எல்லாம் கன்ஃபார்ம் ஆகிடுச்சு... சிட்ரோன் சி3 எலெக்ட்ரிக் கார் இன்னும் 6 மாசத்துல ரெடியாகிடும்.. விலை எவ்வளவு?

சிட்ரோன் சிறுவனம் தனது சி3 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. டாடா, மஹிந்திரா நிறுவனங்களுக்கு போட்டியாக சிட்ரோன் நிறுவனமும் களமிறங்க திட்டமிட்டுள்ளது. இது குறித்த முழு விபரங்களை காணலாம் வாருங்கள்.

எல்லாம் கன்ஃபார்ம் ஆகிடுச்சு . . . சிட்ரோன் சி3 எலெக்ட்ரிக் கார் இன்னும் 6 மாசத்துல ரெடியாகிடும் . . . விலை எவ்வளவு தெரியுமா . . .

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது டியாகோ காரில் எலெக்ட்ரிக் வெர்ஷனை அறிமுகப்படுத்தப்போவதை உறுதி படுத்தியுள்ளது. இந்த கார் ஏற்கனவே அந்நிறுவனத்தில் எலெக்ட்ரிக் கார் லைன் அப்களான டிகோர் இவி, நெக்ஸான் இவி ஆகிய கார்களில் இந்த காரும் வருகிறது. இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் மார்கெட்டை இதுவரை டாடாவும் மஹிந்திராவும் மட்டுமே குறித்து வைத்துள்ளனர். இந்த பட்டியலில் புதிதாக தற்போது சிட்ரோன் நிறுவனமும் இறங்கியுள்ளது.

எல்லாம் கன்ஃபார்ம் ஆகிடுச்சு . . . சிட்ரோன் சி3 எலெக்ட்ரிக் கார் இன்னும் 6 மாசத்துல ரெடியாகிடும் . . . விலை எவ்வளவு தெரியுமா . . .

சிட்ரோன் நிறுவனம் தனது சி3 ஹேட்ச்பேக் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை 2023ம் ஆண்டு முதல் 3 மாதத்திற்குள் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாவிட்டாலும் அரசல் புரசலாக இந்த செய்தி கசிந்துள்ளது. இதனால் அடுத்த ஆண்டு எலெக்ட்ரிக் கார் விற்பனையில் பலத்த போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லாம் கன்ஃபார்ம் ஆகிடுச்சு . . . சிட்ரோன் சி3 எலெக்ட்ரிக் கார் இன்னும் 6 மாசத்துல ரெடியாகிடும் . . . விலை எவ்வளவு தெரியுமா . . .

சிட்ரோன் நிறுவனம் தனது சி3 காரில் தற்போது பெட்ரோல் வெர்ஷனை மட்டுமே வெளியிட்டுள்ளது. இந்த கார் 1.2 லிட்டர் 3 சிலிண்டர் நேச்சுரலி அஸ்பயர்டு இன்ஜின் மற்றும் 1.2 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ சார்ஜ்டு ஆகிய 2 வெர்ஷன்கள் உள்ளன. இதில் நேச்சுரல் அஸ்பயர்டு இன்ஜின் 82 பிஎஸ் பவரையும், டர்போ சார்ஜ்டு இன்ஜின் 110 பிஎஸ் பவரையும் வெளிப்படுத்தும். இந்த இரண்டு இன்ஜின்களும் மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

எல்லாம் கன்ஃபார்ம் ஆகிடுச்சு . . . சிட்ரோன் சி3 எலெக்ட்ரிக் கார் இன்னும் 6 மாசத்துல ரெடியாகிடும் . . . விலை எவ்வளவு தெரியுமா . . .

இந்த கார் எஸ்யூவி கார் போல டிசைன் செய்யப்பட்டுள்ளது. இப்படியாக எஸ்யூவி போல டிசைன் செய்யப்பட்ட ஹேட்ச்பேக் கார்களுக்கு சமீபகாலமாக மார்கெட்டில் நல்ல மவுசு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் இந்த காரை சிட்ரோன் நிறுவனம் எலெக்ட்ரிக் காராக மாற்ற முடிவு செய்துள்ளது. இந்நிறுவனம் இந்தியாவில் ஏ5 ஏர் கிராஸ் என்ற முழு எஸ்யூவி காரையும் விற்பனை செய்து வருகிறது.

எல்லாம் கன்ஃபார்ம் ஆகிடுச்சு . . . சிட்ரோன் சி3 எலெக்ட்ரிக் கார் இன்னும் 6 மாசத்துல ரெடியாகிடும் . . . விலை எவ்வளவு தெரியுமா . . .

