லட்சகணக்குல காசு கொடுத்து காரை வாங்கிட்டு சாப்பிடாமல் பட்டினி கிடக்கும் மக்கள்... ஏன் தெரியுமா?

கார் ஓனர்கள் தங்கள் கார்களில் ஏற்படும் பிரச்சனையை அதன் நிறுவனத்தின் தலைமைக்கு தெரியப்படுத்த ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்த சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை காணலாம் வாருங்கள்.

லட்சகணக்குல காசு கொடுத்து காரை வாங்கிட்டு சாப்பிடாமல் பட்டினி கிடைக்கும் மக்கள் . . . ஏன் தெரியுமா . . .

நம்மில் பலருக்கு வாழ்நாளில் சொந்தமாக ஒரு காராவது வாங்கிவிட வேண்டும் என்பது பெரும் கனவாக இருக்கும். அதற்காக பலர் சிறுக சிறுக பணம் சேமித்து வைத்துக்கொண்டே வருவார்கள். சிலர் கார் வாங்கும் போது தனது வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் செலுத்தி சொந்தமாக கார் வாங்குவார்கள். இப்படியாக சொந்த கார் வாங்கும் போது நாம் பணம் வீணாகிவிடக்கூடாது என்ற கவலை எல்லோருக்கும் இருக்கும்.

லட்சகணக்குல காசு கொடுத்து காரை வாங்கிட்டு சாப்பிடாமல் பட்டினி கிடைக்கும் மக்கள் . . . ஏன் தெரியுமா . . .

இப்படியாக நாம் உழைத்து சம்பாதித்து சிறுக சிறுக சேமித்து வைத்த பணத்தை கார் வாங்குவதாக முடிவு செய்துவிட்டால எந்த காரை வாங்கலாம் என பல ஆய்வுகள் செய்வோம். நாம் வாங்கும் கார், நீண்ட நாட்கள் உழைக்கவேண்டும், அதிக பராமரிப்பு செலவுகளை தரக்கூடாது, நல்ல மைலேஜ் இருக்க வேண்டும். கார் உள்ளே அதிக இட வசதி இருக்க வேண்டும் உள்ளிட்ட பல விஷயங்களை பார்ப்போம்.

லட்சகணக்குல காசு கொடுத்து காரை வாங்கிட்டு சாப்பிடாமல் பட்டினி கிடைக்கும் மக்கள் . . . ஏன் தெரியுமா . . .

இப்படியாக நாம் வாங்கிய கார் ஒருவேளை நாம் எதிர்பார்த்த மாதிரியில்லாமல் அடிக்கடி பழுதாகியோ அல்லது தயாரிப்பு பிரச்சனையால் ஏதாவது பிரச்சனைகள் அடிக்கடி வந்து கொண்டோ இருந்தால் எப்படி இருக்கும் கடுப்பாகிவிடுவோம். பின்னர் கார் வாங்கிய ஷோரூமிற்கே சென்று காரில் உள்ள குறைகளை சரி செய்து தரச்சொல்லி கேட்போம்.

லட்சகணக்குல காசு கொடுத்து காரை வாங்கிட்டு சாப்பிடாமல் பட்டினி கிடைக்கும் மக்கள் . . . ஏன் தெரியுமா . . .

ஆனால் சமீபத்தில் ஒரு குழுவினர் தாங்கள் வாங்கிய காரில் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருப்பதால் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்துள்ளனர் என சொன்னால் நம்ப முடிகிறதா? உண்மையிலேயே இப்படி ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. கார் ஓனர்கள் சிலர் ஒன்று சேர்ந்து தாங்கள் கார் வாங்கிய நிறுவனத்திற்கு தாங்கள் வாங்கிய கார்களின் குறைகளை தெரியப்படுத்த உண்ணாவிரதம் இருந்துள்ளனர்.

லட்சகணக்குல காசு கொடுத்து காரை வாங்கிட்டு சாப்பிடாமல் பட்டினி கிடைக்கும் மக்கள் . . . ஏன் தெரியுமா . . .

நார்வே நாட்டைச் சேர்ந்த டெஸ்லா கார்களின் உரிமையார்கள் குழு தான் இந்த கூத்தை நடத்தியுள்ளது. அந்நாட்டில் டெஸ்லா நிறுவனம் ஏராளமான கார்களை விற்பனை செய்துள்ளது. பொதுவாக கார்களை ஒரு நாட்டிற்கு விற்பனை செய்யும் போது அந்த கார் அந்நாட்டின் கண்டிஷன்களுக்கு ஏற்றவாறு இருக்கிறதா என பல சோதனை நடத்தப்படும். அப்படி நடத்தப்பட்டு தான் டெஸ்லா காரும் அந்நாட்டில் விற்பனைக்கு வந்திருக்கும்.

