகாப்பு அம்சங்களும் இந்த காரில் அதிகளவில் வழங்கப்பட இருக்கின்றன. இவற்றுடன் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் அம்சங்களான ஏபிஎஸ் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்களும் சிட்ரோன் சி3-இல் வழங்கப்பட இருக்கின்றன.

இன்னும் குறைகள் இருந்தா இப்பவே சொல்லிடுங்க! கஸ்டமர்களின் திருப்திக்காக மலிவு விலை காரில் கூடுதல் அம்சங்களை சேர்க்கும் சிட்ரோன்!

இவற்றுடன், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதிக் கொண்ட 10 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரிமோட் லாக்கிங் சிஸ்டம் போன்ற பிரீமியம் அம்சங்களும் சி3-இல் வழங்கப்பட இருக்கின்றன. சிட்ரோன் நிறுவனம் இந்த காரில் 1.2 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் மற்றும் 1.2 லிட்டர் டர்போ சார்ஜட் பெட்ரோல் என இரு விதமான எஞ்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

இன்னும் குறைகள் இருந்தா இப்பவே சொல்லிடுங்க! கஸ்டமர்களின் திருப்திக்காக மலிவு விலை காரில் கூடுதல் அம்சங்களை சேர்க்கும் சிட்ரோன்!

இவற்றுடன், 5 ஸ்பீடு மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வும் வழங்கப்படுகிறது. ஆனால், இதில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படவில்லை. இந்த அம்சமும் 2023 சிட்ரோன் சி3-இல் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் இந்த அம்சம் இல்லாததையும் மக்கள் குறையாகவே பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இன்னும் குறைகள் இருந்தா இப்பவே சொல்லிடுங்க! கஸ்டமர்களின் திருப்திக்காக மலிவு விலை காரில் கூடுதல் அம்சங்களை சேர்க்கும் சிட்ரோன்!

சிட்ரோன் சி3 ரூ. 5.88 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த கார் இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் டாடா பஞ்ச், நிஸான் மேக்னைட், மாருதி சுஸுகி பலினோ மற்றும் டொயோட்டா கிளான்ஸா ஆகிய பிரீமியம் ஹேட்ச்பேக் ரக கார்களுக்கு போட்டியாக விற்பனையில் இருக்கின்றது. இவற்றிற்கு ஏற்படுத்தி வரும் போட்டியை இரட்டிப்பாக்கும் வகையிலும் சி3-யை அப்கிரேட் செய்யும் பணியில் சிட்ரோன் களமிறங்கியிருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #சிட்ரோன் #citroen
English summary
Citroen loading more features in c3
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X