ரோட்ல வந்தா டிராஃபிக் ஜாம்தான்... 2 மாருதி 800 கார்களை ஒன்றாக இணைத்து மாடிஃபிகேஷன்... சுவாரஸ்ய தகவல்கள்!

2 மாருதி சுஸுகி 800 கார்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு மாடிஃபிகேஷன் செய்யப்பட்டிருப்பது கவனம் ஈர்த்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ரோட்ல வந்தா டிராஃபிக் ஜாம்தான்... 2 மாருதி 800 கார்களை ஒன்றாக இணைத்து மாடிஃபிகேஷன்... சுவாரஸ்ய தகவல்கள்!

கார் உரிமையாளர்கள் பலர் தங்கள் வாகனங்களை மிகவும் வித்தியாசமான முறையில் மாடிஃபிகேஷன் செய்கின்றனர். இதற்கு இந்த சுஸுகி மெக்ரான் (Suzuki Mehran) மிகச்சிறந்த உதாரணம். கேள்விப்படாத காராக இருக்கிறதே என குழப்பம் அடைய வேண்டாம். நமக்கு நன்கு பரிட்சயமான மாருதி 800 (Maruti 800), கார்தான் இது.

இரண்டு சுஸுகி மெக்ரான் கார்களை ஒரே காராக மாற்றியுள்ளனர். இதனால்தான் இந்த மாடிஃபிகேஷன் நமது கவனத்தை ஈர்த்துள்ளது. மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட இந்த சுஸுகி மெக்ரான் கார், ஐக்கிய அரபு அமீரகத்தை (UAE) சேர்ந்த ஹம்தான் பின் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யானுக்கு (Hamdan bin Zayed bin Sultan Al Nahyan) சொந்தமானது ஆகும்.

இவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசியல்வாதி ஆவார். இவர் கார் ஆர்வலர் என்பதையும் இந்நேரம் நீங்கள் யூகித்திருப்பீர்கள். வித்தியாசமான முறையில் மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட இன்னும் பல்வேறு கார்களையும் அவர் வைத்துள்ளார். நாங்கள் ஏற்கனவே கூறியபடி இரண்டு கார்கள் ஒரே காராக மாற்றப்பட்டிருப்பதுதான், இந்த சுஸுகி மெக்ரான் மாடிஃபிகேஷன் கவனம் பெற்றிருப்பதற்கான முக்கிய காரணம்.

ரோட்ல வந்தா டிராஃபிக் ஜாம்தான்... 2 மாருதி 800 கார்களை ஒன்றாக இணைத்து மாடிஃபிகேஷன்... சுவாரஸ்ய தகவல்கள்!

பொதுவாக இரண்டு கார்களை ஒன்றாக இணைப்பதென்றால், ஒன்றன் பின் ஒன்றாக இணைப்பார்கள். இதன் மூலம் காரின் நீளம் அதிகரித்து, லிமோசின் (Limousine) தோற்றம் கிடைக்கும். ஆனால் ஹம்தான் அவ்வாறு செய்யவில்லை. அதற்கு மாறாக இரண்டு கார்களையும் அருகருகே வைத்து அவர் ஒன்று சேர்த்துள்ளார். இதன் மூலம் காரின் அகலம் அதிகரித்துள்ளது.

மேலோட்டமாக பார்த்தால், இது மிகவும் எளிமையான வேலை போல தோன்றும். வெறும் 'வெல்டிங்' வேலையை மட்டுமே செய்திருப்பார்கள் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்த மாடிஃபிகேஷனை செய்வதற்கு அதிகம் சிரமப்பட்டிருப்பார்கள் என்பதுதான் உண்மை. புகைப்படங்களை பார்க்கையில், இணைக்கப்பட்ட பகுதியில் இருந்த டோர்கள் அகற்றப்பட்டிருப்பதை போல் தெரிகிறது.

அதாவது ஒரு காரின் வலது பக்க டோர்களும், மற்றொரு காரின் இடது பக்க டோர்களும் அகற்றப்பட்டிருப்பதை போல் தோற்றமளிக்கிறது. மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட இந்த கார், முன் மற்றும் பின் பகுதியில் கூடுதல் நீளமான பம்பர்களை பெற்றுள்ளது. அத்துடன் முன் பகுதியில் தேன் கூடு வடிவ க்ரில் அமைப்பும், அதன் நடுவில் சுஸுகி லோகோவும் வழங்கப்பட்டுள்ளன.

ரோட்ல வந்தா டிராஃபிக் ஜாம்தான்... 2 மாருதி 800 கார்களை ஒன்றாக இணைத்து மாடிஃபிகேஷன்... சுவாரஸ்ய தகவல்கள்!

இந்த பணிகள் மிகவும் நேர்த்தியாக செய்யப்பட்டுள்ளன. மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட இந்த கார் 4 சக்கரங்களை கொண்டுள்ளது. அதாவது காரின் முக்கியமான ஹார்டுவேரில், மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தெளிவாக சொல்வதென்றால், ஆக்ஸில், சஸ்பென்ஸன், பிரேக் போன்ற பாகங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இங்கே கவனிக்கத்தக்க மற்றொரு மாற்றம் என்னவென்றால், மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட இந்த காரின் இடது பக்கத்தில் மட்டுமே ஸ்டியரிங் வீல் உள்ளது. ஆனால் இரண்டு இன்ஜின்களும் செயல்பாட்டில் உள்ளதா? அல்லது ஒரே ஒரு இன்ஜின் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதா? என்பது உறுதியாக தெரியவில்லை. இதில், இரண்டாவது வழி, அதாவது ஒரே ஒரு இன்ஜின் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருந்தால், மாடிஃபிகேஷன் பணிகள் சற்று எளிமையாக இருந்திருக்கும்.

மறுபக்கம் இரண்டு இன்ஜின்களையும் பயன்படுத்துவது என்பது சிக்கலான காரியம். இந்த மாடிஃபிகேஷன் கார் நமது கவனத்தை ஈர்த்திருந்தாலும், இதற்கு சட்டப்பூர்வமாக அனுமதி உள்ளதா? என்பது உறுதியாக தெரியவில்லை. அத்துடன் இரண்டு கார்களை ஒன்றாக இணைத்திருப்பதன் மூலம் அகலம் இரட்டிப்பாகியிருக்கும்.

ரோட்ல வந்தா டிராஃபிக் ஜாம்தான்... 2 மாருதி 800 கார்களை ஒன்றாக இணைத்து மாடிஃபிகேஷன்... சுவாரஸ்ய தகவல்கள்!

இதன் காரணமாக சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம். குறிப்பாக குறுகிய சாலைகளில் இந்த காரில் பயணிப்பது மிகவும் கடினமான காரியமாக இருக்கும். எனினும் ரோடு ஷோக்கள் போன்ற நிகழ்ச்சிகளில் மட்டும் பயன்படுத்தி கொள்வதற்கு, இந்த காருக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இதுபோன்ற சிறப்பு அனுமதிகள் பல்வேறு நாடுகளில் வழங்கப்படுகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Crazy modification 2 maruti suzuki 800 cars joined side by side
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X