லட்சகணக்குல காசு கொடுத்து காரை வாங்கிட்டு சாப்பிடாமல் பட்டினி கிடைக்கும் மக்கள் . . . ஏன் தெரியுமா . . .

ஆனால் அந்த நாட்டில் உள்ள மக்கள் டெஸ்லா கார்களில் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்துள்ளனர். சிலருக்கு தங்கள் கார்களில் சார்ஜ் போடுவதில் சிக்கல் வந்துள்ளது. சார்ஜ் ஏறாமல் இருந்துள்ளது. சிலருக்கு சார்ஜ் விரைவாக குறைந்துள்ளது. சிலருக்கு புதிய சார்ஜிங் ஸ்டேஷன்களில் உள்ள பின்கள் பழைய கார்களுக்கு பொருந்தாமல் இருந்துள்ளது.

லட்சகணக்குல காசு கொடுத்து காரை வாங்கிட்டு சாப்பிடாமல் பட்டினி கிடைக்கும் மக்கள் . . . ஏன் தெரியுமா . . .

சிலருக்கு அந்நாட்டின் கூடான நாட்களில் டெஸ்லா கார் ஸ்டார்ட் ஆவதேயில்லை. சிலருக்கு டோர் திறக்கவில்லை. சிலருக்கு காரின் உள்ளே சீட்களில் தண்ணீர் சொட்டு ஏற்படுகிறது. சிலருக்கு இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்கிரீனின் ஓரங்களில் மஞ்சள் நிறத்தில் ஏதோ தெரிகிறது. பூட்களில் எல்லாம் தண்ணீர் நிறந்து நிற்கிறது என பலருக்கு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.

லட்சகணக்குல காசு கொடுத்து காரை வாங்கிட்டு சாப்பிடாமல் பட்டினி கிடைக்கும் மக்கள் . . . ஏன் தெரியுமா . . .

இது குறித்து கார் உரிமையாளர்கள் டெஸ்லா சர்வீஸ் சென்டருக்கு கார்களை கொண்டு சென்ற போது அவர்கள் மேற்கண்ட பிரச்சனைகளுக்கு எல்லாம் சரியாக தீர்வு சொல்லாமல் இருந்துள்ளனர். இதனால் இந்த பிரச்சனைகளுடனேயே இந்த கார் ஓனர்கள் கார்களை பயன்படுத்தவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

லட்சகணக்குல காசு கொடுத்து காரை வாங்கிட்டு சாப்பிடாமல் பட்டினி கிடைக்கும் மக்கள் . . . ஏன் தெரியுமா . . .

இந்த பிரச்சனைகளை பற்றி அறிந்த எர்லென்ட் மோர்க் என்பவர் சமீபத்தில் இந்த பிரச்சனைகளை டெஸ்லா நிறுவனத்திற்கும் அதன் உரிமையாளர் எலான் மஸ்க்கிற்கும் தெரிய வைக்க டெஸ்லா கார் உரிமையாளர்களை ஒரு நாள் உண்ணா விரதத்திற்காக அழைத்தார். அதன் பேரில் உண்ணாவிரதம் கடந்த ஆகஸ்ட் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மொத்தம் 24 மணி நேரம் நடந்துள்ளது.

லட்சகணக்குல காசு கொடுத்து காரை வாங்கிட்டு சாப்பிடாமல் பட்டினி கிடைக்கும் மக்கள் . . . ஏன் தெரியுமா . . .

இதில் டெஸ்லா உரிமையாளர்கள் சாப்பிடாமல் உண்ணாவிரதமர் இருந்தனர். இது குறித்து அவர்கள் கூறும் போது "நார்வேயில் உள்ள டெஸ்லா கார்கள் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இதை சர்வீஸ் சென்டருக்கு கொண்டு சென்றால் எங்களால் தீர்வு காண முடியவில்லை. இது குறித்து டெஸ்லா நிறுவனத்தின் பொறுப்பாளர்களையும் சந்திக்க முடியவில்லை.

லட்சகணக்குல காசு கொடுத்து காரை வாங்கிட்டு சாப்பிடாமல் பட்டினி கிடைக்கும் மக்கள் . . . ஏன் தெரியுமா . . .

இந்த பிரச்சனைகளை டெஸ்லா நிறுவனத்திற்கு தெரியப்படுத்தவே இந்த உண்ணாவரதத்தை செய்து வருகிறோம். டெஸ்லா உரிமையார் எலான் மஸ்கிற்கு இந்த விஷயம் தெரிந்தால் அவர் எளிதாக இந்த பிரச்சனைகளை சரி செய்து விடுவார். அவருக்கு விஷயத்தை கொண்டு செல்லவே இதை செய்து வருகிறோம்" என கூறுகின்றனர். இது குறித்த உங்கள் கருத்து என்ன கமெண்டில் சொல்லுங்கள்

Most Read Articles
English summary
Disstatisfied norwegian tesla owner goes on hunger strike for troubles in their car
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X