சிட்ரோன் சி3 எலெக்ட்ரிக் கார் குறித்த அதிகமான தகவல்கள் எல்லாம் இன்னும் வரவில்லை. இந்த கார் தற்போது உள்ள பெட்ரோல் காரில் இன்ஜினை மட்டும் மாற்றி எலெக்டரிக் மோட்டார் உடன் முன்பக்க வீல் டிரைவ் உடன் மார்கெட்டிற்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்கெட்டில் உள்ள போட்டியை பார்க்கும் போது இந்த கார் முழு சார்ஜில் 200-250 கி.மீ வரை பயணிக்கும் திறன் கெண்டதாக வடிவமைக்கப்படாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லாம் கன்ஃபார்ம் ஆகிடுச்சு . . . சிட்ரோன் சி3 எலெக்ட்ரிக் கார் இன்னும் 6 மாசத்துல ரெடியாகிடும் . . . விலை எவ்வளவு தெரியுமா . . .

டாடா நிறுவனம் டியாகோ காரை சிட்ரோனிற்கு முன்னேரே விற்பனைக்கு கொண்டு வரும்பட்சத்தில் சிட்ரோன் நிறுவனத்திற்கு தனது காரை மார்கெட் செய்ய சுலபமாக இருக்கும். டாடா டியாகோ கார் குறித்து மக்கள் ஏற்கனவே அறிந்திருப்பதால் அதற்கு போட்டியாக இந்த கார் களம் இறங்கும். இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் மார்கெட்டில் கொடி கட்டி பறந்து வரும் டாடா, மஹிந்திராவிற்கு போட்டியாக சிட்ரோன் நிறுவனமும் களமிறங்கவுள்ளது.

எல்லாம் கன்ஃபார்ம் ஆகிடுச்சு . . . சிட்ரோன் சி3 எலெக்ட்ரிக் கார் இன்னும் 6 மாசத்துல ரெடியாகிடும் . . . விலை எவ்வளவு தெரியுமா . . .

இந்த சிட்ரோன் சி3 எலெக்ட்ரிக் காரில், பெட்ரோல் காரில் உள்ள முக்கியமான அம்சங்களான 4 பவர் விண்டோ, ஸ்டியரிங் மவுண்டெட் ஆடியோ மற்றும் ப்ளுடூத் கண்ட்ரோல்கள், எலெக்ட்ரிக்கலி அட்ஜெஸ்டெபிள் ரியர் வியூ கண்ணாடிகள், டே டைம் ரன்னிங் எல்இடி, டிஜிட்டல் ஸ்பீடாமீட்டர், 10 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆகிய அம்சங்கள் கட்டாயம் இடம் பெறும் என நம்பலாம்.

எல்லாம் கன்ஃபார்ம் ஆகிடுச்சு . . . சிட்ரோன் சி3 எலெக்ட்ரிக் கார் இன்னும் 6 மாசத்துல ரெடியாகிடும் . . . விலை எவ்வளவு தெரியுமா . . .

இந்த கார் ரூ10-15 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிட்ரோன் சி3 எலெக்ட்ரிக் காரை தவிர சிட்ரோன் நிறுவனம் தனது தயாரிப்புகளை அதிகப்படுத்தவும் முடிவு செய்துளு்ளது. அதன்படி இந்நிறுவனம் ஒரு மிட்-சைஸ் எஸ்யூவி காரை தயாரிக்க முடிவு செய்துள்ளது. இந்த கார் மார்கெட்டில் உள்ள ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக், நிஸான் கிக்ஸ், எம்ஜி அஸ்டர், மாருதி சுஸூக கிராண்ட் விட்டாரா மற்றும் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் ஆகிய கார்களுக்கு போட்டியாக களம் இறங்கும் என எதிர்பார்க்கலாம்.

எல்லாம் கன்ஃபார்ம் ஆகிடுச்சு . . . சிட்ரோன் சி3 எலெக்ட்ரிக் கார் இன்னும் 6 மாசத்துல ரெடியாகிடும் . . . விலை எவ்வளவு தெரியுமா . . .

இந்நிறுவனம் சமீபத்தில்தான் சிட்ரோன் சி5 ஏர்கிராஸ் என்ற காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் முழு சைஸ் எஸ்யூவி காராக தயாரிக்கப்பட்டு விற்பனையாகிறது. இந்த கார் இந்தியாவில் உள்ள அதிக விலை கொண்ட எஸ்யூவி கார்களில் ஒன்றாக உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #சிட்ரோன் #citroen
English summary
Citroen plans to launch ev version of c3
Story first published: Tuesday, September 13, 2022, 10:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X